எண்ணெய் மிதக்கும் தக்காளி கெட்டி குழம்பு… ஒருமுறை இதை செய்து பாருங்கள் திரும்பத் திரும்ப செய்வீர்கள்!

தக்காளி கெட்டி குழம்பு ஒரு சுவையான குழம்பு வகையாகும். இதில் நன்கு பழுத்த தக்காளிகளை பயன்படுத்தி மசாலாக்களை அப்பொழுதே அரைத்து பயன்படுத்துகிறோம். இந்த தக்காளி கெட்டி குழம்பு சுவை நிறைந்ததாகவும் வழக்கமான குழம்பு வகைகளை விட சற்று வித்தியாசமானதாகவும் இருக்கும். பாரம்பரியமான இந்த குழம்பை ஒரு முறை சாப்பிட்டு பார்த்தால் அனைவரையும் மீண்டும் மீண்டும் சாப்பிடத் தூண்டும்‌ வகையில் இதன் சுவை அமைந்திருக்கும். இப்பொழுது இந்த தக்காளி கெட்டி குழம்பை எப்படி செய்யலாம் என்பதை பார்ப்போம்.

தக்காளி இல்லாத அருமையான மிளகு கெட்டி குழம்பு…! இதை செய்து பாருங்க ஒரு பருக்கை கூட மிச்சம் வைக்க மாட்டீங்க…

தக்காளி கெட்டி குழம்பு செய்ய முதலில் மசாலாக்களை அரைத்துக் கொள்ள வேண்டும். இதற்கு ஒரு வாணலியில் இரண்டு ஸ்பூன் எண்ணெயை காய வைத்துக் கொள்ள வேண்டும். எண்ணெய் காய்ந்ததும் இரண்டு ஸ்பூன் சோம்பு, ஒரு ஸ்பூன் சீரகம், ஒரு சிறிய பட்டை துண்டு, ஒரு மேசை கரண்டி பொட்டுக்கடலை, 15 வர மிளகாய் ஆகியவற்றை சேர்த்து நன்கு வதக்கிக் கொள்ள வேண்டும். இவை வதங்கி கொண்டிருக்கும் பொழுதே பத்து பல் பூண்டு, ஒரு துண்டு இஞ்சி, ஒரு பெரிய மூடி தேங்காய் துருவல் ஆகியவற்றை சேர்த்து கிளறி விடவும். இதனுடன் 15 முந்திரிப் பருப்பையும் சேர்த்து வறுத்துக் கொள்ள வேண்டும். இவை அனைத்தையும் வறுத்து ஆறவிட வேண்டும். அனைத்தும் வறுப்பட்டு ஆறிய பின்பு எல்லாவற்றையும் ஒரு மிக்ஸி ஜாரில் போட்டு நன்கு அரைத்துக் கொள்ள வேண்டும்.

இப்பொழுது ஒரு கடாயில் 4 மேசைக்கரண்டி எண்ணெய் சேர்த்து ஒரு பட்டை துண்டு, ஒரு பிரிஞ்சி இலை, இரண்டு கிராம்பு, அரை ஸ்பூன் சோம்பு, சிறிது கறிவேப்பிலை ஆகியவற்றை சேர்த்து தாளித்துக் கொள்ள வேண்டும். தாளித்த பின்பு 150 கிராம் அளவு உரித்த பூண்டினை இரண்டாக நறுக்கி இதனுடன் சேர்த்து வதக்க வேண்டும். 200 கிராம் அளவு சின்ன வெங்காயத்தையும் தோல் உரித்து இதனுடன் சேர்த்து நன்கு வதக்கவும். நன்கு பழுத்த தக்காளிகள் பெரிதாக பார்த்து மூன்று தக்காளியை நறுக்கி இதனுடன் சேர்த்து வதக்க வேண்டும். இப்பொழுது ஏற்கனவே நாம் அரைத்து வைத்திருக்கும் மசாலாக்களை சேர்த்து பச்சை வாசனை போகும் வரை நன்றாக வதக்க வேண்டும். குறைவான தீயில் வைத்து தேவையான அளவு உப்பு சேர்த்து நன்கு வதக்கவும். குழம்பு கொதித்து எண்ணெய் பிரிந்து வரும் வரை நன்றாக வதக்கி சிறிதளவு தண்ணீர் சேர்த்து கொதிக்க விடலாம். தண்ணீர் சேர்த்து கொதித்து கெட்டியாக வரும் பொழுது இறக்கி விடவும்.

கமகமக்கும் முருங்கைக்காய் சாம்பார்…! முருங்கைக்காய் சாம்பார் செய்வது எப்படி சுலபமா?

கெட்டியான இந்த குழம்பினை துவையல் போல மிக சிறிதளவு குழம்பில் போட்டு சாப்பிடலாம் மிக சுவையாக இருக்கும். சப்பாத்தி, இட்லி, தோசை என டிபன் வகைகளுக்கு தொட்டு சாப்பிடவும் நன்றாக இருக்கும்.

அவ்வளவுதான் சுவையான கெட்டியான தக்காளி குழம்பு தயார்!