அனைத்து சளி தொந்தரவுகளையும் துரத்தி அடிக்கும் தூதுவளையை வைத்து சூப்பரான காலை நேர டிபன்! தூதுவளை அடை!!!

உணவே மருந்தாக பயன்படும் தாவர வகைகளில் தூதுவளையும் ஒன்று. சிங்கவல்லி, அளர்க்கம், அளருகம், தூதுணை, தூதுவளை, தூது வேளை என பல பெயர்களை உடையது இந்த தூதுவளை. இந்தத் தூதுவளை கொடி வகையைச் சேர்ந்த மூலிகை ஆகும். சளி, சுரம், இருமல், தொண்டை வலி போன்ற அனைத்து தொந்தரவுகளையும் விரட்டி அடிக்க கூடியது இந்த தூதுவளை. காசநோய் உள்ளவர்கள் தூதுவளையை சாப்பிட காசநோய் குணமாகும். ஆஸ்துமா பிரச்சனை உள்ளவர்களும் இந்த தூதுவளையை அடிக்கடி உணவில் சேர்த்துக் கொள்ளுதல் நலம்.

வல்லமை தரும் வல்லாரைக் கீரையில் இப்படி துவையல் அரைத்துப் பாருங்கள்…! குழந்தைகள் கூட சாப்பிடுவார்கள்!

இந்த தூதுவளை முட்கள் நிறைந்து இருக்கக்கூடிய மூலிகை. இதனை வைத்து ஏராளமான ரெசிபிக்கள் செய்யலாம் அவை அனைத்துமே சுவையாக இருப்பதோடு, பல்வேறு தொந்தரவுகளை சரி செய்யக்கூடிய விதமாக இருக்கும். இந்த தூதுவளையை வைத்து செய்யக்கூடிய காலை நேர டிபனான தூதுவளை அடை எப்படி செய்யலாம் என்பதை பார்ப்போம்.

தூதுவளை அடை செய்யும் முறை:

ஒரு டம்ளர் புழுங்கல் அரிசி மற்றும் மூன்று ஸ்பூன் கடலைப்பருப்பை கழுவி ‌ஊறவைத்து கொள்ள வேண்டும். இது இரண்டு மணி நேரமாவது ஊற வேண்டும்.

இரண்டு கைப்பிடி அளவு வரும் அளவிற்கு தூதுவளையை ஆய்ந்து சுத்தம் செய்து கொள்ள வேண்டும். இப்பொழுது ஊற வைத்த அரிசி மற்றும் கடலை பருப்புடன் ஒரு ஸ்பூன் சீரகம், ஒரு ஸ்பூன் மிளகு, 10 பூண்டு பல் ஆகியவற்றை சேர்த்து அரைத்துக் கொள்ள வேண்டும். பின் ஆய்ந்து வைத்த தூதுவளையையும் அரைத்து எடுத்துக் கொள்ள வேண்டும். இரண்டையும் ஒன்றாய் கலந்து பத்து சின்ன வெங்காயத்தை பொடியாக நறுக்கி இதனோடு சேர்த்துக் கொள்ளவும். தேவையான அளவு உப்பு போட்டு பிசைந்து கொள்ளவும்.

இந்த மாவினை தோசை கல்லை சுடவைத்து சிறிதளவு நெய் தடவி அடையாகத் தட்டி வேக வைக்கவும். குறைந்த தீயில் நீண்ட நேரம் திருப்பிப் போட்டு வேக வைத்தால் நன்றாக இருக்கும்.

அற்புதங்கள் செய்யும் அகத்திக்கீரை சூப்… வாரம் ஒரு முறை இப்படி செய்து சாப்பிட மறக்காதீர்கள்!

இதை சற்று அதிக தண்ணீர் சேர்த்து தோசை போலவும் ஊற்றிக் கொள்ளலாம்.

அவ்வளவுதான் சுவையான தூதுவளை அடை அல்லது தூதுவளை தோசை தயார்!!!

Exit mobile version