சத்தான தினை அரிசி வைத்து சுவையான தினை அரிசி காளான் பொங்கல் இப்படி செய்து அசத்துங்க!

உடலை உறுதியாக வைத்துக் கொள்ளவும் நோயின்றி வாழவும் சிறுதானிய உணவுகளை அதிகம் சேர்த்துக் கொண்டால் நல்லது. நமது முன்னோர்கள் தங்களுடைய உணவில் சிறுதானிய உணவுகளை அதிகம் சேர்த்துக் கொண்டதால் தான் அவர்கள் ஆரோக்கியமாக வாழ்ந்து வந்தார்கள். இப்பொழுது சிறுதானிய உணவின் நன்மைகளை அறிந்து பலரும் அதனை மீண்டும் உணவில் சேர்த்துக் கொள்ள ஆரம்பித்துள்ளார்கள்.

இந்த சிறுதானியங்களில் ஒன்றான தினை அரிசி வைத்து நாம் பலவிதமான ரெசிபிகளை செய்ய முடியும். அதில் சுவையான அதே சமயம் சத்துக்கள் நிறைந்த ஒரு ரெசிபி தான் தினை அரிசி காளான் பிரியாணி. இந்த தினை காளான் பிரியாணி குழந்தைகளிலிருந்து பெரியவர் வரை அனைவரும் விரும்பி சாப்பிடும் வகையில் சுவையாக இருக்கும். இதனை குழந்தைக்கு லஞ்ச் பாக்ஸ் ரெசிபி ஆகவும் கொடுத்து விடலாம். வாருங்கள் இந்த தினை காளான் பிரியாணி எப்படி செய்யலாம் என்று பார்க்கலாம்.

சத்துக்கள் நிறைந்த தினை வைத்து அருமையான தினை தோசை…!

தினை காளான் பிரியாணி செய்வதற்கு இரண்டு கப் அளவு தினை அரிசியை எடுத்து அதனை மூன்றில் இருந்து நான்கு முறை நன்றாக அலசிக்கொள்ள வேண்டும். தினை அரிசியை அலசிய பிறகு நல்ல தண்ணீர் ஊற்றி இதனை ஒரு மணி நேரம் ஊற விட வேண்டும். இதற்கு 200 கிராம் அளவு காளானை எடுத்து நன்றாக தண்ணீரில் கழுவி சுத்தம் செய்து துண்டுகளாக நறுக்கி எடுத்துக் கொள்ள வேண்டும்.

குக்கரில் இரண்டு ஸ்பூன் அளவு நெய், இரண்டு ஸ்பூன் அளவு எண்ணெய் சேர்த்துக் கொள்ள வேண்டும். எண்ணெய் சூடானதும் இரண்டு ஏலக்காய், நான்கு கிராம்பு, இரண்டு துண்டு பட்டை, இரண்டு மராத்தி மொக்கு, இரண்டு அனாசி பூ, கடல்பாசி ஆகியவற்றை சேர்த்துக் கொள்ள வேண்டும். நாம் சேர்த்த பொருட்கள் அனைத்தும் நன்றாக பொரிந்ததும் நடுத்தர அளவிலான மூன்று பெரிய வெங்காயத்தை நீளவாக்கில் நறுக்கி அதை சேர்த்துக் கொள்ள வேண்டும்.

வெங்காயம் பொன்னிறமாகும் வரை வதக்கி விட வேண்டும். வெங்காயம் ஓரளவு வதங்கும் பொழுதே அதனுடன் இரண்டு ஸ்பூன் இஞ்சி பூண்டு விழுதையும் சேர்த்து வதக்கி விட வேண்டும். வெங்காயம் நன்கு வதங்கிய பிறகு ஒரு பழுத்த பெரிய தக்காளியை பொடியாக நறுக்கி அதையும் சேர்த்துக் கொள்ள வேண்டும். தக்காளி வதங்கும் பொழுதே தேவையான அளவு கல் உப்பை சேர்த்துக் கொள்ளலாம். அப்பொழுது தக்காளி நன்கு வதங்கும்.

இவற்றோடு மூன்று பச்சை மிளகாய் சேர்த்து நன்றாக வதக்கவும். ஒரு கைப்பிடி புதினா, ஒரு கைப்பிடி கொத்தமல்லி தழை ஆகியவற்றையும் சேர்த்து அனைத்தும் முழுமையாக வதங்கும் வரை வதக்கி விடவும். தக்காளி நன்கு வதங்கி மென்மையாக குழைந்து வந்ததும் நாம் மசாலாக்கள் சேர்க்கலாம். ஒரு ஸ்பூன் மிளகாய் தூள், ஒரு ஸ்பூன் மல்லித்தூள், அரை ஸ்பூன் கரம் மசாலா, கால் ஸ்பூன் மஞ்சள் தூள் ஆகியவற்றை சேர்த்து வதக்கி விட வேண்டும்.

மசாலாக்கள் நன்கு வதங்கி பச்சை வாசனை போனதும் இரண்டு ஸ்பூன் அளவு தயிரை சேர்த்து அதையும் நன்றாக வதக்கவும். தயிர் முழுமையாக வதங்கியதும் நறுக்கி வைத்திருக்கும் காளானை சேர்த்து சிறிது நேரம் வதக்கி விட வேண்டும். காளான் நன்கு வதங்கி சுருங்கியதும். இரண்டு கப் அளவு திணை அரிசிக்கு ஆறு கப் அளவு தண்ணீர் சேர்த்துக் கொள்ளவும். இந்த நிலையில் உப்பு சரி பார்த்து சேர்த்துக் கொள்ளலாம்.

தண்ணீர் நன்றாக கொதித்ததும் நாம் அலசி வைத்திருக்கும் திணை அரிசியை சேர்த்து விட வேண்டும். இப்பொழுது குக்கரை மூடி விசில் போட வேண்டிய அவசியம் இல்லை. குக்கரை மூடாமல் நேரடியாகவே வேக விடலாம். அரிசி நன்கு வெந்து தண்ணீர் வற்றிய பிறகு கொஞ்சம் புதினா மற்றும் கொத்தமல்லி தலை தூவி குக்கரை மூடி விசில் போட்டு குறைவான தீயில் வைத்து ஐந்து நிமிடம் தம் வைத்து எடுத்தால் போதும்.

ஆரோக்கியம் நிறைந்த காலை உணவு.. உடலை திடமாக வைத்திருக்க திணை உப்புமா…!

இறுதியாக ஒரு ஸ்பூன் எலுமிச்சை சாறு மற்றும் ஒரு ஸ்பூன் அளவு நெய் ஊற்றி கிளறி இறக்கினால் மணமணக்கும் அட்டகாசமான தினை காளான் பிரியாணி தயாராக இருக்கும். இதனை வெங்காய ரைத்தாவுடன் வைத்து பரிமாறலாம்.