காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில் பிரசாதமாக வழங்கப்படும் காஞ்சிபுரம் இட்லி மிகவும் பிரசித்தி பெற்ற ஒன்று. வழக்கமாக காலை உணவுக்கு அனைவரும் இட்லி சாப்பிடுவதையே விரும்புவார்கள். அந்த இட்லியிலும் கூட பல வகைகள் உண்டு. அவற்றில் மிகவும் பிரசித்தி பெற்றது காஞ்சிபுரம் இட்லி. இந்த காஞ்சிபுரம் இட்லியை வீட்டிலேயே நாம் செய்தால் குழந்தைகள் முதல் பெரியவர் வரை அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள். காரணம் இதன் சுவை அத்தனை சிறப்பாக இருக்கும். கோவிலில் பிரசாதமாக வழங்கும் இந்த காஞ்சிபுரம் இட்லியை வீட்டிலேயே எப்படி செய்யலாம் என்பதை பார்ப்போம்.
காஞ்சிபுரம் இட்லி செய்வதற்கு இரண்டு கப் அளவு பச்சரிசி மற்றும் ஒரு கப் புழுங்கல் அரிசி இரண்டையும் சுத்தம் செய்து மெஷினில் கொடுத்து ரவை போல் உடைத்து வாங்கிக் கொள்ள வேண்டும். அரிசி ரவையில் செய்தால் தான் இந்த இட்லி சுவையாக இருக்கும்.
கோவில் பிரசாதம் சுவையில் சூப்பரான தயிர் சாதம்! வீட்டில் செய்து அசத்துங்கள்…
இப்பொழுது ஒரு கப் உளுத்தம் பருப்பை ஒரு மணி நேரம் ஊற வைக்க வேண்டும். உளுந்து ஒரு மணி நேரம் ஊறிய பிறகு கிரைண்டரில் சேர்த்து மாவாக அரைத்து எடுத்துக் கொள்ளவும். உடைத்து வைத்திருக்கும் அரிசி மாவையும் கொஞ்சம் தண்ணீர் ஊற்றி 20 நிமிடங்கள் ஊற வைக்க வேண்டும். இப்பொழுது ஆட்டி வைத்திருக்கும் உளுந்து மாவுடன் ஊறிய அரிசி மாவையும் கலந்து கரைத்து கொள்ளவும்.
தேவையான அளவு உப்பு சேர்த்து கரைக்கவும் இதனை குறைந்தது 6 மணி நேரம் புளிக்க வைக்க வேண்டும். அல்லது முதல் நாள் இரவு ஊற வைத்து மறுநாள் காலை ஊற்றலாம். ஆறு மணி நேரம் கழித்து ஒரு ஸ்பூன் மிளகு மற்றும் ஒரு ஸ்பூன் சீரகம் இவற்றை உரலில் ஒன்றிரண்டாக உடைத்து எடுத்துக் கொள்ள வேண்டும். இவற்றுடன் ஒரு ஸ்பூன் சுக்கு பொடியையும் எடுத்துக் கொள்ளவும். இவை மூன்றையும் மாவில் சேர்த்து கலந்து கொள்ள வேண்டும். இப்பொழுது நாம் வழக்கமாக இட்லி ஊற்றுவது போல இந்த மாவில் இட்லி ஊற்றி எடுத்துக் கொள்ளலாம்.
அவ்வளவுதான் கோவில் சுவையில் காஞ்சிபுரம் இட்லி தயாராகி விட்டது!