குழந்தைகளுக்கு சத்தான சுவையான மாலை நேர ஸ்நாக்ஸ் ரெசிபி…! இனிப்பு தோசை!

பள்ளி முடிந்து வீட்டிற்கு வரும் குழந்தைகளுக்கு ஏதாவது வித்தியாசமான ஸ்நாக்ஸ் செய்ய வேண்டும் என்று அனைவரும் நினைப்பது உண்டு. பசியுடன் வரும் குழந்தைகள் சத்தானதாக ஏதாவது செய்து கொடுத்தாலும் அது சுவையாக இல்லாவிட்டால் சாப்பிட மாட்டார்கள். அதற்காக என்னை உணவுகளும் பாக்கெட்டில் அடைத்து விற்கப்படும் உணவுகளையும் குழந்தைகளுக்கு கொடுப்பது நல்லதல்ல. எனவே சத்து நிறைந்ததாகவும் அதே சமயம் சுவையானதாகவும் அவர்களுக்கு ஸ்னாக்ஸ் செய்து கொடுக்க விரும்பினால் நீங்கள் நிச்சயம் இந்த இனிப்பு தோசையை செய்து கொடுக்கலாம்.

சுவையான மொறு மொறுப்பான காலிபிளவர் பக்கோடா! ஈவினிங் ஸ்நாக்ஸ்க்கு இப்படி செய்யுங்கள்…

இனிப்பு தோசை செய்வதற்கு அரை கப் அளவு கோதுமை மாவு எடுத்துக் கொள்ள வேண்டும். இரண்டு மேசை கரண்டி சத்துமாவு எடுத்து கொள்ள வேண்டும். ஒரு பவுலில் ஒரு வாழைப்பழத்தை நன்கு மசித்து வைக்கவும். மசித்த வாழைப்பழத்துடன் ஒரு முட்டையை நன்கு கலக்கி சேர்த்துக் கொள்ள வேண்டும்.

இதனுடன் மூன்று ஸ்பூன் அளவிற்கு நாட்டுச் சர்க்கரை அல்லது சீனி சேர்த்துக் கொள்ள வேண்டும். இவை அனைத்தையும் ஒரு கரண்டி கொண்டு நன்கு அடித்துக் கொள்ள வேண்டும். இப்பொழுது ஏற்கனவே எடுத்து வைத்திருக்கும் அரை கப் கோதுமை மாவு மற்றும் இரண்டு மேசை கரண்டி சத்து மாவை சலித்து இதனுடன் சேர்த்துக் கொள்ளவும். இரண்டு ஸ்பூன் அளவிற்கு எண்ணெய் அல்லது உருக்கிய வெண்ணையை சேர்த்துக் கொள்ளலாம்.

இப்பொழுது இதனை நன்கு கலக்கவும். காய்ச்சிய பால் அரை கப் அளவு சேர்த்து கொள்ள வேண்டும். இப்பொழுது தண்ணீராக இல்லாமல் கொஞ்சம் கெட்டியாக கரைத்துக் கொள்ளவும்.

இப்பொழுது தோசை கல்லை காயவைத்து சிறிதளவு வெண்ணெய் தடவி கல் காய்ந்ததும் இந்த மாவை நடுவில் மட்டும் சிறிய அளவில் கனமாக ஊற்ற வேண்டும். குறைந்த தீயில் வைத்து மூடி போட்டு வேக வைக்கவும். ஒருபுறம் வெந்ததும் திருப்பி போட்டு வேக வைக்கவும். நன்கு வெந்ததும் இதனை குழந்தைகளுக்கு பரிமாறலாம். இனிப்பு சுவை விரும்புபவர்கள் கொஞ்சமாக தேன் இதன் மேல் சேர்த்தும் பரிமாறலாம்.

இது இன்னும் மிருதுவாக வர வேண்டும் என்று விரும்பினால் சிறிதளவு சோடா உப்பு சேர்த்துக் கொள்ளலாம். வெண்ணிலா எசன்ஸ் இரு துளிகள் சேர்த்தால் இன்னும் நல்ல வாசனையாக வரும்.

வாவ் குழந்தைகளுக்கு சூப்பரான ஈவினிங் ஸ்நாக்ஸ் உருளைக்கிழங்கு சீஸ் பால்ஸ்…!

அவ்வளவுதான் சுவையான மாலை நேர ஸ்னாக்ஸ் இனிப்பு தோசை தயார்…!

Exit mobile version