ஸ்ரீரங்கம் கோவில் பிரசாத சுவையிலேயே தெய்வீக மணம் வீசும் ஷீரான்னம் இப்படி செய்து பாருங்கள்…!

ஷீரான்னம் ஸ்ரீரங்கம் கோவிலில் பக்தர்களுக்கு வழங்கப்படும் சுவை நிறைந்த பிரசாதம் ஆகும். முழுக்க முழுக்க பாலில் அரிசியில் வேகவைத்து செய்யும் இந்த ஷீரான்னம் சுவை அத்தனை அலாதியாக இருக்கும். ஒருமுறை இதை சுவைத்தவர்கள் மீண்டும் சுவைத்துப் பார்க்க வேண்டும் என்று ஆவலை தூண்டும் வகையில் அத்தனை சுவையாக இருக்கும். இந்த ஷீரான்னத்தை நீங்கள் வீட்டிலேயே செய்ய முடியும். வாருங்கள் ஷீரான்னம் எப்படி செய்யலாம் என்பதை பார்க்கலாம்.

இதை செய்வதற்கு ஒரு கப் அளவு பச்சரிசியை எடுத்துக் கொள்ள வேண்டும். இதனை தண்ணீரில் நன்றாக அலசி கொள்ளவும். நல்ல அடி கனமான பாத்திரத்தில் அரை கப் அளவு பாலை சேர்த்துக் கொள்ளவும். முடிந்தவரை பசும்பாலில் செய்தால் கூடுதல் சிறப்பாக இருக்கும். பால் நன்கு கொதித்ததும் நாம் சுத்தம் செய்து வைத்திருக்கும் அரிசியை சேர்த்து நன்கு கிளறி விட வேண்டும். அரிசி பால் முழுவதையும் உறிஞ்சி வெந்து வரும் வரை இதனை நன்கு கிளறி விட வேண்டும். பால் பொங்கி ஓரங்களில் படியும் ஏட்டை அவ்வபோது கரண்டி கொண்டு எடுத்து விட வேண்டும்.

மார்கழி மாத ஸ்பெஷல் அசத்தலான அக்காரவடிசல் இப்படி செய்து பாருங்கள்…!

அரிசி நன்கு வெந்து குழைந்ததும் இதில் நான்கு கப் அளவு சர்க்கரையை சேர்க்க வேண்டும். சர்க்கரைக்கு பதிலாக வெல்லம் சேர்க்க வேண்டும் என்று நினைத்தால் மூன்று கப் அளவு வெல்லத்தில் ஒரு கப் தண்ணீர் ஊற்றி அடுப்பில் வைத்து நன்கு கரைத்துக் கொள்ள வேண்டும். இந்த வெல்ல தண்ணீர் நன்கு ஆறிய பிறகு பாலில் சேர்க்கவும். வெல்லத்தை சூடாக பாலில் சேர்த்தால் திரிந்து விடும். சர்க்கரை சேர்த்த பிறகு அரிசி கொஞ்சம் இளகி இருக்கும் இந்த நிலையில் முக்கால் கப் அளவு நெய் சேர்த்துக் கொள்ள வேண்டும். இதில் ஒரு ஸ்பூன் ஏலக்காய் தூள் சேர்த்து இறுகி வரும் வரை நன்கு கிளறி விடவும்.

தனியாக ஒரு சிறிய கடாயில் இரண்டு ஸ்பூன் அளவிற்கு நெய் சேர்க்க வேண்டும். நெய் உருகி சூடானதும் இதில் உங்களுக்கு விருப்பமான அளவு முந்திரி, பாதாம் ஆகியவற்றை சேர்க்கவும். முந்திரியும் பாதாமும் பொன்னிறமாக வறுபட்டவுடன் உலர் திராட்சைகளை சேர்த்து உப்பி வரும் வரை வறுத்துக் கொள்ளவும். பிறகு இதனை நாம் செய்து வைத்திருக்கும் பொங்கலில் சேர்த்து நன்கு கிளறி சூடாக பரிமாறலாம். அவ்வளவுதான் கோவிலில் கிடைக்கும் சுவையிலேயே அட்டகாசமான ஷீரான்னம் தயாராகி விட்டது.