சுலபமா செய்யலாம் சுவையான சோயா கட்லெட் மாலை நேர ஸ்நாக்ஸுக்கு ஏற்ற ரெசிபி…!

சோயா சங்க் அல்லது மீல்மேக்கர் வைத்து நாம் ஏராளமான ரெசிபியை செய்ய முடியும். இந்த சோயா வைத்து செய்யும் ரெசிபிக்கள் அனைத்தும் அசைவ உணவுக்கு இணையான சுவையில் அட்டகாசமாக இருக்கும். மேலும் உடலுக்கு தேவையான சில சத்துக்களும் நிறைந்துள்ளது. இந்த சோயா வைத்து கிரேவி, மசாலா என பல ரெசிபிகளை செய்யலாம். அதுபோல மாலை நேர ஸ்நாக்ஸுக்கு ஏற்ற ஒரு அட்டகாசமான ரெசிபி தான் சோயா கட்லட். வாருங்கள் இந்த சோயா கட்லெட் எப்படி செய்யலாம் என்பதை பார்க்கலாம்.

சோயா கட்லட் செய்வதற்கு முதலில் ஒரு கப் அளவிற்கு சோயா சங்க் எடுத்துக் கொள்ள வேண்டும். இதனை இரண்டு கப் அளவு வெந்நீர் ஊற்றி சிறிது நேரம் மூடி போட்டு அப்படியே வைத்து விட வேண்டும். வெந்நீரில் சோயா நன்கு ஊறிவிடும். அதன் பிறகு அதில் உள்ள தண்ணீரை வடித்து தனியாக எடுத்துக் கொள்ள வேண்டும்.

வாவ்…! மாலை நேர காபி அல்லது டீயுடன் சூடாக சாப்பிட சூப்பரான ஸ்னாக்ஸ்.. பன்னீர் கட்லட்!

தண்ணீரை வடித்து எடுத்த சோயாவை இப்பொழுது ஒரு மிக்ஸி ஜாரில் சேர்த்து அரைத்து எடுத்துக் கொள்ளவும். இதனை ஒரு பவுலில் சேர்க்க வேண்டும். பிறகு மிக்ஸியில் ஆறு பிரட் துண்டுகளை சேர்த்து அதையும் அரைத்துக் கொள்ள வேண்டும். அரைத்த பிரட்டை சோயா உடன் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

இப்பொழுது இந்த பவுலில் ஒரு ஸ்பூன் அளவிற்கு இஞ்சி பூண்டு விழுது, ஒரு ஸ்பூன் மல்லித்தூள், அரை ஸ்பூன் மிளகாய்த்தூள், கால் ஸ்பூன் மஞ்சள் தூள், ஒரு ஸ்பூன் கரம் மசாலா, அரை ஸ்பூன் சிக்கன் மசாலா மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்துக் கொள்ளவும்.

வாவ்…! சூப்பரான சிக்கன் கட்லெட்…. சிக்கன் எடுத்தால் இந்த சிக்கன் கட்லெட் ஒரு முறை செய்து பாருங்கள்…!

இதில் பொடியாக நறுக்கிய ஒரு பெரிய வெங்காயம், பொடியாக நறுக்கிய ஒரு பச்சை மிளகாய் மற்றும் நறுக்கிய கொத்தமல்லி இலையை சேர்த்துக் கொள்ள வேண்டும். இதனுடன் இரண்டு மேசை கரண்டி அளவிற்கு கடலைமாவை சேர்த்து நன்றாக பிசைந்து கொள்ள வேண்டும்.

நாம் ஏற்கனவே சோயாவை ஊறவைத்து வைத்திருப்பதால் அதில் தேவையான தண்ணீர் இருக்கும். அதனால் தண்ணீர் எதுவும் சேர்க்க வேண்டிய அவசியம் இல்லை. இதனை நன்றாக மாவு போன்ற பதத்திற்கு பிசைந்து கட்லெட் போல உருட்டி தட்டிக் கொள்ள வேண்டும்.

இப்பொழுது மற்றொரு பவுலில் கால் கப் அளவிற்கு மைதா மாவு, தேவையான அளவு உப்பு சேர்த்து தண்ணீர் விட்டு மாவு போல கரைத்து எடுத்துக் கொள்ள வேண்டும். மற்றொரு தட்டில் காண்ப்பிளக்ஸை நுணுக்கி அதனையும் எடுத்துக் கொள்ளவும். இதற்கு பிரட் கிரம்ஸ்ஸும் பயன்படுத்திக் கொள்ளலாம்.

கடாயில் கட்லெட் பொறிக்க தேவையான அளவு எண்ணெய் சேர்க்கவும். எண்ணெய் சூடானதும் நாம் தட்டி வைத்திருக்கும் சோயாவை மைதா மாவில் நன்றாக தோய்த்து எடுத்து அதனை கான்ப்ளக்ஸ் அல்லது பிரட் கரம்சில் புரட்டி எடுத்து எண்ணெயில் சேர்க்கவும். நன்கு சிவந்ததும் இருபுறமும் வேகவிட்டு எடுத்தால் அருமையான கட்லெட் தயார்.