தினமும் காலை என்ன உணவு செய்வது என்பது பலருக்கும் போராட்டமாக தான் இருக்கும். அதுவும் இட்லி, தோசை மாவு தீர்ந்து விட்டால் காலை நேர பரபரப்பில் என்ன செய்வது என்று ஒன்றுமே தோன்றாது. இப்படி காலை நேரத்தில் என்ன செய்யலாம் என்று அடிக்கடி குழம்பும் நபரா நீங்கள்? அப்படி என்றால் ஒரு முறை இந்த ரவை கிச்சடியை முயற்சி செய்து பாருங்கள்.. பெரும்பாலும் உப்புமாவை வெறுக்கும் பலருக்கும் கூட இந்த ரவை கிச்சடி கட்டாயம் பிடிக்கும்.
சூடான சுவையான அடை!! காலை நேர டிபனுக்கு அடை இப்படி செய்யுங்கள்!
ரவை கிச்சடி தயார் செய்ய ஒரு பெரிய வெங்காயத்தை பொடியாக நறுக்கிக் கொள்ளவும். ஒரு சிறிய துண்டு இஞ்சி, ஒரு கேரட், இரண்டு பச்சை மிளகாய் ஆகியவற்றை பொடி பொடியாக நறுக்கவும். ஒரு கப் அளவுக்கு ரவையை குறைவான தீயில் வைத்து சிவக்க வறுத்து எடுத்துக் கொள்ள வேண்டும். பச்சை பட்டாணியை வெந்நீரில் போட்டு வைக்கவும்.
இப்பொழுது கடாயில் 5 ஸ்பூன் எண்ணெய் சேர்த்து ஒரு ஸ்பூன் கடுகு, ஒரு ஸ்பூன் உளுத்தம் பருப்பு, இரண்டு ஸ்பூன் கடலைப்பருப்பு, சிறிதளவு கறிவேப்பிலை ஆகியவற்றை தாளிக்க வேண்டும். பொடியாக நறுக்கிய வெங்காயத்தை சேர்த்து வதக்கவும். பின் இரண்டு பச்சை மிளகாயை சேர்த்து வதக்கவும். கால் ஸ்பூன் மஞ்சள் தூள் சேர்க்கவும். பொடியாக நறுக்கிய இஞ்சி, நறுக்கி வைத்த கேரட் அனைத்தையும் சேர்த்து வதக்க வேண்டும். வெந்நீரில் போட்டு எடுத்த பச்சை பட்டாணியையும் சேர்த்து வதக்கவும்.
எல்லாம் நன்கு வதங்கியதும் இரண்டு கப் அளவு தண்ணீர் ஊற்றி நன்கு கொதிக்க விடவும். கொதி வந்ததும் தேவையான அளவு உப்பு போட்டு வறுத்து வைத்திருக்கும் ரவையை கொஞ்சம் கொஞ்சமாக சேர்த்து கட்டிப்படாமல் கிளற வேண்டும். ஐந்து நிமிடங்கள் குறைவான தீயில் வைத்து நன்கு கிளறி உதிரியாக வந்ததும் இறக்கி விடலாம்.
தோசை பிரியரா நீங்கள்? இதோ உங்களுக்காக மணமணக்கும் மசால் தோசை…!
அவ்வளவுதான் சுவையான ரவை கிச்சடி தயார் இதனை சூடாக தேங்காய் சட்னி அல்லது சாம்பார்டன் சேர்த்து பரிமாறலாம்.