உணவகங்களில் கிடைக்கும் மொறுமொறு பிரெஞ்சு ப்ரைஸ்.. இனி வீட்டிலேயே செய்யலாம்…!

பிரெஞ்சு ப்ரைஸ் உலகம் முழுவதும் பிரசித்திப் பெற்ற ஒரு உணவு வகையாகும். சிறுவர்கள் முதல் பெரியவர் வரை விரும்பி சாப்பிடக்கூடிய இந்த பிரெஞ்ச் ப்ரைஸ் பெல்ஜியமில் இருந்து உருவானதாக கூறப்படுகிறது. பெல்ஜியமில் உருவாகி இருந்தாலும் இன்று உலகம் முழுவதும் இது பிரசித்தி பெற்றதாக இருக்கிறது. இதனை பலரும் சாஸ், மயனீஸ், வினிகர் சேர்த்து விதவிதமாக சுவையுடன் உண்டு ரசிப்பார்கள். இது உணவகங்களில், கடைகளில் மட்டும் தான் கிடைக்கும் என்று இல்லை இதை நாமே வீட்டில் கடைகளில் கிடைக்கும் சுவையுடன் செய்ய முடியும். இதை செய்வதற்கு பொறுமையும் நேரமும் இருந்தால் மொறுமொறுவென நீங்களே பிரெஞ்ச் ப்ரைஸ் செய்யலாம்.

வாவ் குழந்தைகளுக்கு சூப்பரான ஈவினிங் ஸ்நாக்ஸ் உருளைக்கிழங்கு சீஸ் பால்ஸ்…!

இதற்கு முக்கால் கிலோ அளவு உருளைக்கிழங்குகளை எடுத்துக் கொள்ளவும். நீங்கள் தேர்வு செய்யும் உருளைக்கிழங்கு நன்கு பெரியதாக நீளமாக இருக்க வேண்டும் அப்பொழுதுதான் துண்டுகள் போடும் பொழுது அது நீளமாக இருக்கும். இந்த உருளைக்கிழங்கை நீளமாக நறுக்கிக் கொள்ள வேண்டும். நறுக்கிய உருளைக்கிழங்குகளை சாதாரண தண்ணீரில் போட்டு 15 நிமிடங்கள் வரை அப்படியே விட்டு விடவும்.

15 நிமிடங்கள் தண்ணீரில் ஊற வைத்ததால் உருளைக்கிழங்கில் உள்ள ஸ்டார்ச் தண்ணீரில் இறங்கி இருக்கும் மேலும் உடனடியாக தண்ணீரில் போட்டதால் உருளைக்கிழங்கு கருக்காமல் இருக்கும். இப்பொழுது இந்த உருளைக்கிழங்கினை ஒரு வெதுவெதுப்பான தண்ணீரில் உப்பு சேர்த்து மீண்டும் 15 நிமிடங்கள் ஊற வைக்க வேண்டும். தண்ணீர் அதிக சூடாக இருக்க வேண்டிய அவசியம் இல்லை.

15 நிமிடங்கள் கழித்து ஒரு டிஷ்யூ அல்லது வெள்ளை துணியில் பரப்பி அதில் உள்ள ஈரத்தன்மையை துடைத்து விட வேண்டும். ஈரத்தன்மையை நன்கு துடைத்த பிறகு வானலியில் உருளைக்கிழங்குகளை பொரிக்க தேவையான அளவு எண்ணெய் சேர்த்து அடுப்பை மிதமான சூட்டில் வைத்து மிதமான சூட்டிலேயே உருளைக்கிழங்குகளை பொரித்து எடுக்க வேண்டும். முதன்முறை பொறிக்கும் பொழுது உருளைக்கிழங்குகள் வெண்மையான நிறத்தில் தான் இருக்கும்.

இனி KFC ஃப்ரைட் சிக்கன் சாப்பிட கடைகளுக்கு போக வேண்டியது இல்லை… சூப்பராக வீட்டிலேயே செய்து சாப்பிடலாம்!!!

மீண்டும் வாணலியில் எண்ணெய் காயவைத்து அதிகமான சூட்டில் எண்ணெய் கொதிக்கும் பொழுது ஏற்கனவே மிதமான சூட்டில் பொரித்து எடுத்த உருளைக்கிழங்குகளை மீண்டும் கொதிக்கும் எண்ணெயில் பொரித்து எடுக்க வேண்டும். இம்முறை உருளைக்கிழங்குகள் பொன்னிறமாக மாறி இருக்க வேண்டும். பொரித்து எடுத்த பிறகு உப்பு மற்றும் மிளகுத்தூள் தூவி சாசுடன் பரிமாறலாம்.

அவ்வளவுதான் வெளியே மொறுமொறுப்பாகவும் உள்ளே மிருதுவாகவும் இருக்கும் சுவையான பிரெஞ்ச் ப்ரைஸ் தயார்!

Exit mobile version