கிராமத்து ஸ்டைலில் பூண்டு குழம்பு… ஒரு முறை வச்சு பாருங்க ஒரு பருக்கை கூட மிஞ்சாது!

கிராமங்களில் வைக்கும் பூண்டு குழம்பு ருசியான மணம் நிறைந்த ஒரு குழம்பு வகையாகும். சூடான சாதத்தில் சுடச்சுட இந்த பூண்டு குழம்பு ஊற்றி அப்பளம் வைத்து சாப்பிட்டால்… அடடா! அவ்வளவு ருசியாக இருக்கும். மேலும் பூண்டு உடலுக்கு நன்மை தரக்கூடிய ஒரு உணவு பொருள். பூண்டை நம் உணவில் அதிகம் சேர்த்துக் கொண்டால் சளி, இருமல், காய்ச்சல் போன்ற தொந்தரவுகளில் இருந்து விடுபடலாம். மேலும் உடல் பூண்டில் உடலுக்கு தேவையான பல சத்துக்கள் இருக்கிறது.

கிராமத்து ஸ்டைலில் வீடே மணக்கும் மீன் குழம்பு…! மீன் குழம்பு அடுத்த முறை இப்படி செய்ய மறக்காதீர்கள்!

நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது கணையத்தின் செயல்பாட்டையும் பூண்டு அதிகரிக்கும் தன்மை உடையது. உடல் எடை குறைக்க வேண்டும் என்று நினைப்பவர்கள் பூண்டை உணவில் அடிக்கடி சேர்க்க கெட்ட கொழுப்புகள் கரைந்து உடல் எடை குறையும். இத்தனை நன்மைகள் நிறைந்த பூண்டை வைத்து எப்படி பூண்டு குழம்பு கிராமத்து ஸ்டைலில் எப்படி செய்யலாம் என்பதை பார்ப்போம்.

பூண்டு குழம்பு செய்வதற்கு முதலில் குழம்பிற்கு இதுபோல் குழம்பு மசாலாவை அரைத்துக் கொள்ளலாம். இதனை மற்ற குழம்புகளுக்கும் பயன்படுத்திக் கொள்ளலாம். ஒரு வாணலியில் ஒரு மேசைக்கரண்டி அளவு எண்ணெய் சேர்த்துக் கொள்ள வேண்டும். அதில் 25 கிராம் அளவு வெந்தயம், கடுகு, 50 கிராம் அளவு மிளகு சேர்த்து நன்கு வறுத்துக் கொள்ள வேண்டும் இதனை தனியே எடுத்து வைத்து விடலாம். இப்பொழுது அரை கிலோ அளவு வர மிளகாய் நன்கு வறுத்து எடுத்துக் கொள்ள வேண்டும். பிறகு அதே எண்ணெயில் அரை கிலோ முழு மல்லி வறுத்து எடுத்துக் கொள்ளவும். பிறகு 50 கிராம் அளவு உளுத்தம் பருப்பு, 50 கிராம் அளவு துவரம் பருப்பு, 50 கிராம் கடலைப்பருப்பு, 50 கிராம் சீரகம் என அனைத்தையும் நன்கு வறுத்து எடுத்துக் கொள்ள வேண்டும். இவற்றை ஒரு மிக்ஸி ஜாரில் சேர்த்து பொடியாக அரைத்துக் கொள்ளவும். அரைக்கும் பொழுது 25 கிராம் அளவு மஞ்சள் தூள் சேர்க்கவும். இதனை வறுக்கத் தேவையில்லை. இதோ குழம்பிற்கான மசாலாத்தூள் தயார். இதனை அனைத்து விதமான காரக்குழம்புக்கும் பயன்படுத்தலாம். காற்று புகாத ஒரு பாட்டிலில் அடைத்து வைத்துக் கொள்ளவும்.

பூண்டு குழம்பு செய்ய இப்பொழுது ஒரு கடாயில் ஒரு மேஜை கரண்டி அளவு எண்ணெய் சேர்த்துக் கொள்ளவும். எண்ணெய் காய்ந்ததும் அரை ஸ்பூன் கடுகு, அரை ஸ்பூன் உளுத்தம் பருப்பு, அரை ஸ்பூன் வெந்தயம், ஒரு கொத்து கறிவேப்பிலை ஆகியவற்றை சேர்த்து தாளித்துக் கொள்ளவும். பிறகு ஒரு கப் அளவு தோல் உரித்த பூண்டை சேர்த்து நன்கு வதக்கிக் கொள்ள வேண்டும். ஒரு கப் சின்ன வெங்காயத்தை சேர்த்து நன்றாக வதக்கவும். இரண்டும் நன்கு வதங்கிய பிறகு ஒரு நெல்லிக்காய் அளவு புளியை கரைத்து இதனுடன் ஊற்ற வேண்டும்.

கிராமத்து முறையில் சத்துக்கள் நிறைந்த சுவையான கத்தரிக்காய் தட்டைப் பயறு குழம்பு!

தேவையான அளவு உப்பு சேர்த்து, நாம் அரைத்து வைத்த குழம்பு மசாலா தூள் இரண்டு மேஜை கரண்டி அளவு சேர்த்து நன்கு கொதிக்க விடவும். உங்கள் வீட்டில் இருக்கும் மாங்காய் வற்றல் அல்லது கத்தரிக்காய் வற்றலை சிறிது நேரம் தண்ணீரில் ஊற வைத்து இந்த நிலையில் சேர்த்து கொதிக்க விடலாம்.

குழம்பு நன்கு கொதித்து வற்றியதும் இறக்கி விடலாம் அவ்வளவுதான் சுவையான கிராமத்து ஸ்டைல் பூண்டு குழம்பு தயார்!