ஹோட்டல் சுவையிலேயே பன்னீர் பட்டர் மசாலா…! இப்படி செய்து பாருங்கள்!

பன்னீர் வைத்து செய்யும் பலவிதமான ரெசிபிக்கள் சுவையானது மட்டுமின்றி உடலுக்கும் ஆரோக்கியம் தரக்கூடியது. இந்த பன்னீரை வைத்து செய்யும் ஒரு பிரபல ரெசிபி தான் பன்னீர் பட்டர் மசாலா. இந்த பன்னீர் பட்டர் மசாலா சப்பாத்தி, நாண், ப்ரைட் ரைஸ் என அனைத்து வகையான உணவுகளுக்கும் அருமையான காம்பினேஷன் ஆக இருக்கும். இந்த பன்னீர் பட்டர் மசாலா நாம் உணவகங்களில் சுவைக்கும் பொழுது இதன் சுவை கூடுதலாக இருப்பதாக உணர்ந்திருப்போம். ஆனால் அதே சுவையில் நாம் வீட்டிலேயும் செய்ய முடியும். வாருங்கள் இந்த பன்னீர் பட்டர் மசாலாவை உணவகங்களில் உள்ள சுவையோடு எப்படி வீட்டிலேயே செய்யலாம் என்பதை பார்ப்போம்.

மீதமான சப்பாத்தி வைத்து அருமையான வெஜ் சப்பாத்தி நூடுல்ஸ்!

இந்த பன்னீர் பட்டர் மசாலா செய்வதற்கு முதலில் வெங்காய தக்காளி மசாலாவை தயார் செய்து கொள்ள வேண்டும். அதற்கு ஒரு வாணலியில் ஒரு டேபிள் ஸ்பூன் அளவு வெண்ணெய் சேர்க்கவும். வெண்ணை உருகியதும் பொடி பொடியாக நறுக்கிய ஒரு பெரிய வெங்காயத்தை சேர்த்து வதக்க வேண்டும். வெங்காயம் வதங்க தேவையான அளவு உப்பு சேர்த்துக் கொள்ளவும். வெங்காயம் பொன்னிறமாக வதங்க வேண்டிய அவசியம் இல்லை கண்ணாடி பதத்திற்கு வந்ததும் இதனுடன் ஒரு துண்டு இஞ்சி, இரண்டு பல் பூண்டு ஆகியவற்றையும் சேர்த்து வதக்க வேண்டும். ஐந்து முந்திரிப் பருப்புகளை சேர்த்து வறுத்துக் கொள்ள வேண்டும். பிறகு பொடியாக நறுக்கிய நான்கு தக்காளிகளை சேர்த்து கொள்ள வேண்டும். தக்காளி வெண்மையாகும் வரை இதையும் நன்கு வதக்கிக் கொள்ள வேண்டும். தக்காளி மென்மையான பிறகு இதனை ஆற வைக்கவும் வெங்காயம் தக்காளி ஆறியதும் ஒரு மிக்ஸி ஜாரில் சேர்த்து இதனை அரைத்து எடுத்துக் கொள்ளவும்.

மூன்று விதமான நாண்! இனி ஹோட்டல்களில் கிடைக்கும் நாணை அதே சுவையில் வீட்டிலேயே செய்யலாம்!

இப்பொழுது ஒரு கடாயில் மூன்று டேபிள் ஸ்பூன் அளவிற்கு வெண்ணெய் சேர்க்கவும். வெண்ணெய் உருகியதும் ஒரு பிரியாணி இலை, ஒரு துண்டு பட்டை, இரண்டு ஏலக்காய் ஆகியவற்றை சேர்த்து தாளித்துக் கொள்ளவும். பிறகு அரைத்து வைத்திருக்கும் விழுதை சேர்த்துக் கொள்ள வேண்டும். இதனுடன் அரை ஸ்பூன் கரம் மசாலா, இரண்டு ஸ்பூன் மிளகாய்த்தூள், அரை ஸ்பூன் சர்க்கரை மற்றும் தேவையான அளவு உப்பு ஆகியவற்றை சேர்த்து சிறிது நேரம் நன்கு வதக்கிக் கொள்ள வேண்டும். 200 கிராம் அளவு தண்ணீரை துண்டுகளாக நறுக்கி அதை இப்பொழுது சேர்த்துக் கொள்ளலாம். இவை அனைத்தும் ஒன்று சேர கிளறவும். இறுதியாக ஒரு டேபிள் ஸ்பூன் அளவு கசூரி மேத்தி சேர்த்து கலந்து விடவும். இதன் மேல் ஒரு டேபிள் ஸ்பூன் அளவு ஃப்ரெஷ் க்ரீம் சேர்த்து இதனை பரிமாறினால் இதன் சுவை அட்டகாசமாக இருக்கும். அவ்வளவுதான் சுவையான பன்னீர் பட்டர் மசாலா தயாராகி விட்டது!