குழந்தைகளுக்கு செய்து கொடுக்க சூப்பரான ஸ்நாக்ஸ் ரெசிபி… வெங்காயம் வைத்து ஆனியன் ரிங்ஸ்…!

மழைக்காலத்தில் வெங்காயத்தை வைத்து பஜ்ஜி, பக்கோடா போன்று வழக்கமாக செய்யும் ஸ்நாக்ஸ் போன்று இல்லாமல் வித்தியாசமாக இந்த ஆனியன் ரிங்ஸ் செய்து பாருங்கள். இதன் சுவை கட்டாயமாக குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும். குழந்தைகள் மட்டுமின்றி பெரியவர்களும் இந்த ஆனியன் ரிங்ஸ் விரும்பி சாப்பிடுவார்கள். இதை செய்வதும் மிக சுலபம். வாருங்கள் இந்த ஆனியன் ரிங்ஸ் எப்படி சுலபமாக செய்யலாம் என்பதை பார்க்கலாம்.

இனி KFC ஃப்ரைட் சிக்கன் சாப்பிட கடைகளுக்கு போக வேண்டியது இல்லை… சூப்பராக வீட்டிலேயே செய்து சாப்பிடலாம்!!!

ஆனியன் ரிங்ஸ் செய்வதற்கு மூன்று பெரிய வெங்காயத்தை எடுத்துக்கொள்ள வேண்டும். இதனை வளையமாக நறுக்கிக் கொள்ளவும். இப்பொழுது ஒரு பவுலில் அரை கப் மைதா மாவு, மூன்று டேபிள் ஸ்பூன் சோள மாவு, 2 டேபிள் ஸ்பூன் அரிசி மாவு, ஒரு ஸ்பூன் மிளகாய் தூள், அரை ஸ்பூன் சீரகத்தூள், அரை ஸ்பூன் மிளகுத்தூள் ஆகியவற்றை சேர்த்து நன்கு கலந்து கொள்ள வேண்டும்.

இந்த மாவை நன்கு கலந்த பிறகு நாம் நறுக்கி வைத்திருக்கும் வெங்காய வளையங்களை ஒவ்வொன்றாக எடுத்து இதில் புரட்டி எடுத்துக் கொள்ள வேண்டும். வெங்காயத்தின் ஈரப்பதம் போகும் படி மாவில் புரட்டி எடுத்தால் போதும். இப்பொழுது அனைத்து வளையங்களையும் புரட்டி எடுத்த பிறகு இதனை தனியாக வைத்துவிடலாம். பிறகு மீதம் இருக்கும் மாவில் தேவையான அளவு தண்ணீர் விட்டு கரைத்துக் கொள்ள வேண்டும். இந்த மாவு அதிக தண்ணீராகவும் இல்லாமல் கெட்டியாகவும் இல்லாமல் கரைத்துக் கொள்ளவும்.

இனி மோமோஸ் சாப்பிட கடைகளைத் தேடி அலைய வேண்டாம்.. சூடாக வீட்டிலேயே செய்து சாப்பிடலாம்…!

மாவை கரைத்த பிறகு நாம் ஏற்கனவே மாவில் புரட்டி வைத்திருக்கும் வெங்காய வளையங்களை ஒவ்வொன்றாக இதில் நனைத்து எடுக்கவும். இதில் நனைத்து எடுத்த பிறகு புரட்டி எடுத்து எண்ணெயில் பொரித்து எடுக்க வேண்டும். இப்படியே அனைத்து வெங்காய வளையங்களையும் மாவில் நனைத்து பிறகு பிரட் கிரம்ஸில் புரட்டி எடுத்து எண்ணெயில் பொரித்து எடுக்கவும். அவ்வளவுதான் சுவையான வெங்காய வளையம் தயாராகிவிட்டது.