சுலபமா செய்யலாம் மிளகு ரசம்…! அடுத்த முறை இப்படி செய்து பாருங்கள்!

ரசம் அடிக்கடி வீட்டில் வைக்கக் கூடிய ஒரு உணவாக இருக்கிறது. சிலர் வீடுகளில் தினமும் உணவில் கட்டாயம் ரசம் இடம் பிடித்து விடவும். என்னதான் விருந்து உணவே உண்டாலும் இறுதியில் ரசம் ஊற்றி சாப்பிட்டால் தான் அந்த விருந்து சாப்பிட்ட திருப்தியே கிடைக்கும். ரசத்தை பலரும் பல்வேறு விதமாக செய்வார்கள் ரசத்தில் பல வகைகள் உண்டு. இப்பொழுது நாம் அனைவருக்கும் பிடித்தமான மிளகு ரசத்தை எப்படி செய்யலாம் என்பதை பார்க்கலாம்.

சளித்தொல்லையை விரட்டி அடித்து உடலுக்கு நன்மை தரும் கண்டதிப்பிலி ரசம்…!

மிளகு ரசம் செய்வதற்கு முதலில் ஒரு இடிக்கின்ற உரலில் இரண்டு டீஸ்பூன் அளவிற்கு மிளகு மற்றும் ஒரு டீஸ்பூன் சீரகம் ஆகியவற்றை எடுத்துக் கொள்ள வேண்டும். இதனை நன்றாக பொடி போல இடித்து எடுத்துக் கொள்ளவும். ஒருவேளை உங்களால் இடிக்க முடியவில்லை என்றால் மிக்ஸியில் அரைத்தும் எடுத்துக் கொள்ளலாம். இப்பொழுது இதனுடன் நான்கு பூண்டு பற்களை சேர்த்து அதையும் நன்கு இடித்துக் கொள்ளவும். நன்கு பழுத்த இரண்டு தக்காளி பழங்களை எடுத்து அதை பிசைந்து வைத்துக் கொள்ளவும். ஒரு நெல்லிக்காய் அளவு புளியை எடுத்து அதனை தண்ணீரில் ஊறவைத்து கரைத்து எடுத்துக் கொள்ள வேண்டும்.

இப்பொழுது ஒரு பாத்திரத்தில் ஒரு டீஸ்பூன் அளவிற்கு எண்ணெய் சேர்க்கவும். எண்ணெய் காய்ந்ததும் கால் ஸ்பூன் கடுகு, கால் ஸ்பூனிற்கு குறைவாக வெந்தயம், இரண்டு காய்ந்த மிளகாய் சிறிதளவு பெருங்காயம் தூள், கால் ஸ்பூன் மஞ்சள் தூள் ஆகியவற்றை சேர்த்துக் கொள்ள வேண்டும். இவற்றுடன் நாம் ஏற்கனவே இடித்து வைத்திருக்கும் மிளகு மற்றும் சீரகத் தூளையும் சேர்த்து கொள்ள வேண்டும். பிறகு நாம் பிசைந்து வைத்திருக்கும் தக்காளி பழங்களை சேர்த்து சிறிது நேரம் வதக்கிக் கொள்ளவும். நாம் கரைத்து வைத்திருக்கும் புளியை ஊற்றி தேவையான அளவு உப்பு சேர்த்துக் கொள்ள வேண்டும். இதனை நன்றாக கலந்து விடவும் இப்பொழுது இந்த ரசத்தை அதிக நேரம் கொதிக்க விடக்கூடாது. அனைத்தும் சேர்ந்து ஒரு கொதி வந்ததும் கொத்தமல்லி தழை தூவி இறக்கி விடலாம்.

இப்படி ஒரு ரசத்தை நீங்க வீட்ல செய்திருக்கவே மாட்டீங்க… அட்டகாசமான சுவையில் கல்யாண ரசம்!

அவ்வளவுதான் சுவையான மிளகு ரசம் தயார்…!