மாங்காய் வைத்து செய்யப்படும் மாங்காய் தொக்கு மிக சுவை நிறைந்ததாக இருக்கும். இது தயிர் சாதம், ரசம் சாதம் போன்றவற்றிற்கு அட்டகாசமாக இருக்கும். சுவை நிறைந்த இந்த மாங்காய் தொக்கை செய்வதும் மிக மிக சுலபம். சுவையான இந்த மாங்காய் தொக்கை எப்படி சுலபமாக செய்யலாம் என்பதை பார்க்கலாம்.
கோவில் சுவையில் அருமையான எலுமிச்சை சாதம் இந்த நவராத்திரிக்கு பிரசாதமாக செய்து அசத்துங்கள்!
மாங்காய் தொக்கு செய்வதற்கு முதலில் மூன்று மாங்காய்களை எடுத்து தோல் சீவி எடுத்துக் கொள்ளவும். தோல் சீவிய மாங்காயை நன்றாக துருவி எடுத்துக் கொள்ள வேண்டும். இப்பொழுது ஒரு கடாயில் 150 மில்லி லிட்டர் அளவு நல்லெண்ணெய் சேர்த்துக் கொள்ள வேண்டும். நல்லெண்ணையை காய வைத்து ஒரு ஸ்பூன் கடுகு, அரை ஸ்பூன் பெருங்காயத்தூள் ஆகியவற்றை தாளித்துக் கொள்ள வேண்டும்.
தாளித்த பிறகு துருவி வைத்திருக்கும் மாங்காயை சேர்த்து நன்கு வதக்க வேண்டும். மாங்காய் துருவல் சுருண்டு வரும் அளவிற்கு வதக்கவும். தேவையான அளவு உப்பு மற்றும் 100 கிராம் அளவு மிளகாய்த்தூள் சேர்த்து குறைவான தீயில் வைத்து நன்கு வதக்கவும். இதில் எண்ணெய் பிரிந்து வரும் வரை நன்கு கிளறி விடவும். இப்பொழுது வெல்லம் இரண்டு அச்சு நன்கு பொடி செய்து சேர்த்துக் கொள்ள வேண்டும்.
இரண்டு ஸ்பூன் அளவு வெந்தயத்தை வாணலியில் எண்ணெய் எதுவும் சேர்க்காமல் வறுத்து எடுத்து ஆறவிட வேண்டும். இதனை ஒரு மிக்ஸி ஜாரில் சேர்த்து பொடியாக அரைத்து எடுத்துக் கொள்ள வேண்டும். இந்தப் பொடியை இறுதியாக சேர்த்து கிளறி இறக்க வேண்டும். இதனை ஆறவைத்து கண்ணாடி பாட்டிலில் போட்டு வைக்கவும்.
கல்யாண வீட்டு பந்தியில் வைக்கும் சுவையான மாங்காய் ஊறுகாய்.. செய்வது எப்படி?
அவ்வளவுதான் எச்சில் ஊற செய்யும் சுவையான மாங்காய் தொக்கு தயாராகி விட்டது!