கோவில் சுவையில் அருமையான எலுமிச்சை சாதம் இந்த நவராத்திரிக்கு பிரசாதமாக செய்து அசத்துங்கள்!

நவராத்திரி அன்று ஒன்பது நாட்களும் வீட்டில் கொழு வைத்து அம்மனை வழிபாடு செய்து வணங்குவார்கள். இந்த ஒன்பது நாட்களும் இறைவனுக்கு பூஜை செய்து நெய்வேத்தியம் செய்து வழிபடுவார்கள் வீட்டிற்கு வரும் விருந்தினர்களுக்கு இதனை பிரசாதமாக வழங்குவார்கள். அப்படி அம்மனுக்கு படைத்து வழிபாடு செய்து பிரசாதமாக வழங்கிட ஒரு உகந்த சாதம் தான் எலுமிச்சை சாதம். இந்த சாதத்தை கோவில்களில் செய்யும் சுவையிலேயே செய்து இறைவனுக்கு படைக்கலாம். மேலும் இது அனைவரும் விரும்பி உண்ணும் ஒரு கலவை சாதம் ஆகும்.

கோவில் பிரசாதம் சுவையில் சூப்பரான தயிர் சாதம்! வீட்டில் செய்து அசத்துங்கள்…

எலுமிச்சை சாதம் செய்வதற்கு ஒரு கப் அளவு அரிசியை வேக வைத்து குழையாமல் சாதமாக வடித்து எடுத்துக் கொள்ள வேண்டும். ஒரு கடாயில் ஒரு ஸ்பூன் அளவு நல்லெண்ணெய் காய வைத்து என்னை காய்ந்ததும் அதில் கால் ஸ்பூன் கடுகு சேர்த்து நன்கு பொரிய விட வேண்டும் கடுகு பொரிந்ததும் இதில் நான்கு வர மிளகாய்களை சேர்த்துக் கொள்ள வேண்டும். இப்பொழுது இதில் அரை ஸ்பூன் உளுத்தம் பருப்பு மற்றும் அரை ஸ்பூன் கடலைப்பருப்பு சேர்த்து அடுப்பை குறைவான தீயில் வைத்து வறுத்துக் கொள்ள வேண்டும். கடலைப்பருப்பு மற்றும் உளுத்தம் பருப்பு பாதி வறுபட்டதும் பச்சை வேர்க்கடலை ஒரு ஸ்பூன் சேர்த்து அதையும் நன்கு வறுக்க வேண்டும்.

இவை அனைத்தும் வறுபட்டதும் சிறிதளவு கறிவேப்பிலை சேர்த்துக் கொள்ளவும். அரை ஸ்பூன் அளவு பொடியாக நறுக்கிய இஞ்சி மற்றும் பொடியாக நறுக்கிய இரண்டு பச்சை மிளகாய்களை சேர்க்கவும். இப்பொழுது இதில் தேவையான அளவு உப்பு சேர்த்துக் கொள்ள வேண்டும். இப்பொழுது பெருங்காயத்தூள் சேர்த்து அடுப்பை அணைத்து விடலாம். ஒரு எலுமிச்சை பழத்தை சாறு பிழிந்து இதில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

ஏற்கனவே வடித்து வைத்த சாதத்தை இப்பொழுது இதில் சேர்த்து தேவையான அளவு கொத்தமல்லி தழைகளை தூவி சாதத்தில் அனைத்து புறமும் எலுமிச்சை சாறு படுமாறு நன்கு கிளறி கொள்ள வேண்டும். இந்த சாதத்திற்கு அதிக சுவை கொடுப்பதை இஞ்சி பெருங்காயம் இவை இரண்டின் வாசனை தான் எனவே இவை இரண்டையும் தவறாது சேர்த்துக் கொள்ளுங்கள். அவ்வளவுதான் சுவையான எலுமிச்சை சாதம் தயார்…!

Exit mobile version