கொங்கு நாட்டு ஸ்டைலில் அட்டகாசமான மட்டன் தண்ணி குழம்பு இப்படி வைத்து பாருங்கள்!

மட்டன் தண்ணீர் குழம்பு கொங்கு நாட்டில் பிரபலமான ஒரு குழம்பு வகையாகும். இந்த மட்டன் தண்ணீர் குழம்பு சாதம், இட்லி என அனைத்து உணவுகளுக்கும் அட்டகாசமாக அருமையாக இருக்கும். பாரம்பரிய முறையில் இதில் மசாலா அரைத்து செய்வதால் இதன் மணம் வீடு முழுக்க பரவி இருக்கும். வாருங்கள் பாரம்பரியமான இந்த கொங்கு நாட்டு மட்டன் தண்ணி குழம்பு எப்படி செய்யலாம் என்பதை பார்க்கலாம்.

மட்டன் தண்ணீர் குழம்பு செய்வதற்கு முதலில் முக்கால் கிலோ அளவு மட்டனை எடுத்து கழுவி சுத்தம் செய்து வைத்துக் கொள்ள வேண்டும். இப்பொழுது இதற்கான மசாலாவை தயார் செய்து கொள்ளலாம். கடாயில் ஒரு டேபிள் ஸ்பூன் எண்ணெய் சேர்த்து எண்ணெய் சூடானதும் மூன்று ஸ்பூன் மல்லி, இரண்டு ஸ்பூன் சீரகம், ஒரு ஸ்பூன் மிளகு ஆகியவற்றை சேர்த்து நன்கு வறுத்துக் கொள்ள வேண்டும். அடுப்பை மிதமான தீயில் வைத்து வாசனை வரும் வரை வறுத்துக் கொள்ள வேண்டும். இவை நன்கு வறுபட்டதும் 7 வர மிளகாய்களை சேர்த்து நன்கு வறுத்துக் கொள்ள வேண்டும். இதனோட மூன்று டேபிள் ஸ்பூன் அளவிற்கு துருவிய தேங்காய் சேர்த்து அதையும் நன்கு வறுத்துக் கொள்ளவும். இவை வறுபட்டதும் ஆற வைக்க வேண்டும்.

அட… நாட்டுக்கோழி வைத்து சுவையான ஈரோடு ஸ்பெஷல் சிந்தாமணி சிக்கன்…!

இப்பொழுது அதே கடாயில் ஒரு டேபிள் ஸ்பூன் எண்ணெய் சேர்க்கவும். எண்ணெய் காய்ந்ததும் தோல் உரித்த பத்துப்பல் பூண்டு சேர்க்க வேண்டும். பிறகு இரண்டு இஞ்ச் அளவிற்கு இஞ்சியை துண்டுகளாக நறுக்கி சேர்த்து கொள்ளவும். 200 கிராம் அளவு சின்ன வெங்காயத்தை தோல் உரித்து சேர்த்து வதக்கிக் கொள்ளவும். இவை நன்கு வதங்கியதும் ஒரே ஒரு தக்காளியை சேர்த்து அதையும் நன்கு வதக்கவும். தக்காளி வெங்காயம் வதங்கி மெண்மையானதும் ஆறவிடலாம்.

இப்பொழுது நாம் முதலில் வறுத்து வைத்திருக்கும் மல்லி, சீரகம், மிளகு, வர மிளகாய் மற்றும் தேங்காய் ஆகியவற்றை மிக்ஸி ஜாரில் சேர்த்து அரைக்க வேண்டும். தண்ணீர் சேர்க்காமல் கொரகொரப்பாக அரைத்துக் கொள்ளவும். இது கொரகொரப்பாக அரைபட்டதும் இஞ்சி, பூண்டு, தக்காளி, வெங்காய மசாலாவையும் சேர்த்து அரைத்துக் கொள்ள வேண்டும். இப்பொழுது குழம்புக்கு தேவையான மசாலா தயாராகி விட்டது.

இப்பொழுது ஒரு குக்கரில் மூன்று டேபிள் ஸ்பூன் அளவிற்கு எண்ணெய் சேர்த்து எண்ணெய் காய்ந்ததும் ஒரு டீஸ்பூன் சோம்பு சேர்த்து கொள்ள வேண்டும். இதனுடன் ஒரு கொத்து கறிவேப்பிலை இரண்டு பச்சை மிளகாய் சேர்க்க வேண்டும். தோல் உரித்து நறுக்கிய ஐந்து சின்ன வெங்காயத்தை சேர்த்து நன்கு வதக்கிக் கொள்ள வேண்டும். பிறகு நாம் சுத்தம் செய்து வைத்திருக்கும் பட்டணை சேர்த்து கால் டீஸ்பூன் மஞ்சள் தூளையும் சேர்த்து மட்டனை எண்ணெயில் நன்கு வதக்க வேண்டும். மட்டன் எண்ணெயில் நன்கு வதங்கியதும் இதனை விசில் போடாமல் வேறொரு மூடிவைத்து மூடி ஒரு மூன்று நிமிடங்கள் அப்படியே வைத்து விடவும். மட்டனிலிருந்து தண்ணீர் வெளியே வந்து இருக்கும்.

இந்த நிலையில் நாம் அரைத்து வைத்திருக்கும் மசாலாவை சேர்த்து கலந்து கொள்ள வேண்டும். இது தண்ணீர் குழம்பு என்பதால் தேவையான அளவிற்கு தண்ணீரை ஊற்றி உப்பையும் சேர்த்துக் கொள்ள வேண்டும். இறுதியாக ஒரு கைப்பிடி கொத்தமல்லி தூவி குக்கரை மூடி விசில் போடவும். குக்கர் ஏழு விசில் வரும் வரை விட வைக்க வேண்டும். (தண்ணீர் ஊற்றும் பொழுது கவனமாக இருக்கவும் விசில் வரும் பொழுது தண்ணீர் முழுவதும் வெளியே வந்து விடக்கூடாது.) விசில் வந்த பிறகு குக்கரை அணைத்து விடலாம். விசில் அடங்கியதும் திறந்து பார்த்தால் குழம்பு தயாராகி இருக்கும்.

Exit mobile version