குஜராத்தி ஸ்பெஷல் காந்த்வி! சுவை நிறைந்த சிற்றுண்டி ரெசிபி…

காந்த்வி என்பது குஜராத் மாநிலத்தில் பிரசித்தி பெற்ற ஒரு ஸ்நாக்ஸ் ரெசிபி வகையாகும். இது செய்வதற்கு அதிக பொருட்கள் தேவைப்படாது கடலை மாவு மற்றும் தயிர் இருந்தால் போதும் மிக எளிமையாக இந்த ரெசிபியை செய்யலாம். இதன் சுவை மிக அருமையாக இருக்கும். மிருதுவான அதேசமயம் சுவையான இந்த காந்த்வி ரெசிபி எப்படி செய்யலாம் என்பதை பார்ப்போம்.

இனி பிஸ்கட் கடைகளில் வாங்க வேண்டாம்.. இது தெரிந்தால் வீட்டிலேயே செய்வீர்கள்!

காந்தவி செய்வதற்கு ஒரு அடி கனமான கிண்ணத்தை எடுத்துக் கொள்ளவும். இதில் அரை கப் அளவு தயிர் சேர்த்து நன்கு கிரீம் போல அடித்துக் கொள்ள வேண்டும். பிறகு அரை கப் கடலை மாவு சேர்த்து கலந்து கொள்ளவும். பிறகு முக்கால் கப் அளவு தண்ணீர், தேவையான அளவு உப்பு, ஒரு சிட்டிகை பெருங்காயத்தூள் ஆகியவற்றை சேர்த்து நன்கு கலந்து கொள்ள வேண்டும்.

கலந்த இந்த கரைசலை அடுப்பில் வைத்து கைவிடாமல் கிளறிக் கொண்டே இருக்கவும். மாவு கெட்டியாகும் வரை கிளறவும். மாவு ஓரளவு இறுகி வந்த பிறகு அடுப்பை அணைத்து விடலாம். இப்பொழுது சமதளமான ஒரு பரப்பின் மீது இந்த மாவை சிறிய பகுதியாக வைத்து ஒரு கரண்டியிணை கொண்டு பரப்பி விடவும்.

பிறகு கத்தியால் இதில் வரிகள் வரைந்து அப்படியே ரோல் போல சுருட்டி விடலாம். இந்த ரோல்களை ஒரு ட்ரேயில் அடுக்கி வைக்க வேண்டும். இப்பொழுது ஒரு கடாயில் இரண்டு ஸ்பூன் எண்ணெய் சேர்த்து அதில் அரை ஸ்பூன் கடுகு, ஏய் இரண்டு சிட்டிகை பெருங்காயத்தூள் சேர்த்து தாளிக்க வேண்டும். தாளித்ததை அப்படியே அந்த ரோலின் மேல் கொட்டி சேர்க்க வேண்டும்.

செட்டிநாட்டு ஸ்பெஷல் பலகாரமான வெள்ளைப் பணியாரம்! அருமையான காலை உணவு மற்றும் சிற்றுண்டி!!!

இப்பொழுது துருவிய தேங்காய் மற்றும் சிறிதளவு கொத்தமல்லி தூவி பரிமாறி விடலாம். இதனை சட்னி அல்லது சாசுடன் பரிமாறினால் தேநீர் வேலைக்கு மிக சுவையான ஸ்நாக்ஸ் தயாராகிவிடும்.