இட்லியுடன் சுட சுட இந்த இட்லி சாம்பார் ஊற்றி சாப்பிட்டு பாருங்கள்… எத்தனை இட்லி சாப்பிட்டீர்கள் என்று உங்களுக்கே தெரியாது!

இட்லி சாம்பார் இட்லி உடன் சேர்த்து சாப்பிடுவதற்கு மிகப் பொருத்தமான ஒரு ரெசிபி. என்னதான் பஞ்சு போன்ற மிருதுவான இட்லி என்றாலும் அதனுடன் வைத்து சாப்பிடும் சட்னியோ, சாம்பாரோ மிக சுவையாக இருக்க வேண்டும் என்று அனைவரும் எதிர்பார்ப்பது தான். அதிலும் சாம்பார் மட்டும் சுவையாக அமைந்துவிட்டால் போதும் எத்தனை இட்லிகள் சாப்பிடுகிறோம் என்று கணக்கே இல்லாமல் சாப்பிடலாம். குறிப்பாக மினி இட்லிகளை சாம்பாரில் ஊற வைத்து சாப்பிடுவதும் பலருக்கும் பிடிக்கும். இந்த இட்லி சாம்பார் ஹோட்டல், பெரிய உணவு விடுதிகளில் மட்டும்தான் சுவையாக இருக்கும் என்று இல்லை நாமே வீட்டில் மிக சுவையாக இட்லி சாம்பார் செய்யலாம். இந்த இட்லி சாம்பாருக்கு தேவையான மசாலா பொடி அப்பொழுதே தயாரித்து பயன்படுத்துவதால் சுவை நன்றாக இருக்கும்.

கமகமக்கும் முருங்கைக்காய் சாம்பார்…! முருங்கைக்காய் சாம்பார் செய்வது எப்படி சுலபமா?

இந்த இட்லி சாம்பாருக்கு தேவையான பொடி தயாரிக்க நான்கு வர மிளகாய், இரண்டு ஸ்பூன் முழு மல்லி, ஒரு ஸ்பூன் கடலைப்பருப்பு, ஒரு ஸ்பூன் பச்சரிசி, ஒரு ஸ்பூன் வெந்தயம், அரை ஸ்பூன் சீரகம், அரை ஸ்பூன் மிளகு இவை அனைத்தையும் நன்கு வறுத்து பொடி செய்து எடுத்துக் கொள்ள வேண்டும். இந்தப் பொடியை தான் நாம் சாம்பாரில் பயன்படுத்த போகிறோம்.

இப்பொழுது இட்லி சாம்பார் செய்வதற்கு 100 கிராம் சின்ன வெங்காயம், 5 பச்சை மிளகாய், ஒரு பழுத்த தக்காளி, ஒரு பெரிய வெங்காயம், இரண்டு கத்திரிக்காய் ஒரு உருளைக்கிழங்கு ஆகியவற்றை நறுக்கி கொள்ளவும். அரை கப் துவரம் பருப்பை கழுவி குக்கரில் சேர்த்து அதனுடன் சிறிதளவு மஞ்சள் தூள் சேர்க்க வேண்டும். நறுக்கி வைத்த காய்கறிகளையும் இந்த துவரம் பருப்போடு சேர்த்து தண்ணீர் விட்டு குக்கரை மூடி விடவும். இப்பொழுது இந்த குக்கரை அடுப்பில் வைத்து இரண்டு விசில் வரும் வரை வைக்கவும்.

சாம்பார் சாதம் ஒரு முறை இப்படி செய்து பாருங்கள்… செய்த சாதம் கொஞ்சம் கூட மிஞ்சாது!

குக்கரில் இரண்டு விசில் வந்ததும் குக்கரை திறந்து தேவையான அளவு உப்பு சேர்த்து சிறிதளவு புளி கரைத்து ஊற்ற வேண்டும். இதனை நன்கு கொதிக்க விட வேண்டும். கொதிக்கும் பொழுது நாம் தயாரித்து வைத்திருக்கும் சாம்பார் பொடியில் மூன்று ஸ்பூன் சேர்த்துக் கொதிக்க விட வேண்டும்.

இப்பொழுது தனியாக ஒரு கடாயில் மூன்று ஸ்பூன் எண்ணெய் சேர்த்து கடுகு, உளுத்தம் பருப்பு, சிறிதளவு கறிவேப்பிலை, ஒரு வர மிளகாய், சிறிதளவு பெருங்காயத்தூள் சேர்த்து தாளித்துக் கொள்ள வேண்டும். தாளித்ததை கொதித்துக் கொண்டிருக்கும் சாம்பாரின் மீது சேர்க்கவும். பொடியாக நறுக்கிய கொத்தமல்லியை இதன் மீது தூவி இறக்கி விடலாம்.

சாம்பார் பொடி இப்படி வீட்டில் நீங்களே தயாரித்து பாருங்கள்… ஒரு போதும் கடையில் இனி வாங்க மாட்டீர்கள்…

இதனை இட்லியுடன் சூடாக பரிமாறினால் சுவையாக இருக்கும் தோசை மற்றும் உப்புமாவிற்கும் பரிமாறலாம். கத்தரிக்காய், உருளைக்கிழங்கு என்று மட்டும் இல்லாமல் கேரட், முருங்கைக்காய் என விரும்பிய காய்கறிகளையும் சேர்க்கலாம்.

அவ்வளவுதான் சுடச்சுட சுவையான இட்லி சாம்பார் தயார்!!!

Exit mobile version