இட்லி ஆரோக்கியமான ஒரு காலை உணவாகும். எண்ணெய் எதுவும் இல்லாமல் ஆவியில் வேகவைத்து எடுக்கப்படும் இட்லி சிறந்த காலை உணவாக கருதப்படுகிறது. இந்த இட்லியில் வழக்கமான இட்லி போல இல்லாமல் ராகி சேர்த்து செய்யும் போது அந்த இட்லி உடலுக்கு மிகவும் நல்லது. உடல் ஆரோக்கியத்திற்கு நன்மை தரும் இந்த ராகி இட்லி சுவை நிறைந்ததாக இருக்கும். மேலும் மிருதுவானதாகவும் இருக்கும். வாருங்கள் இந்த மிருதுவான ராகி இட்லியை எப்படி செய்யலாம் என்பதை பார்ப்போம்.
சுலபமா செய்யலாம் கிராமத்து சுவையில் காரசாரமான நண்டு குழம்பு…!
ராகி இட்லி செய்வதற்கு முதலில் ஒன்றரை கப் அளவு முழு கேப்பையை எடுத்து கொள்ள வேண்டும். இதனுடன் முக்கால் கப் அளவு இட்லி அரிசி சேர்த்துக் கொள்ளவும். அரை கப் உளுந்து மற்றும் ஒரு ஸ்பூன் அளவு வெந்தயம் ஆகியவற்றையும் சேர்த்துக் கொள்ளவும் இப்பொழுது இவை அனைத்தையும் தண்ணீரில் ஐந்து முறை நன்கு அலசி கொள்ளவும் கேப்பையில் அதிக தூசிகள் இருக்க வாய்ப்பு இருக்கிறது எனவே இதனை நன்கு அலசிய பிறகு தண்ணீர் ஊற்றி ஊற வைக்க வேண்டும் கேப்பை மற்றும் அரிசி அனைத்தும் குறைந்தது ஆறு மணி நேரம் ஊற வேண்டும்.
இவை அனைத்தும் ஆறு மணி நேரம் ஊறிய பிறகு இவற்றுடன் அரைக்கப் அளவு அவள் சேர்த்து 10 நிமிடங்கள் ஊற வைக்கவும் அவள் சீக்கிரம் ஊறிவிடும் எனவே இறுதியாக பத்து நிமிடங்கள் ஊறவைத்தால் போதும் இப்பொழுது நன்கு உரிய அனைத்தையும் ஒரு மிக்ஸி ஜாரில் சேர்த்து அரைத்துக் கொள்ள வேண்டும் கிரைண்டரிலும் அரைத்துக் கொள்ளலாம். மாவை நன்கு அரைத்த பிறகு தேவையான அளவு உப்பு சேர்த்து இதனை நன்கு கரைத்து மூடி வைக்கவும் முதல் நாள் இரவு மாவை கரைத்து வைத்தால் மறுநாள் காலை மாவினை இட்லிக்கு ஊற்றிக் கொள்ளலாம் மாவை கைகளால் கரைக்க வேண்டும் அப்பொழுதுதான் மாவு புளிக்கும் மாவு நன்கு புளித்து பொங்கி வந்ததும் இதனை ஒரு இட்லி பாத்திரத்தில் ஊற்றி வேக வைத்து எடுத்துக்கொள்ளலாம் வழக்கமான இட்லி போலவே இது அனைத்து வகையான சட்னி சாம்பர்களுக்கும் அட்டகாசமாக இருக்கும்.
சட்டுனு செய்யலாம் சத்தான சுவையான காலை நேர உணவு ராகி ரொட்டி!
அவ்வளவுதான் சத்தான ராகி இட்லி தயார்…!