தினமும் காலை உணவாக ஏதாவது ஒரு சாலட் எடுத்துக் கொள்வது உடலுக்கு நல்லது. அதிக எண்ணெயில் வறுத்த, பொறுத்த உணவு இல்லாமல் உங்களுடைய நாளை ஆரோக்கியமாக தொடங்க வேண்டும். அதிலும் குறிப்பாக அந்த நாளை இன்னும் சிறப்பாக தொடங்க வேண்டும் என்று விரும்பினீர்கள் என்றால் நீங்கள் காலையில் ஏதேனும் சாலடு உணவாக எடுத்துக் கொள்ளலாம். குறிப்பாக இந்த கொண்டைக்கடலை சாலட் உங்களுக்கு அந்த நாளுக்கான ஆற்றலை வழங்கி உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள உதவுகிறது. வாருங்கள் இந்த எளிமையான கொண்டைக்கடலை சாலட் எப்படி செய்யலாம் என்பதை பார்க்கலாம்.
நன்மைகள் நிறைந்த வெள்ளரிக்காய் சாலட்.. வாரத்தில் 4 முறையாவது இதை எடுத்துக் கொள்ளுங்கள்!
கொண்டைக்கடலை சாலட் செய்வதற்கு முதலில் அரை கப் அளவு வெள்ளை கொண்டை கடலையை எடுத்துக் கொள்ள வேண்டும். இந்த வெள்ளை கொண்டைக்கடலையை முதல் நாள் இரவை ஊறவைத்து விடவும். இப்பொழுது ஒரு குக்கரில் ஊறவைத்த கொண்டைக்கடலையுடன் தேவையான அளவு உப்பு சேர்த்து அந்த கொண்டைக்கடலை மூழ்கும் அளவிற்கு தண்ணீர் ஊற்றிக் கொள்ள வேண்டும். இப்பொழுது இந்த குக்கரை மூடி விசில் போட்டு மிதமான தீயில் இரண்டு விசில் வரும் வரை வைக்க வேண்டும். கொண்டைக்கடலை அதிகம் வெந்து குழைந்து விடக்கூடாது. கொண்டை கடலையை வேக வைத்த பிறகு ஒரு பவுலின் ஒரு முழு எலுமிச்சை பழத்தை பிழிந்து அதன் சாறை எடுத்துக் கொள்ளவும். இதனுடன் ஒரு மேஜை கரண்டி அளவிற்கு ஆலிவ் ஆயில் சேர்க்க வேண்டும். கால் டீஸ்பூன் உப்பு மற்றும் சிறிதளவு மிளகுத்தூள் ஆகியவற்றை சேர்த்து இதனை நன்கு கலந்து கொள்ள வேண்டும். இப்பொழுது இதனை தனியாக வைத்து விடலாம்.
இப்பொழுது ஒரு பவுலின் வேகவைத்த கொண்டைக்கடலையை சேர்த்து கொள்ள வேண்டும். அதனுடன் ஒரு வெங்காயம், ஒரு குடைமிளகாய், ஒரு வெள்ளரிக்காய், ஒரு தக்காளி ஆகியவற்றை சேர்த்துக் கொள்ள வேண்டும். இவை அனைத்தையும் ஒரே அளவில் பொடி பொடியாக நறுக்கி சேர்த்துக் கொள்ளவும். இதனுடன் பொடியாக நறுக்கிய கொத்தமல்லி தழையை தூவி விட வேண்டும். தேவையான அளவு உப்பு சேர்த்துக் கொள்ளவும். இறுதியாக நாம் ஏற்கனவே தயார் செய்து வைத்திருக்கும் எலுமிச்சை சாறு ஊற்றி அனைத்தையும் நன்கு கலந்து விட வேண்டும். இந்த நிலையில் உங்களுக்கு மிளகுத்தூள் அல்லது சாட் மசாலா தேவைப்பட்டால் சேர்த்துக் கொள்ளலாம். அவ்வளவுதான் ஆரோக்கியமான கொண்டை கடலை சாலட் தயார்…!