சத்துக்கள் நிறைந்த பீட்ரூட் சட்னி சுவையாக இப்படி செய்து பாருங்கள்!

பீட்ரூட் உடலுக்கு தேவையான அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் நிறைந்த உணவு பொருள் ஆகும். பீட்ரூட்டில் உடலுக்கு அவசியமான வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் நிறைந்து உள்ளது. இது ரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்த உதவுகிறது. மேலும் உடலில் செரிமான ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது. ரத்த சோகை உள்ளவர்களுக்கு ரத்த சோகை சரி செய்திட பீட்ரூட் அதிக அளவு துணை புரிகிறது. மூளையின் செயல் திறனை அதிகரிக்கும் ஆற்றல் பீட்ரூட்டிற்கு உண்டு. இத்தனை சத்துக்கள் நிறைந்த பீட்ரூட் வைத்து எப்படி சுவையான பீட்ரூட் சட்னி செய்யலாம் என்பதை பார்க்கலாம்.

அடிக்கடி உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள் உடல் சுறுசுறுப்பை அதிகரிக்கும் பிரண்டை சட்னி…!

பீட்ரூட் சட்னி செய்வதற்கு ஒரு கடாயில் இரண்டு டேபிள் ஸ்பூன் அளவிற்கு எண்ணெய் சேர்க்கவும். எண்ணெய் காய்ந்ததும் அதில் ஆறு வர மிளகாய்களை சேர்த்து வறுத்துக் கொள்ளவும். அதனுடன் அரை எலுமிச்சை அளவு புளி சேர்த்து அதையும் எண்ணெயில் வறுக்கவும். பிறகு இரண்டு கப் அளவு துருவிய பீட்ரூட்டை சேர்த்து எண்ணெயில் நன்றாக வதக்க வேண்டும். பீட்ரூட் வதங்கும் பொழுதே இதற்கு தேவையான உப்பை சேர்த்துக் கொள்ள வேண்டும். இதை நன்றாக வதக்கிய பிறகு ஆறவிடவும்.

அருமையான கதம்ப சட்னி…! இந்த சட்னி ஒரு முறை செஞ்சு பாருங்க உங்க வீட்ல எல்லாரும் அசந்து போய்டுவாங்க..!

பீட்ரூட் நன்கு ஆறியதும் இதனை ஒரு மிக்ஸி ஜாரில் சேர்த்துக் கொள்ளவும். கால் கப் அளவு தண்ணீர் விட்டு இதனை மைய அரைத்து எடுத்துக்கொள்ள வேண்டும். அரைத்த சட்னியை ஒரு பவுலில் சேர்க்கவும். இப்பொழுது ஒரு தாளிக்கும் கரண்டியில் இரண்டு ஸ்பூன் அளவு எண்ணெய் சேர்த்து எண்ணெய் காய்ந்ததும் அதில் இரண்டு ஸ்பூன் உளுத்தம் பருப்பு, சிறிதளவு பெருங்காயத்தூள், ஒரு டீஸ்பூன் அளவிற்கு தாளிப்பு வடகம், சிறிதளவு கருவேப்பிலை ஆகியவற்றை சேர்த்து தாளித்துக் கொள்ளவும். தாளிப்பு வடகம் இல்லை என்றால் கடுகு மற்றும் சீரகம் சேர்த்துக் கொள்ளலாம். இவற்றை தாளித்த பிறகு இதனை சட்னியுடன் சேர்த்து கலந்து கொள்ளவும். அவ்வளவுதான் சுவையான பீட்ரூட் சட்னி தயா.ர் இது இட்லி, தோசை என அனைத்திற்கும் அட்டகாசமாக இருக்கும்.