அடிக்கின்ற வெயிலுக்கு இதமாக என்னதான் ஐஸ்கிரீம், பழச்சாறுகள், கூல்டிரிங்ஸ் என நாம் குடித்தாலும் இளநீருக்கு நிகராக எதுவுமே இல்லை என்று சொல்லலாம். ஏனெனில் இளநீரின் சுவை அனைவருக்கும் பிடிக்கும் . சுவை மட்டுமின்றி இளநீரில் பல நன்மைகளும் நிறைந்து இருக்கிறது. இளநீர் குடித்தால் உடனடியாக புத்துணர்ச்சியாக உணர முடியும்.
ஆடி அமாவாசை அன்று வடை, பாயசம் இப்படி செய்து பாருங்கள்…!
இளநீரில் புரதம், கொழுப்புச்சத்து, நார்ச்சத்து, இரும்புச்சத்து, பொட்டாசியம், கார்போஹைட்ரேட், கால்சியம் என அனைத்து சத்துக்களும் நிறைந்துள்ளது. ரத்த அழுத்தம் உடையவர்களுக்கு இளநீர் ரத்த அழுத்தத்தை குறைத்திடும். மேலும் வயிற்றுப்போக்கு உள்ளவர்கள் இளநீரை குடிப்பதால் வயிற்றுப்போக்கை சரி செய்யவும் முடியும், நீரிழப்பையும் ஈடுகட்ட முடியும். சிறுநீரகக் கல், சிறுநீரகத் தொற்று என சிறுநீரகம் சம்பந்தப்பட்ட பிரச்சனைகளையும் இளநீர் சரி செய்திடும். இப்படி பல்வேறு நன்மைகளை உடைய இளநீரை வைத்து மிக சுவையான ஒரு இளநீர் பாயாசம் எப்படி செய்யலாம் என்பதை பார்ப்போம்.
இளநீர் பாயாசம் செய்ய முதலில் 50 கிராம் முந்திரியை தண்ணீரில் ஊற வைத்துக் கொள்ள வேண்டும். முந்திரி சிறிது நேரம் ஊறிய பின்பு இதனை மிக்ஸியில் அரைத்து எடுத்துக் கொள்ள வேண்டும். இப்பொழுது மூன்று இளநீரை உடைத்து அதன் இளநீர் தண்ணீரையும், வழுக்கை (வழவழப்பான தேங்காய் பகுதி) எடுத்துக்கொள்ள வேண்டும். அடுப்பில் ஒரு லிட்டர் பாலை காய்ச்சி கொள்ள வேண்டும். ஏற்கனவே அரைத்து வைத்த முந்திரியை சிறிது தண்ணீரில் சேர்த்து பாலில் ஊற்றி கொதிக்க விட வேண்டும்.
நான்கு ஸ்பூன் கஸ்டர்ட் பவுடர் கொஞ்சம் தண்ணீரில் கரைத்து கட்டி படாமல் அடுப்பில் வைத்து சிறிது நேரம் காய்ச்சி ஆற வைக்க வேண்டும். இப்பொழுது சுவைக்கேற்ப மில்க் மெயிட் மற்றும் காய்ச்சி ஆற வைத்த கஸ்டர்ட் பவுடர் இரண்டையும் முந்திரியுடன் சேர்த்து கொதிக்க விட வேண்டும். அடுப்பு குறைந்த தீயில் மட்டுமே இருக்க வேண்டும். இவை அனைத்தும் கொதித்ததும் அடுப்பில் இருந்து இறக்கி விடலாம்.
இந்த ஆடி வெள்ளி அன்று பூஜை நெய்வேத்தியத்திற்கு பாசிப்பருப்பு பாயாசம் இப்படி செய்து பாருங்கள்…!
இப்பொழுது இதில் 250 கிராம் சீனி சேர்த்து கலக்கி குங்குமப்பூ சிறிதளவு சேர்க்க வேண்டும். இவை ஆறிய பின்பு ஏற்கனவே எடுத்து வைத்திருக்கும் இளநீரை சேர்க்கவும். இளநீர் வழுவை மிக்ஸியில் லேசாக ஒரு சுற்று மட்டும் சுற்றி தயார் செய்திருக்கும் பால் மற்றும் இளநீருடன் சேர்த்துக் கொள்ளவும். இதன் மேல் நீங்கள் விருப்பப்பட்ட நட்ஸ்களை தூவி கொள்ளலாம். இப்பொழுது இந்த இளநீர் பாயசத்தை பிரிட்ஜில் வைத்து குளிர வைத்து பரிமாறலாம் .
அவ்வளவுதான் சுவையான இளநீர் பாயாசம் தயார்!