வாவ்! முட்டையை வைத்து முட்டை பொரியல் ஒரு முறை வித்தியாசமாக இப்படி செய்து பாருங்கள்!

முட்டை பொரியல் சுவையான ஒரு சைடு டிஷ் ரெசிபி ஆகும். பெரும்பாலும் ரசம் சாதத்துடன் இந்த முட்டை பொரியல் மிக அருமையாக இருக்கும். ஆனால் முட்டையை வைத்து எக் புர்ஜி எனப்படும் இந்த முட்டை பொரியலை இப்படி செய்தால் இதனை சப்பாத்தி, பூரி, ரொட்டி, வெள்ளை சாதம், பிரட் என அனைத்து வகையான உணவுகளுக்கும் மிக அருமையான சைட் டிஷ் ஆக இருக்கும். இந்த முட்டை பொரியலை செய்வதும் மிக சுலபம்.

ஆரோக்கியம் நிறைந்த கொண்டைக்கடலை வைத்து சூப்பரான சத்தான சன்னா மசாலா கிரேவி…!

இந்த முட்டை பொரியல் செய்வதற்கு முதலில் இரண்டு முட்டைகளை உடைத்து ஊற்றி நன்கு அடித்துக் கொள்ள வேண்டும். இதில் கால் டீஸ்பூன் மஞ்சள் தூள் மற்றும் கால் டீஸ்பூன் உப்பு சேர்த்து அடித்துக் கொள்ளவும். முட்டையை நேரடியாக கடாயில் சேர்க்காமல் அடித்து சேர்ப்பதால் நன்கு மிருதுவாக உப்பி இருக்கும்.

இப்பொழுது கடாயில் இரண்டு ஸ்பூன் அளவு எண்ணெய் சேர்த்து அதனுடன் அரை ஸ்பூன் சீரகம், கறிவேப்பிலை சேர்த்துக் கொள்ள வேண்டும். சீரகம் நன்கு பொரிந்த பிறகு வெங்காயத்தை பொடி பொடியாக நறுக்கி முக்கால் கப் அளவிற்கு இதனுடன் சேர்க்க வேண்டும். வெங்காயம் நல்ல பொன்னிறமாகும் வரை வதக்க வேண்டும். வெங்காயம் வதங்கும் பொழுதே முக்கால் ஸ்பூன் அளவிற்கு இஞ்சி பூண்டு விழுதை சேர்த்து வதக்கவும். ஒரு பச்சை மிளகாயை பொடியாக நறுக்கி இதனுடன் சேர்த்துக் கொள்ள வேண்டும். ஒரு தக்காளியை பொடியாக நறுக்கி சேர்க்கவும். விருப்பப்பட்டால் பாதி அளவு குடைமிளகாயையும் இதனுடன் சேர்த்துக் கொள்ளலாம்.

அரை ஸ்பூன் மிளகாய்த்தூள், ஒரு ஸ்பூன் கரம் மசாலாத்தூள் ஆகியவற்றை சேர்த்துக் கொள்ளவும். மசாலாவின் பச்சை வாசனை போன பிறகு ஏற்கனவே அடித்து வைத்திருக்கும் முட்டையை இதனுடன் சேர்க்கவும். முட்டையை ஊற்றிய உடனேயே கரண்டி வைத்து கிளறாமல் சிறிது வெந்த பிறகு கரண்டியை கொண்டு கிளறி விடவும்.

முட்டை நன்கு வெந்த பிறகு கொத்தமல்லி இலை தூவி இறக்கி விடலாம். அதிக நேரம் முட்டையை சமைத்தால் எது கடினமாக ரப்பர் போல மாறிவிடும் எனவே நன்கு மென்மையாக வெந்த உடனேயே அடுப்பை நிறுத்தி விடலாம்.

முட்டை வைத்து சுவையான உடைத்து ஊற்றிய முட்டை குழம்பு… மறக்காம செய்து பாருங்கள்!

அவ்வளவுதான் அட்டகாசமான சைடிஷ் முட்டை பொரியல் தயார்!

Exit mobile version