கருவாட்டுக் குழம்பு, கருவாட்டுத் தொக்கு இவற்றை செய்யும் பொழுதே அதன் மணம் பக்கத்து வீட்டில் உள்ளவர்களையும் சுண்டி இழுக்கும் அளவிற்கு இருக்கும். அதுவும் கிராமத்து முறையில் செய்யும் கருவாட்டுத் தொக்கு என்றால் சொல்லவே வேண்டாம். இதன் மணமும் சுவையும் அத்தனை அட்டகாசமாக இருக்கும். குறிப்பாக நெத்திலி கருவாடு வைத்து செய்யும் இந்த கருவாட்டுத் தொக்கு யாருக்கு தான் பிடிக்காது? வாருங்கள் சுவையான இந்த கருவாட்டுத் தொக்கை எப்படி செய்யலாம் என்பதை பார்க்கலாம்.
நெத்திலி கருவாட்டு தொக்கு செய்வதற்கு முதலில் 150 கிராம் கருவாட்டை எடுத்து அதன் தலைப்பகுதியை கிள்ளி சுத்தம் செய்யவும். இப்பொழுது இதனை கொதிக்கும் வெண்ணீரில் 10 நிமிடங்கள் ஊறவைத்துக் கொள்ள வேண்டும். கருவாட்டை ஊறவைத்த பிறகு இரண்டு மூன்று முறை தண்ணீரில் நன்றாக அலசி எடுத்துக்கொள்ள வேண்டும். பிறகு ஒரு கடாயில் மூன்று மேசை கரண்டி நல்லெண்ணெய் சேர்க்கவும். எண்ணெய் காய்ந்ததும் பொடியாக நறுக்கிய பூண்டு பற்கள் ஒரு மேசை கரண்டி அளவு சேர்த்து வதக்கவும். இதனுடன் சிறிதளவு கறிவேப்பிலை சேர்த்துக் கொள்ளவும்.
கிராமத்து சுவையில் ஊரே மணக்கும் கருவாட்டுக் குழம்பு! ஒருமுறை இப்படி செஞ்சு பாருங்க!
பிறகு நீளவாக்கில் நறுக்கிய 25 சின்ன வெங்காயங்களை சேர்த்து நன்கு வதக்கிக் கொள்ள வேண்டும். வெங்காயம் ஓரளவு வதங்கியதும் தட்டி வைத்திருக்கும் இஞ்சி பூண்டு விழுது 2 ஸ்பூன் சேர்த்து அதையும் நன்கு வதக்க வேண்டும். பிறகு பொடியாக நறுக்கிய நான்கு தக்காளி பழங்களை சேர்த்து வதக்கி விடவும். தக்காளி வதங்கி மென்மையானதும் இதில் மசாலாக்களை சேர்க்கலாம். அரை ஸ்பூன் மஞ்சள் தூள், 4 ஸ்பூன் மிளகாய்த்தூள் ஆகியவற்றை சேர்த்துக் கொள்ள வேண்டும். கருவாடு சேர்த்த பிறகு உப்பு பார்த்து அதன் பிறகு உப்பு சேர்க்கவும் கருவாட்டில் ஏற்கனவே உப்பு இருப்பதால் உப்பு சேர்க்கும் பொழுது எப்பொழுதும் கவனமாக இருக்க வேண்டும்.
இப்பொழுது மசாலாக்களின் பச்சை வாசனை போகும் வரை வதக்கி விடவும். மசாலாக்கள் பச்சை வாசனை போனதும் நாம் சுத்தம் செய்து வைத்திருக்கும் கருவாட்டை சேர்த்து சிறிது நேரம் கிளறி விடவும். இதில் சிறிதளவு தண்ணீர் ஊற்றி மூடி வைத்து எண்ணெய் பிரிந்து வரும் வரை வைக்கவும். எண்ணெய் பிரிந்து வந்ததும் கறிவேப்பிலை தூவி இறக்கி விடலாம். அவ்வளவுதான் அட்டகாசமான சுவையில் நெத்திலி கருவாடு தொக்கு தயாராகி விட்டது.