கிராமத்து சுவையில் ஊரே மணக்கும் கருவாட்டுக் குழம்பு! ஒருமுறை இப்படி செஞ்சு பாருங்க!

அசைவ உணவு பிரியர்கள் மீன், சிக்கன், மட்டன், இறால், நண்டு என அனைத்து வகையான அசைவ உணவுகளையும் விரும்பி சாப்பிட்டாலும் அனைவருக்கும் மிகவும் பிடித்தமான மற்றும் ஒரு குழம்பு வகை தான் கருவாட்டு குழம்பு. முருங்கைக்காய், கத்தரிக்காய் போட்டு கிராமத்து முறையில் வைக்கும் கருவாட்டு குழம்புக்கு ரசிகர் பட்டாளம் ஏராளம். இந்தக் கருவாட்டுக் குழம்பின் மணமோ பசிக்காதவருக்கு கூட பசியை தூண்டும் வகையில் இருக்கும். இப்பொழுது இந்த கருவாட்டுக் குழம்பை கிராமத்து முறையில் எப்படி செய்வது என்பதை பார்ப்போம்.

கிராமத்து ஸ்டைலில் ஆவி பறக்க மட்டன் குழம்பு இப்படி செஞ்சு அசத்துங்க!

கருவாட்டுக் குழம்பு செய்வதற்கு முதலில் ஒரு பெரிய எலுமிச்சை பழம் அளவு நெல்லிக்காயை ஊறவைத்து கரைத்துக் கொள்ள வேண்டும். இதனுடன் 4 ஸ்பூன் அளவிற்கு குழம்பு மிளகாய் தூள் சேர்த்து கரைத்துக் கொள்ளவும். ஒரு மண் சட்டியில் சிறிதளவு எண்ணெய் ஊற்றி எண்ணெய் காய்ந்ததும் அதில் 1 கப் சின்ன வெங்காயம், 10 பல் பூண்டு, நன்கு பழுத்த ஒரு பெரிய தக்காளி ஆகியவற்றை சேர்த்து வதக்கிக் கொள்ள வேண்டும். இவற்றை நன்கு வதக்கி பிறகு ஆற வைக்கவும். இந்த வெங்காயம், பூண்டு மற்றும் தக்காளி ஆகியவை ஆறியதும் மிக்ஸியிலோ அல்லது அம்மியிலோ மை போல விழுதாக அரைத்துக் கொள்ள வேண்டும்.

இப்பொழுது ஒரு மண் பாத்திரத்தில் நான்கு மேசை கரண்டி அளவு எண்ணெய் சேர்த்துக் கொள்ள வேண்டும். எண்ணெய் காய்ந்ததும் ஒரு ஸ்பூன் கடுகு, 1/2 ஸ்பூன் வெந்தயம் ஆகியவற்றை சேர்த்து தாளிக்க வேண்டும். தாளித்த பிறகு 10 பல் பூண்டு மற்றும் 15 சின்ன வெங்காயத்தை இடிக்கும் உரலில் இடித்து இதனுடன் சேர்த்து வதக்கிக் கொள்ள வேண்டும். இவை பச்சை வாசனை போகும் வரை வதக்கவும். இதனுடன் இரண்டு கொத்து கறிவேப்பிலையை பொடியாக நறுக்கி சேர்த்துக் கொள்ளவும். பிறகு ஒரு பெரிய பழுத்த தக்காளியையும் பொடியாக நறுக்கி இதனுடன் சேர்த்து வதக்கிக் கொள்ள வேண்டும். இவை அனைத்தும் நன்கு வதங்கிய பிறகு கால் கிலோ அளவு கத்தரிக்காய் மற்றும் ஒரு முருங்கைக்காய் ஆகியவற்றை நறுக்கி இதனுடன் சேர்த்து வதக்கவும்.

இப்பொழுது அலசி சுத்தம் செய்து வைத்திருக்கும் 150 கிராம் அளவிற்கு கருவாட்டையும் இதனுடன் சேர்த்து வதக்கி பிறகு ஏற்கனவே அரைத்து வைத்திருக்கும் விழுதையும் சேர்த்து வதக்கி விட வேண்டும். காய்கறிகள் வெந்த பிறகு கரைத்து வைத்திருக்கும் புளிக்கரைசலை ஊற்றி கொதிக்க விடவும். இந்த நிலையில் உப்பு சரிபார்த்து உப்பு தேவைப்பட்டால் போட்டுக் கொள்ளலாம். கருவாட்டில் ஏற்கனவே உப்பு இருக்கும் குழம்பு கொதித்ததும் கருவாட்டில் உள்ள உப்பு குழம்பில் இறங்கிவிடும் எனவே உப்பு தேவைப்பட்டால் சிறிதளவு மட்டும் சேர்த்துக் கொள்ளலாம்.

கிராமத்து ஸ்டைலில் வீடே மணக்கும் மீன் குழம்பு…! மீன் குழம்பு அடுத்த முறை இப்படி செய்ய மறக்காதீர்கள்!

குழம்பு கொதித்து வற்ற தொடங்கியதும் இதனை அடுப்பில் இருந்து இறக்கி விடலாம் அவ்வளவுதான் ஊரே மணக்கும் கிராமத்து சுவையில் கருவாட்டுக் குழம்பு தயாராகி விட்டது.

Exit mobile version