தீபாவளிக்கு மொறுமொறு ஸ்னாக்ஸ் சுவையான ரிப்பன் பக்கோடா…! சுலபமாக செய்வது எப்படி?

ரிப்பன் பக்கோடா ஒரு சுவையான ஸ்னாக்ஸ் ரெசிபி ஆகும். ரிப்பன் வடிவில் இருக்கும் இந்த ரிப்பன் பக்கோடா சிறிது கார சுவையுடன் மொறுமொறுவென்று அட்டகாசமாக இருக்கும். இதை குழந்தைகள் மிகவும் விரும்பி சாப்பிடுவார்கள். இதை குழந்தைகளுக்கு ஸ்நாக்ஸ் ஆக கொடுத்தும் விடலாம். சாதத்திற்கு சைடிஷ் ஆகவும் வைத்து சாப்பிடலாம். அந்த அளவிற்கு இது சுவையாக இருக்கும். வாருங்கள் இந்த ரிப்பன் பக்கோடா எப்படி செய்யலாம் என்பதை பார்ப்போம்.

மொறு மொறு ஈவ்னிங் ஸ்நாக்ஸ்… தேநீருடன் சாப்பிட டேஸ்டியான வெங்காய பக்கோடா!

ஒரு கப் அளவு உளுந்தம் பருப்பை எடுத்துக் கொள்ள வேண்டும். வாணலியில் இந்த உளுத்தம் பருப்பை குறைவான தீயில் வைத்துக் கொள்ளவும். உளுந்து நன்கு சிவக்கும் வரை வறுத்து எடுத்துக் கொள்ள வேண்டும். அரை கப் அளவு பொட்டுக்கடலையை வெயிலில் காய வைத்துக் கொள்ள வேண்டும். உளுந்து வறுத்த அதே கடாயில் அரை கப் அளவு ஜவ்வரிசி சேர்த்து அதையும் வறுத்து ஆற வைக்கவும். அனைத்தும் ஆறிய பிறகு இவை மூன்றையும் ஒன்றாக கலந்து மெஷினில் கொடுத்து அரைத்து கொள்ளவும். 5 கப் அளவு புழுங்கல் அரிசியை நன்கு தண்ணீரில் கழுவி ஒரு மணி நேரம் ஊற வைத்துக் கொள்ள வேண்டும்.

அரிசி நன்கு ஊறியதும் அதனை கிரைண்டரில் சேர்த்து அதனுடன் 12 வர மிளகாய், ஒரு ஸ்பூன் சோம்பு ஆகியவற்றை சேர்த்து கொஞ்சம் கொஞ்சமாக தண்ணீர் தெளித்து மாவாக ஆட்ட வேண்டும். தேவையான அளவு உப்பு சேர்த்துக் கொள்ள வேண்டும். மாவை ஆட்டிய பிறகு இதனை ஒரு பாத்திரத்தில் எடுத்துக் கொள்ளவும். இப்பொழுது நாம் ஏற்கனவே மெஷினில் கொடுத்து அரைத்த உளுந்து, பொட்டுக்கடலை மற்றும் ஜவ்வரிசி மாவுடன் இதை சேர்த்து நன்கு பிசைந்து கொள்ள வேண்டும். மாவு தண்ணீராக இருக்கக் கூடாது. மாவை நன்றாக பிசைந்த பிறகு முறுக்கு பிழியும் உரலில் ரிப்பன் பக்கோடா அச்சை போட்டு மாவை அதனுள் வைத்துக் கொள்ளவும். கடாயில் ரிப்பன் பக்கோடா பொரிக்க தேவையான அளவு எண்ணெய் சேர்த்து எண்ணெய் நன்கு காய்ந்ததும் அச்சில் உள்ள மாவை எண்ணெயில் பிழிந்து வேகவைத்து எடுக்க வேண்டும்.

ஈஸியாக செய்யலாம் தீபாவளி ஸ்பெஷல் மொறு மொறு ஸ்வீட் பாம்பே காஜா…!

அவ்வளவுதான் சுவையான ரிப்பன் பக்கோடா தயாராகி விட்டது இதே ரிப்பன் பக்கோடா வேறு சில முறைகளிலும் செய்யலாம்.