வாயில் வைத்ததும் கரையும் சுவையான பாதுஷா… இந்த தீபாவளிக்கு செய்து பாருங்கள்!

நீங்கள் இனிப்பு பிரியரா? அப்படி என்றால் இந்த தீபாவளிக்கு அனைவருக்கும் பிடித்தமான பாதுஷாவை நீங்கள் உங்கள் வீட்டில் செய்து பாருங்கள். தீபாவளி என்றாலே பலகாரங்கள் தான் பலருக்கும் நினைவுக்கு வரும். சிலர் பலகாரங்களை வீட்டில் செய்வது கடினம் அதனால் கடைகளில் வாங்கலாம் என்று நினைத்திருப்பார்கள். குறிப்பாக பாதுஷா கடைகளில் வாங்கி மட்டுமே உண்ணலாம் என்று பலரும் நினைத்துக் கொண்டு இருப்பார்கள். ஆனால் அந்த பாதுஷாவை நாம் வீட்டிலேயே செய்ய முடியும். வாருங்கள் சுவையான வாயில் வைத்ததும் கரையும் இந்த பாதுஷாவை எப்படி செய்யலாம் என்பதை பார்ப்போம்.

இந்த தீபாவளிக்கு செய்து பாருங்கள் மொறுமொறு மகிழம்பூ முறுக்கு…!

பாதுஷா செய்வதற்கு முதலில் ஒரு பாத்திரத்தில் ஒன்றரை கப் அளவு மைதாவை சேர்த்துக் கொள்ள வேண்டும். இதனுடன் அரை ஸ்பூன் அளவு பேக்கிங் சோடாவை சேர்க்கவும். இவை இரண்டையும் நன்றாக கலந்து கொள்ள வேண்டும். இப்பொழுது இவற்றுடன் கால் கப் அளவு நெய், இரண்டு டேபிள் ஸ்பூன் தயிர், அரை ஸ்பூன் சர்க்கரை ஆகியவற்றை சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும். பிறகு நான்கு டேபிள் ஸ்பூன் அளவு பால் சேர்த்து இதனை கெட்டியாக பிசைந்து எடுத்துக்கொள்ள வேண்டும். மாவை பிசைந்த பிறகு ஒரு துணியால் மூடி இந்த மாவை ஓரமாக வைத்துவிடலாம்.

இப்பொழுது ஒரு பாத்திரத்தில் ஒரு கப் அளவு சர்க்கரை சேர்த்து அதனுடன் அரை கப் அளவு தண்ணீர் ஊற்றிக் கொள்ள வேண்டும். இதனை நன்றாக கரைத்துக் கொள்ள வேண்டும். கம்பி பதம் வரும் வரை இதனை கொதிக்க விடவும். ஒரு கம்பி பதத்திற்கு வந்த பிறகு சிறிதளவு ஏலக்காய் மற்றும் குங்குமப்பூ சேர்த்து கலந்து கொள்ளவும். இந்த சர்க்கரை பாகு தயாரானதும் இதனை இறக்கி விடலாம். இப்பொழுது ஒரு கடாயில் பாதுஷா பொரிக்க தேவையான அளவு எண்ணெய் சேர்த்துக் கொள்ளவும்.

சூப்பரான இனிப்பு வகை.. இந்த தீபாவளிக்கு செய்து அசத்துங்கள் மொறு மொறு சோமாஸ்…!

நாம் ஏற்கனவே தயார் செய்து வைத்த மாவை சிறுசிறு உருண்டைகளாக உருட்டி நடுவில் லேசாக துளை இட்டு இதனை மிதமான சூட்டில் எண்ணெயில் வைத்து பொரித்து எடுத்துக் கொள்ள வேண்டும். பாதுஷா பொன்னிறமாக பொரித்து எடுத்ததும் நாம் தயார் செய்து வைத்திருக்கும் சர்க்கரை பாகில் சேர்க்கவும். சர்க்கரை பாகில் நான்கு நிமிடங்கள் ஊற வைக்கவும். பாகில் ஊறிய பின்பு இதனை எடுத்து வேறு பாத்திரத்திற்கு மாற்றி விடலாம். அவ்வளவுதான் சுவையான பாதுஷா அட்டகாசமாக தயாராகி விட்டது.

Exit mobile version