இந்த தீபாவளிக்கு செய்து பாருங்கள் மொறுமொறு மகிழம்பூ முறுக்கு…!

தீபாவளி பண்டிகை என்பது பலவகையான பலகாரங்கள், புத்தாடைகள், பட்டாசுகள் என அனைத்தும் நிறைந்த ஒரு முக்கிய பண்டிகையாக கொண்டாடப்படுகிறது. முறுக்குகள், இனிப்பு வகைகள் என பல்வேறு விதமான பலகாரங்கள் தீபாவளி அன்று இடம்பெறும். முறுக்கு வகைகளில் முக்கியமான ஒன்றுதான் மகிழம்பூ முறுக்கு. இது தென்னிந்தியாவின் மிகப் பிரபலமான ஒரு உணவு வகையாகும். அரிசியோடு பருப்புக்களையும் சேர்த்து அரைத்து செய்யப்படும் இந்த மகிழம்பூ முறுக்கு மணமும் சுவையும் நிறைந்ததாக இருக்கும். வாருங்கள் இந்த மகிழம்பூ முறுக்கு எப்படி செய்யலாம் என்பதை பார்ப்போம்.

தீபாவளியன்று ஸ்பெஷல் பலகாரமாக இந்த தட்டை (எள்ளடை) செய்து பாருங்கள்…!

இந்த மகிழம்பூ முறுக்கு செய்வதற்கு முதலில் நான்கு கப் அளவு பச்சரிசியை ஊற வைத்து கழுவி வெயிலில் நன்கு காய வைக்க வேண்டும். ஒன்றரை கப் கடலைப்பருப்பு, ஒரு கப் பாசிப்பருப்பு இரண்டு பருப்புகளையும் குறைவான தீயில் வைத்து வாசனை வரும் வரை வறுக்க வேண்டும்.‌ இரண்டையும் தனித்தனியாக வறுத்து ஆற வைக்கவும்.

இப்பொழுது காய்ந்த அரிசியுடன் வறுத்து வைத்திருக்கும் பருப்புகளை சேர்த்து மிஷினில் கொடுத்து மாவாக அரைத்துக் கொள்ள வேண்டும். அரைத்த மாவை நன்கு சலித்து வைக்கவும். இப்பொழுது இந்த மாவில் தேவையான அளவு உப்பு மற்றும் சிறிதளவு எள் சேர்த்து கலந்து கொள்ள வேண்டும். இவற்றோடு 50 கிராம் அளவு வெண்ணெய் மற்றும் 2 ஸ்பூன் அளவு மிளகாய் தூள் ஆகியவற்றை சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும்.

கொஞ்சம் கொஞ்சமாக தண்ணீர் விட்டு மாவை பக்குவமாக பிசைந்து கொள்ள வேண்டும். அதிக தண்ணீராகவும் கெட்டியாகவும் இல்லாமல் பிசைந்து கொள்ள வேண்டும். இப்பொழுது அடி கனமான அகலமான வானலியில் எண்ணெய் காய வைத்துக் கொள்ளவும். எண்ணெய் காய்ந்ததும் பிசைந்து வைத்த மாவை முறுக்கு பிழியும் அச்சில் உள்ள மகிழம்பூ அச்சில் பிழிந்து எண்ணெயில் சேர்த்து பொரித்து எடுக்க வேண்டும். இருபுறமும் திருப்பி விட்டு நன்றாக வேக வைக்கவும். அடுப்பை மிதமான தீயில் வைத்து பொரித்து எடுக்க வேண்டும்.

ஈஸியா செய்யலாம் இந்த தீபாவளிக்கு சுவையான ரவா லட்டு…!

இதை தேங்காய்ப்பால் சேர்த்தும் வேறு விதமாக செய்யலாம். அவ்வளவுதான் சுவையான மொறுமொறுவென மகிழம்பூ முறுக்கு தயார்!

Exit mobile version