இட்லி தோசை என்று டிபன் வகைகளை விரும்பி சாப்பிடுபவர்கள் தினமும் புதிது புதிதாக சட்டினி இருந்தால் நன்றாக இருக்கும் என்று நினைப்பார்கள். ஒரே மாதிரியான சட்னிகளை சாப்பிட்டால் அலுப்பு தட்டி விடும். அதனால் சட்னிகளில் ஏதேனும் புதுமை செய்தால் ஆர்வத்தோடு சாப்பிடுவார்கள். அதே சமயம் அந்த சட்னியும் உடலுக்கு ஆரோக்கியம் தரக்கூடியது என்றால் யாருக்குத்தான் பிடிக்காது. அப்படி ஒரு அருமையான சட்னி தான் கறிவேப்பிலை சட்னி.
நன்மைகள் நிறைந்த கறிவேப்பிலையைக் கொண்டு ஊரே மணக்கும் கறிவேப்பிலை சாதம் இப்படி செய்து பாருங்கள்!
கறிவேப்பிலை சருமம் கூந்தல் என அனைத்திற்கும் நல்ல நன்மைகளை தரக்கூடியது. நல்ல முடி வளர்ச்சி வேண்டும் என்று நினைப்பவர்கள் உணவில் கறிவேப்பிலை அதிகம் சேர்த்துக் கொள்ள வேண்டும் என்று கூறப்படுகிறது. ஆனால் பலர் இந்த கறிவேப்பிலையை உணவோடு சேர்த்து சாப்பிடாமல் ஒதுக்கி வைத்து விடுவார்கள். கறிவேப்பிலையை தூக்கி எறியாமல் உணவோடு சேர்த்து சாப்பிட வேண்டும். இந்த கறிவேப்பிலையை வைத்து கறிவேப்பிலை சாதம், கறிவேப்பிலை பொடி, கறிவேப்பிலை சட்னி என்று பலவகையான ரெசிபிகளை செய்யலாம். இப்பொழுது டிபன் வகைகளுக்கு சூப்பரான இந்த கறிவேப்பிலை சட்டினியை எப்படி செய்யலாம் என்பதை பார்ப்போம்.
கறிவேப்பிலையை பறித்து ஒரு கைப்பிடி அளவு வரும் அளவிற்கு உருவி சுத்தம் செய்து வைத்துக் கொள்ள வேண்டும். இந்த சுத்தம் செய்த கறிவேப்பிலையுடன் ஆறு வர மிளகாய், ஒரு ஸ்பூன் சீரகம், மற்றும் அரை ஸ்பூன் மிளகு சேர்த்துக் கொள்ள வேண்டும்.
பூண்டினை தோல் உரித்து இதனுடன் ஆறு பற்கள் சேர்த்துக் கொள்ளவும். தோல் உரித்த சின்ன வெங்காயம் 12 சேர்த்துக் கொள்ளவும். இதனுடன் ஒரு தக்காளியை நான்காக நறுக்கி சேர்த்துக் கொண்டு இரண்டு ஸ்பூன் அளவிற்கு தேங்காய் பூவினை சேர்க்கவும் இப்பொழுது அரை நெல்லிக்காய் அளவிற்கு புளி மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்துக் கொள்ளவும் இவை அனைத்தையும் மை போல அரைத்துக் கொள்ள வேண்டும்.
இப்பொழுது ஒரு கடாயில் 5 ஸ்பூன் எண்ணெய் காய வைத்து கடுகு மற்றும் உளுத்தம் பருப்பு சேர்த்து தாளித்துக் கொள்ள வேண்டும். இவை பொரிந்த பின் ஏற்கனவே அரைத்து வைத்த விழுதை இதனுடன் சேர்த்துக் கொள்ளவும் சிறிதளவு தண்ணீர் சேர்த்து நன்கு கொதிக்க விட வேண்டும் பச்சை நிறம் மாறி கெட்டியாக வரும் பொழுது இறக்கி விடலாம்.
வல்லமை தரும் வல்லாரைக் கீரையில் இப்படி துவையல் அரைத்துப் பாருங்கள்…! குழந்தைகள் கூட சாப்பிடுவார்கள்!
இதில் தக்காளி, பூண்டு, வெங்காயம் ஆகியவற்றை மிக்ஸியில் சேர்க்காமல் தாளித்ததோடு சேர்த்து வதக்கியும் இந்த சட்னியை செய்யலாம். இந்த கறிவேப்பிலை சட்னி இரும்புச்சத்து நிறைந்தது ரத்த சோகையை சரி செய்யக்கூடியது.
அவ்வளவுதான் சுவையான கறிவேப்பிலை சட்னி தயார்!