நன்மைகள் நிறைந்த வெள்ளரிக்காய் சாலட்.. வாரத்தில் 4 முறையாவது இதை எடுத்துக் கொள்ளுங்கள்!

வெள்ளரிக்காய் 96% நீர்ச்சத்து நிறைந்துள்ள ஒரு உணவுப் பொருளாகும். வெள்ளரிக்காயில் உள்ள நீர்ச்சத்து நம் ஒரு நாளைக்கு தேவையான நீர் தேவையை நிறைவு செய்வதில் பெரும் பங்கு வகிக்கிறது. வெள்ளரிக்காயிலிருந்து கிடைக்கும் சத்தானது நமது உடலில் உள்ள செல்களுக்கு தேவையான ஊட்டச்சத்துக்களை அளிக்கிறது இதனால் நம் உடல் நாள் முழுவதும் சோர்வின்றி சுறுசுறுப்புடன் இயங்குவதற்கு தேவையான ஆற்றலை பெற முடிகிறது. இந்த வெள்ளரிக்காய் சாலட் கொழுப்புகள் இல்லாத அதே சமயம் ஊட்டச்சத்து நிறைந்த உணவாகும். இதில் அதிக அளவில் ஆன்டி ஆக்ஸிடென்ட்கள் நிறைந்துள்ளது.

ஆரோக்கியம் நிறைந்த கொண்டைக்கடலை வைத்து சூப்பரான சத்தான சன்னா மசாலா கிரேவி…!

உடல் எடையை குறைக்க வேண்டும் என்று நினைப்பவர்கள் தினமும் கூட காலை உணவாக இந்த வெள்ளரிக்காய் சாலட்டை உண்ணலாம். வெள்ளரிக்காய் நார்ச்சத்து நிறைந்த உணவு எனவே மலச்சிக்கல் தொந்தரவில் இருந்து விடுபட இந்த வெள்ளரிக்காய் நல்ல தீர்வாகும். மேலும் ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை கட்டுப்படுத்துவதிலும் இந்த வெள்ளரிக்காய் முக்கிய பங்காற்றுகிறது.

இப்பொழுது இந்த வெள்ளரிக்காயை வைத்து சுவையான சத்தான வெள்ளரிக்காய் சாலட் எப்படி செய்யலாம் என்பதை பார்ப்போம். ஒரு பெரிய வெள்ளரிக்காயை எடுத்து அதன் தோலினை சீவி பொடியாக நறுக்கிக் கொள்ளவும். ஒரு பெரிய வெங்காயத்தையும் தோல் உரித்து சிறிய கனசதுர வடிவில் நறுக்கிக் கொள்ளவும்.

தக்காளியை இரண்டு எடுத்து கன சதுர வடிவத்தில் நறுக்கி எடுத்துக் கொள்ளவும் (கூடுமானவரை இதில் உள்ள விதைகளை நீக்கி விடலாம்). ஒரு கைப்பிடி அளவு கொத்தமல்லியை எடுத்து அதனையும் பொடி பொடியாக நறுக்கவும். ஒரு சிவப்பு மிளகாய் மற்றும் ஒரு பச்சை மிளகாயை எடுத்து அதில் உள்ள விதைகளை நீக்கி பொடியாக நறுக்கிக் கொள்ளலாம்.

ஹெல்தியான கேப்பை புட்டு.. ஒரு முறை செய்து பாருங்க டிபன் மெனுவில் அடிக்கடி சேர்த்திடுவிங்க!

இப்பொழுது நறுக்கி வைத்த அத்தனை காய்கறிகளையும் ஒரு பவுலில் சேர்த்துக் கொள்ளவும் இதனுடன் ஒரு எலுமிச்சை பழத்தின் சாறு பிழிந்து விடவும். மூன்று மேசைக் கரண்டி அளவு நிலக்கடலையை வறுத்து தோல் உரித்து ஒன்றிரண்டாக உடைத்து இதனுடன் சேர்த்துக் கொள்ளலாம். அரை டீஸ்பூன் அளவு மிளகுத்தூள் மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து அனைத்தையும் ஒன்று சேர நன்கு கலக்க வேண்டும். அவ்வளவுதான் சுவையான சத்தான வெள்ளரிக்காய் சாலட் தயார்!

Exit mobile version