தீபாவளிக்கு செய்து அசத்துங்கள் சுவையான செட்டிநாட்டு மட்டன் குழம்பு…!

மட்டன் குழம்பு தீபாவளி ஸ்பெஷல் ரெசிபி ஆகும். இந்த மட்டன் குழம்பு ஒவ்வொருவரும் வெவ்வேறு விதமாக வைப்பார்கள். செட்டிநாட்டு ஸ்டைலில் வைக்கும் மட்டன் குழம்பு மணம் நிறைந்ததாகவும் சுவையானதாகவும் இருக்கும். இதற்கு அரைத்து சேர்க்கும் மசாலாவின் நறுமணம் வீடே மணக்கும் அளவிற்கு இருக்கும். வாருங்கள் இந்த சுவையான செட்டிநாட்டு ஸ்டைல் மட்டன் குழம்பை எப்படி சுலபமாக செய்யலாம் என்பதை பார்ப்போம்.

மட்டன் குழம்பு செய்வதற்கு முதலில் ஒரு கிலோ அளவு மட்டனை சுத்தம் செய்து வைத்துக் கொள்ள வேண்டும். இப்பொழுது ஒரு கடாயில் ஒரு டேபிள் ஸ்பூன் அளவிற்கு எண்ணெய் சேர்த்து எண்ணெய் காய்ந்ததும் அதில் ஒரு துண்டு பட்டை, மூன்று ஏலக்காய், 3 கிராம்பு, ஒரு ஸ்பூன் சோம்பு, ஒரு ஸ்பூன் சீரகம், நான்கு வர மிளகாய், ஒரு டேபிள் ஸ்பூன் மல்லி ஆகியவற்றை சேர்த்து வதக்கிக் கொள்ள வேண்டும். இவற்றோடு மூன்று டேபிள் ஸ்பூன் தேங்காய் துருவல் மற்றும் முந்திரி ஆகியவற்றையும் சேர்த்து வதக்கி இதனை ஆற விடவும். இவை ஆறியதும் ஒரு மிக்ஸி ஜாரில் சேர்த்து அரைத்து எடுத்துக் கொள்ள வேண்டும். இதுதான் மட்டன் குழம்பிற்கு தேவையான செட்டிநாடு மசாலா.

சூப்பரான இனிப்பு வகை.. இந்த தீபாவளிக்கு செய்து அசத்துங்கள் மொறு மொறு சோமாஸ்…!

இப்பொழுது ஒரு பாத்திரத்தில் ஒரு டேபிள் ஸ்பூன் அளவிற்கு எண்ணெய் சேர்த்து எண்ணெய் காய்ந்ததும் அதில் ஒரு பிரியாணி இலை, கால் ஸ்பூன் அளவுக்கு கடுகு ஆகியவற்றை சேர்த்து தாளித்துக் கொள்ளவும். கடுகு பொரிந்ததும் இவற்றோடு 250 கிராம் அளவு சின்ன வெங்காயத்தை நறுக்கி சேர்த்து நன்கு வதக்கவும். பிறகு ஒரு மேசை கரண்டி அளவிற்கு இஞ்சி பூண்டு விழுது சேர்த்து அதையும் பச்சை வாசனை போகும் அளவிற்கு வதக்க வேண்டும். வெங்காயம் வதங்கி இஞ்சி பூண்டு விழுது பச்சை வாசனை போனதும் அரை ஸ்பூன் மஞ்சள்தூள், இரண்டு ஸ்பூன் அளவிற்கு மிளகாய் தூள் ஆகியவற்றை சேர்த்து வதக்க வேண்டும். இவற்றோடு ஒரு தக்காளியையும் சேர்த்து நன்கு வதக்கவும். தக்காளி வதங்கி மென்மையானதும் சுத்தம் செய்து வைத்திருக்கும் மட்டனை சேர்த்து எண்ணெயில் நன்கு வதக்கி விடுங்கள். மட்டன் நன்கு வதங்கியதும் தேவையான அளவு உப்பு சேர்த்து இதில் ஒரு குக்கரில் சேர்த்து ஒரு டம்ளர் அளவிற்கு தண்ணீர் சேர்த்து குக்கரை மூடி 3 முதல் 4 விசில் வரும் வரை வேக விடவும். விசில் வந்த பிறகு குக்கரை அணைத்து விடலாம். விசில் அடங்கியதும் குக்கரை திறந்து ஒரு கைப்பிடி அளவிற்கு மல்லி தழை சேர்த்து இறக்கினால் சுவையான மட்டன் குழம்பு தயார்.