சுவையான மொறு மொறுப்பான காலிபிளவர் பக்கோடா! ஈவினிங் ஸ்நாக்ஸ்க்கு இப்படி செய்யுங்கள்…

பக்கோடா இந்தியாவின் அனைத்து பகுதிகளிலும் பிரபலமான ஒரு உணவு என்று சொல்லலாம். இன்று என்ன தான் விதவிதமாய் தினமும் புதிது புதிதாய் ஸ்னாக்ஸ் வகைகள் வந்தாலும் இன்றும் பக்கோடா கடைகளில் கூட்டம் அலைமோதுவதை நாம் காண முடிகிறது. காரணம் பக்கோடாவிற்கு என்றும் ரசிகர்கள் உண்டு. பக்கோடாவிலேயே பல வகைகள் உண்டு. அதில் ஒன்றான காலிபிளவர் பக்கோடா எப்படி செய்யலாம் என்பதை பார்ப்போம். இதனை குழந்தைகளும் விரும்பி சாப்பிடுவர்.

குஜராத்தி ஸ்பெஷல் காந்த்வி! சுவை நிறைந்த சிற்றுண்டி ரெசிபி…

காலிபிளவர் பக்கோடா செய்ய முதலில் ஒரு முழு காலிஃப்ளவரை நறுக்கி வைக்க வேண்டும். அடுப்பில் காலிபிளவர் வேக தேவையான அளவு தண்ணீர் சேர்த்து தண்ணீர் சூடானதும் நறுக்கி வைத்த காலிபிளவரை அதில் சேர்க்க வேண்டும். குறைந்தது இந்த காலிபிளவர் 3 நிமிடங்கள் வரை வேக விடவும்.

காலிஃப்ளவர் வெந்த பிறகு இதனை எடுத்து வடிகட்டி வைத்துக் கொள்ளவும். இப்பொழுது ஒரு பௌலில் அரை கப் கடலை மாவு, கால் கப் அரிசி மாவு, கால் கப் சோள மாவு, ஒரு சிட்டிகை கேசரி பவுடர், தேவையான அளவு உப்பு மற்றும் காரத்திற்கு ஏற்ப மிளகாய்த்தூள் ஆகியவற்றை சேர்த்து கலந்து கொள்ளவும்.

இப்பொழுது இந்த மாவில் ஒரு பெரிய வெங்காயத்தை நீளவாக்கில் நறுக்கி சேர்த்துக் கொள்ளவும். ஒரு பச்சை மிளகாயை பொடியாக நறுக்கி இதனுடன் சேர்க்கவும். அரை ஸ்பூன் அளவு இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்க்கவும். இவை அனைத்தையும் நன்கு கலந்த பிறகு. கொஞ்சம் கொஞ்சமாக தண்ணீர் சேர்த்து கலந்து கொள்ளவும். இது பஜ்ஜி மாவு போன்ற பதத்தில் இருக்க வேண்டும்.

இப்பொழுது இதனுடன் நறுக்கி வேக வைத்திருக்கும் காலிஃப்ளவரை சேர்த்து பிசைந்து கொள்ளலாம். காலிஃப்ளவர் தயாரான பிறகு வாணலியில் எண்ணெய் வைத்து எண்ணெய் காய்ந்ததும் பிசைந்து வைத்திருக்கும் காலிபிளவரை கொஞ்சம் கொஞ்சமாக சேர்த்து பொரித்து எடுக்க வேண்டும். நன்கு சிவக்க பொறிக்க வேண்டும். பொரித்து எடுத்த காலிஃப்ளவரை டிஷ்யூ பேப்பரில் வைத்து விடவும். இறுதியாக சிறிதளவு கறிவேப்பிலையை பொரித்து எடுத்து இந்த காலிபிளவர் உடன் சேர்த்து பரிமாறலாம்.

வாவ்..! சத்தான காய்கறிகளை வைத்து சுவையான வெஜிடபிள் போண்டா…!

அவ்வளவுதான் சுவையான மொறுமொறுப்பான காலிஃப்ளவர் பக்கோடா தயாராகிவிட்டது. தேநீருடன் சாப்பிட அருமையான சிற்றுண்டி ஆகும்.