கத்தரிக்காய் பிடிக்காதவர்களை கூட கேட்டு வாங்கி சாப்பிட வைக்கும் சுவையில் அசத்தலான கத்திரிக்காய் மசாலா…!

தினமும் நம்முடைய உணவுப் பழக்க வழக்கத்தில் எவ்வளவு முடியுமோ அவ்வளவு காய்கறிகளை சேர்த்துக் கொள்ளுதல் மிகவும் நல்லது. சிலர் அனைத்து காய்கறிகளையும் விரும்பி உண்டாலும் ஒரு சிலருக்கு சில வகையான காய்களை கண்டாலே பிடிக்காது. அப்படி பலரும் ஒதுக்கும் ஒரு காய்தான் கத்தரிக்காய். கத்தரிக்காய் விருப்ப உணவு பட்டியலில் இடம் பிடிப்பது குறைவுதான். ஆனால் இந்தக் கத்தரிக்காயை நீங்கள் ஒரே ஒரு முறை இப்படி மசாலா செய்து பாருங்கள் அனைவருக்கும் மிகவும் பிடித்த காய்கறி பட்டியலில் கத்தரிக்காயின் இணைந்து விடும்.

தக்காளி இல்லாத அருமையான மிளகு கெட்டி குழம்பு…! இதை செய்து பாருங்க ஒரு பருக்கை கூட மிச்சம் வைக்க மாட்டீங்க…

கத்தரிக்காயில் பல்வேறு ஊட்டச்சத்துக்கள் உள்ளது விட்டமின் சி, இ, இரும்புச்சத்து, பாஸ்பரஸ் போன்ற பல சத்துக்களை உள்ளடக்கியது எலும்பு மற்றும் மூளை வளர்ச்சியில் சிறந்த பங்காற்றுகிறது கத்தரிக்காய் இதயத்தின் தசையை வலுப்படுத்தக் கூடியது. சிறுநீரக கல் பிரச்சனைக்கும் கத்தரிக்காய் நல்ல தீர்வை வழங்குகிறது. இதயத்தின் தசைகளை வலுப்பெற வைக்க கத்தரிக்காயை அடிக்கடி உணவில் சேர்த்துக் கொள்ளலாம். வாருங்கள் இந்த கத்தரிக்காயை வைத்து எப்படி அருமையான மசாலா செய்யலாம் என்பதை பார்ப்போம்.

இதற்கு நல்ல பிஞ்சு கத்தரிக்காயாக பார்த்து வாங்கி 6 கத்தரிக்காயை நீளவாக்கில் கீற்றாக நறுக்கிக் கொள்ள வேண்டும். கத்தரிக்காயை நறுக்கியவுடன் தண்ணீரில் போட்டு வைக்க வேண்டும். இரண்டு தக்காளி மற்றும் ஒரு பெரிய வெங்காயத்தையும் நீளவாக்கில் நறுக்கிக் கொள்ள வேண்டும்.

ஒரு கடாயில் மூன்று மேசைக்கரண்டி எண்ணெய் சேர்த்து அதனுடன் 1 துண்டு பட்டை, 1 பிரியாணி இலை, 1 ஸ்பூன் சோம்பு, 1 ஸ்பூன் உளுத்தம் பருப்பு, சிறிதளவு கருவேப்பிலை ஆகியவற்றை சேர்த்து தாளித்துக் கொள்ள வேண்டும். தாளித்தப்பின் நீளமாக நறுக்கிய வெங்காயத்தைப் போட்டு வதக்க வேண்டும். வெங்காயம் சற்று வதங்கியதும் தக்காளியை போட்டு வதக்கவும்.

இப்பொழுது கத்தரிக்காயை சேர்த்து வதக்கி அதனுடன் மஞ்சள் தூள் கால் ஸ்பூன் சேர்த்துக் கொள்ளவும். அடுப்பு குறைந்த தீயிலேயே இருக்க வேண்டும். பின் ஒரு ஸ்பூன் மல்லி தூள், அரை ஸ்பூன் மிளகாய்த்தூள் சேர்த்துக் கொள்ளவும். இப்பொழுது கத்தரிக்காய் நன்கு கிளறி விடவும். தேவையான அளவு உப்பு சேர்த்துக் கொள்ள வேண்டும். மசாலாத்தூள் கத்தரிக்காயுடன் சேர்ந்து வரும் வரை கிளறிக் கொண்டே இருக்க வேண்டும். காயை அதிகம் குழைத்து விடாமல் மசாலா கத்தரிக்காயுடன் சேர்ந்ததும் இறக்கி விடலாம்.

அடடே என்ன சுவை! சுவையான மாலை நேர சிற்றுண்டி மசாலா பணியாரம்…!

அவ்வளவுதான் சுவையான கத்தரிக்காய் மசாலா தயார்!

Exit mobile version