தக்காளி இல்லாத அருமையான மிளகு கெட்டி குழம்பு…! இதை செய்து பாருங்க ஒரு பருக்கை கூட மிச்சம் வைக்க மாட்டீங்க…

மிளகு கெட்டி குழம்பு பெயரைக் கேட்டாலே வித்தியாசமாக தோன்றலாம் ஆனால் இது ஒரு பாரம்பரியமான குழம்பு வகை தான். தினமும் என்ன குழம்பு வைக்க வேண்டும் என்பதே இல்லத்தரசிகளுக்கு பெரிய கவலையாக இருக்கும். அதுவும் தக்காளி விலை ஏற்றத்திற்குப் பிறகு அதிகமாக தக்காளியை பயன்படுத்தி குழம்பு வைக்க வேண்டும் என்று நினைத்தாலே கவலை தொற்றிக் கொள்ளும். எந்த குழம்பு வைத்தாலும் தக்காளி இல்லாமல் வைக்க முடியாது அப்படியே வைத்தாலும் சுவையாக இருக்காது என்ற குழப்பம் இருக்கலாம். தக்காளி இல்லாமல் அதே சமயம் சுவையாக இந்த மிளகு கெட்டி குழம்பு வைத்து பாருங்கள். அனைவரின் பாராட்டையும் பெறுவதற்கு ஒரு சூப்பரான குழம்பு ரெசிபி இதோ…

அற்புதங்கள் செய்யும் அகத்திக்கீரை சூப்… வாரம் ஒரு முறை இப்படி செய்து சாப்பிட மறக்காதீர்கள்!

மிளகு கெட்டிக் குழம்பு மற்ற எண்ணெய்களை விட நல்லெண்ணெய் சேர்த்து செய்யும் பொழுது சுவையாக மணமாக இருக்கும். எனவே இந்த குழம்பிற்கு நல்லெண்ணையை பயன்படுத்துவது நல்லது.

இந்த மிளகு கெட்டி குழம்பு வைப்பதற்கு முதலில் ஒரு கடாயில் சிறிதளவு எண்ணெய் ஊற்றி எட்டு வர மிளகாய், மூன்று ஸ்பூன் மிளகு, ஒரு ஸ்பூன் சீரகம், ஒரு மேஜை கரண்டி தேங்காய் பூ, 15 முந்திரிப் பருப்பு, சிறிதளவு கறிவேப்பிலை போன்றவற்றை வறுத்து கொள்ளவும். தேங்காயை இறுதியாக வறுத்தால் போதும்.

வறுத்த அனைத்தையும் ஒரு மிக்ஸி ஜாரில் சேர்த்து அரைத்து எடுத்துக் கொள்ளவும். தேவையான அளவு புளி மற்றும் உப்பை ஊற வைக்க வேண்டும் பிறகு கடாயில் கொஞ்சமாக எண்ணெய் சேர்த்து கடுகு, உளுத்தம் பருப்பு, சிறிதளவு கருவேப்பிலை ஆகியவற்றை தாளிக்க வேண்டும். 12 சின்ன வெங்காயங்களை நன்கு வதக்கிக் கொள்ள வேண்டும். ஏற்கனவே மிக்ஸி ஜாரில் அரைத்து வைத்த மசாலாவை இதனுடன் போட்டு வதக்க வேண்டும். எண்ணெய் பிரிந்து வரும் வரை வதக்கி ஊறவைத்து இருக்கும் உப்பு மற்றும் புளியை கரைத்து இதனுடன் சேர்க்க வேண்டும்.

உப்பு, புளி கரைசல் சேர்த்த பின்பு நன்கு கொதிக்க விட வேண்டும் குழம்பு நன்றாக வற்றி வந்த பின்னர் இறக்க வேண்டும். இந்த குழம்பை சூடான சாதத்தில் சிறிது நல்லெண்ணெய் சேர்த்து சாப்பிட்டால் மிகவும் சுவையாக இருக்கும்.

நன்மைகள் நிறைந்த கறிவேப்பிலையைக் கொண்டு ஊரே மணக்கும் கறிவேப்பிலை சாதம் இப்படி செய்து பாருங்கள்!

அவ்வளவுதான் தக்காளியே இல்லாத ஒரு சூப்பரான மிளகு கெட்டி குழம்பு தயார்!

Exit mobile version