வெங்காய பக்கோடா, காலிஃப்ளவர் பக்கோடா என்று பலவகையான பக்கோடாக்களை நீங்கள் பார்த்திருக்கலாம். ஏன் வீட்டிலேயே செய்து சுவைத்திருக்கலாம். என்றாவது பிரட் பக்கோடா செய்து பார்த்திருக்கிறீர்களா? ஆமாம் பிரெட்டை வைத்து மொறுமொறுவென்ற அருமையான பக்கோடா பத்தே நிமிடத்தில் செய்துவிடலாம்.
மாலை நேரத்தில் சூடா செய்து சாப்பிடுங்கள் சுவையான காளான் பக்கோடா…!
மாலை நேரத்தில் சூடான தேநீருடன் இந்த சுவையான மொறு மொறு பக்கோடா வைத்து சாப்பிட்டால் அத்தனை அட்டகாசமாக இருக்கும். மேலும் பள்ளி விட்டு வரும் குழந்தைகளுக்கும் இந்த பிரட் பக்கோடா கொடுத்தால் விரும்பி சாப்பிடுவார்கள். வாருங்கள் இந்த பிரட் பக்கோடா எப்படி செய்யலாம் என்று பார்க்கலாம்.
பிரெட் பக்கோடா செய்வதற்கு நான்கு துண்டுகள் பிரட்டை எடுத்துக் கொள்ள வேண்டும். இதனை தண்ணீரில் நனைத்துக் கொள்ளலாம். பிறகு தண்ணீரை பிழிந்து பிரட்டை ஒரு பவுலில் சேர்க்கவும். இதனுடன் நீளவாக்கில் நறுக்கிய ஒரு பெரிய வெங்காயத்தை சேர்த்துக் கொள்ள வேண்டும்.
அதேபோல் நீளவாக்கில் பொடியாக நறுக்கிய ஒரு கேரட்டை சேர்க்கவும். துருவிய உருளைக்கிழங்கை சேர்த்துக் கொள்ள வேண்டும். ஒரு ஸ்பூன் அளவிற்கு இஞ்சி பூண்டு விழுதை சேர்த்துக் கொள்ளலாம்.
இப்பொழுது கால் டீஸ்பூன் கரம் மசாலா, தேவையான அளவு உப்பு, சிறிதளவு மிளகாய் தூள், மூன்று ஸ்பூன் அளவிற்கு கடலை மாவு, இரண்டு ஸ்பூன் அரிசி மாவு பொடியாக நறுக்கிய கொத்தமல்லி மற்றும் கறிவேப்பிலை ஆகியவற்றை சேர்த்து நன்றாக பிசைந்து கொள்ள வேண்டும்.
சுவையான மொறு மொறுப்பான காலிபிளவர் பக்கோடா! ஈவினிங் ஸ்நாக்ஸ்க்கு இப்படி செய்யுங்கள்…
அனைத்தையும் நன்றாக பிசைந்து வைத்த பிறகு ஒரு கடாயில் பக்கோடா பொரிக்க தேவையான அளவு எண்ணெய் சேர்த்துக் கொள்ள வேண்டும். எண்ணெய் நன்கு சூடானதும் மிதமான தீயில் வைத்து நாம் பிசைந்து வைத்திருக்கும் மாவை சிறு சிறு உருண்டைகளாக சேர்த்து பொறித்து எடுத்தால் அட்டகாசமான பிரட் பக்கோடா தயார்.