ஈஸியா செய்யலாம் பிரட் சில்லி… குழந்தைகளுக்கு செய்து கொடுத்து அசத்திடுங்க!

பிரெட் சில்லி குழந்தைகளுக்கு காலை உணவாகவோ அல்லது ஈவினிங் ஸ்நாக்ஸ் ஆகவோ செய்து கொடுக்க ஒரு எளிமையான ரெசிபியாகும். பிரட்டை வைத்து டோஸ்ட், பிரட் ஆம்லெட் என்று செய்வதற்கு பதிலாக வித்தியாசமாக இந்த மசாலாக்கள் சேர்த்து பிரெட் சில்லி செய்து கொடுத்தால் குழந்தைகள் அதனை விரும்பி சாப்பிடுவார்கள். சுவையான இந்த ரெசிபியை செய்வது மிகவும் எளிமையானது. வாருங்கள் இந்த பிரெட் சில்லி எப்படி செய்யலாம் என்பதை பார்ப்போம்.

பிரெட் சில்லி செய்வதற்கு முதலில் ஆறு துண்டுகள் பிரட்டை எடுத்து அதன் ஓரங்களை நறுக்கி பிறகு துண்டுகளாக நறுக்கிக் கொள்ள வேண்டும். இப்பொழுது ஒரு பாத்திரத்தில் இரண்டு ஸ்பூன் எண்ணெய் சேர்த்து நறுக்கி வைத்திருக்கும் பிரட் துண்டுகளை சேர்த்து பிரட் துண்டுகள் நிறம் மாறும் வரை வறுத்து எடுக்க வேண்டும். பிரெட் துண்டுகள் நிறம் மாறி டோஸ்ட் ஆன பிறகு இதனை எடுத்து தனியாக ஒரு பாத்திரத்தில் மாற்றி வைக்க வேண்டும்.

ஐந்தே நிமிடத்தில் செய்ய அசத்தலான ரெசிபி…! பிரட் ஆம்லெட்!

இப்பொழுது ஒரு கடாயில் இரண்டு ஸ்பூன் எண்ணெய் சேர்த்து அதில் ஒரு ஸ்பூன் கடுகு, ஒரு ஸ்பூன் சீரகம், ஒரு ஸ்பூன் பொடி பொடியாக நறுக்கிய பூண்டு, ஒரு ஸ்பூன் பொடியாக நறுக்கிய இஞ்சி ஆகியவற்றை சேர்த்து வதக்கிக் கொள்ள வேண்டும். இதில் நான்கு வர மிளகாய்களை சேர்த்து வதக்கவும். இவற்றை வதக்கிய பிறகு பொடியாக நறுக்கிய இரண்டு பெரிய வெங்காயத்தை சேர்த்து நன்கு வதக்க வேண்டும். வெங்காயம் நிறம் மாறி பொன்னிறமாகும் வரை வதக்க வேண்டும். வெங்காயம் நன்கு வதங்கினால் தான் இந்த பிரட் சில்லி சுவையாக இருக்கும்.

வெங்காயம் வதங்கிய பிறகு இரண்டு தக்காளிகளை பொடியாக நறுக்கி இதனுடன் சேர்த்து வதக்கிக் கொள்ள வேண்டும். இதில் கால் ஸ்பூன் மஞ்சள் தூள், அரை ஸ்பூன் கரம் மசாலா, இரண்டு ஸ்பூன் மிளகாய் தூள், தேவையான அளவு உப்பு ஆகியவற்றை சேர்த்து மசாலாக்கள் பச்சை வாசனை போகும் வரை வதக்கி கொள்ளவும். மசாலாக்கள் பச்சை வாசனை போன பிறகு பொடியாக நறுக்கிய குடை மிளகாயை சேர்த்து ஓரிரு நிமிடங்கள் நன்கு வதக்கவும். இப்பொழுது ஏற்கனவே துண்டுகளாக நறுக்கி டோஸ்ட் செய்து வைத்திருக்கும் பிரட்களை சேர்த்து சில நிமிடங்கள் வதக்க வேண்டும். மசாலாக்கள் பிரட் துண்டுகளில் முழுவதும் படும்படி கிளறி இறக்கி விடலாம். அவ்வளவுதான் சுவையான பிரட் சில்லி தயாராகிவிட்டது!