என்ன சுரைக்காயை வைத்து இவ்வளவு சூப்பரான அல்வாவா??? சுண்டி இழுக்கும் சுரைக்காய் அல்வா!!!

சுரைக்காய் அல்வா பெயரை கேட்டாலே வித்தியாசமாக இருக்கிறது அல்லவா? பெரும்பாலும் குழந்தைகளுக்கு காய்கறிகள் என்றாலே பெரிதாய் பிடிக்காது வேண்டா வெறுப்பாகத்தான் காய்கறிகளை உண்பார்கள். ஆனால் குழந்தைகளுக்கு தேவையான பல்வேறு வைட்டமின்கள், நார்ச்சத்துக்கள் ஆகியன காய்கறியில் அதிகம் உள்ளது. காய்கறிகளை விரும்பி சாப்பிடாத குழந்தையும் அந்த காய்கறியை வைத்து ஏதேனும் இனிப்பு வகைகளை செய்யும் பொழுது விரும்பி உண்பார்கள்.

நாவில் எச்சில் ஊறச் செய்யும் கேரட் அல்வாவில் இத்தனை நன்மைகளா…!

சுரைக்காய் இயற்கையிலேயே நீர்ச்சத்து நிறைந்த காய். இதில் வைட்டமின் ஏ, பி, சி மற்றும் இ நிறைந்து உள்ளது. மேலும் இதில் சேர்க்கப்படும் நட்ஸ் குழந்தையின் மூளை வளர்ச்சிக்கு உதவுகிறது.

இப்பொழுது இந்த சுரைக்காய் வைத்து எப்படி சுவையான அல்வா செய்வது என்பதை பார்ப்போம்.

சுரைக்காய் அல்வா:

அரை கிலோ சுரைக்காயை தோல் சீவி நன்றாக துருவி கொள்ள வேண்டும். துருவிய சுரைக்காயை அரை லிட்டர் பாலில் வேக வைக்க வேண்டும். இது வேகும் நேரத்தில் மற்றொரு பாத்திரத்தில் 400 கிராம் சீனி எடுத்து அதில் அரை டம்ளர் தண்ணீர் ஊற்றி பாகு காய்ச்சிக் கொள்ள வேண்டும்.

பாகு கம்பி பதம் வந்த பின்னர் வெந்த சுரைக்காயை சர்க்கரை பாகில் சேர்த்து வேக விட வேண்டும். பாகும் சுரைக்காயும் ஒன்று சேர்த்துக் கிளறி விடவும். 150 கிராம் நெய் கொஞ்சம் கொஞ்சமாக விட்டு கிளற வேண்டும்.

ஹோட்டல் மற்றும் கல்யாண வீடுகளில் கிடைக்கும் சுவையில் சூப்பரான பிரட் அல்வா!

இப்பொழுது 100 கிராம் கோவாவையும் இதனுடன் சேர்த்து நன்கு கிளறவும். இது கடாயில் ஒட்டாமல் சுருண்டு வரவேண்டும். அப்படி சுருண்டு வரும்பொழுது பத்து முந்திரிப் பருப்பு, திராட்சை என தேவையான நட்ஸ்களை நெய்யில் வறுத்து இதன் மேல் சேர்த்து, சிறிதளவு ஏலக்காய் தூள் தூவி கிளறி இறக்கி விடலாம் ஆறிய பின்பு பரிமாறலாம்.

அவ்வளவுதான் சுவையான குழந்தைகளுக்குப் பிடித்த சுரைக்காய் அல்வா தயார்!!!