அனைத்து வகையான சாதத்திற்கும் அட்டகாசமான புடலங்காய் வறுவல்…!

புடலங்காய் நீர் சத்து நிறைந்த ஒரு காய்கறி வகையாகும். இந்த புடலங்காய் வைத்து புடலங்காய் கூட்டு, புடலங்காய் பொரியல் என பல ரெசிபிகளை செய்ய முடியும். ஆனால் பலருக்கும் இந்த புடலங்காய் அவ்வளவாக பிடிக்காது. புடலங்காய் பிடிக்காதவர்கள் கூட விரும்பி சாப்பிடும் வகையில் ஒரு அட்டகாசமான ரெசிபி தான் புடலங்காய் வறுவல். ரசம் சாதம், தயிர் சாதம், பருப்பு சாதம் என அனைத்து வகையான சாதத்திற்கும் அட்டகாசமான காம்பினேஷன் ஆக இருக்கும் இந்த புடலங்காய் வருவலை எப்படி செய்யலாம் என்பதை பார்க்கலாம்.

புடலங்காய் வறுவல் செய்வதற்கு ஒரு கடாயில் ஒரு டீஸ்பூன் அளவிற்கு எண்ணெய் சேர்க்கவும். எண்ணெய் காய்ந்ததும் அரை ஸ்பூன் கடுகு, அரை ஸ்பூன் உளுத்தம் பருப்பு சேர்த்துக் கொள்ள வேண்டும். இதனுடன் ஒரு கொத்து கறிவேப்பிலை இலை சேர்க்கவும்.

சூப்பரான சைட் டிஷ் புடலங்காய் முட்டை பொரியல்! சுலபமா இப்படி செஞ்சு பாருங்க…!

இவற்றை தாளித்த பிறகு பொடியாக நறுக்கிய ஒரு பெரிய வெங்காயத்தை சேர்த்துக் கொள்ள வேண்டும். வெங்காயத்தோடு தேவையான அளவு உப்பு சேர்த்துக் கொள்ளலாம். அப்பொழுது வெங்காயம் சீக்கிரம் வதங்கிவிடும். வெங்காயத்தை பொன்னிறமாகும் வரை நன்கு வதக்கி விட வேண்டும். வெங்காயம் வதங்கும் பொழுதே ஒரு டீஸ்பூன் அளவிற்கு இஞ்சி பூண்டு விழுது சேர்த்து அதையும் நன்றாக வதக்கிக் கொள்ள வேண்டும்.

அனைத்தும் நன்றாக வதங்கியதும் கால் கிலோ அளவு புடலங்காயை தோல் சீவி பொடியாக நறுக்கி அதையும் சேர்த்துக் கொள்ள வேண்டும். மிதமான தீயில் வைத்து இதனை வதக்கி விட வேண்டும். புடலங்காயில் தண்ணீர் அதிகம் இருப்பதால் நீங்கள் தண்ணீர் எதுவும் இப்பொழுது சேர்க்க வேண்டிய அவசியம் இல்லை.

புடலங்காய் நன்கு வதங்கிய பிறகு மசாலாக்கள் சேர்க்கும் முன்பு சிறிதளவு தண்ணீர் சேர்த்துக் கொள்ளலாம். மூன்று மேசை கரண்டி அளவிற்கு தண்ணீர் சேர்த்து இதனை குறைவான தீயில் வைத்து ஐந்து நிமிடங்கள் வரை வேக விட வேண்டும்.

மகாளய அமாவாசை அன்று சைட் டிஷ் புடலங்காய் கூட்டு இப்படி செய்து பாருங்கள்!

இப்பொழுது புடலங்காய் வெந்ததும் இதற்கான மசாலாக்களை சேர்க்கலாம். ஒரு டீஸ்பூன் அளவிற்கு மிளகாய்த்தூள், கால் டீஸ்பூன் மஞ்சள் தூள், ஒரு டீஸ்பூன் மல்லித்தூள், ஒரு டீஸ்பூன் கரம் மசாலாத்தூள் ஆகியவற்றை சேர்த்து நன்கு வதக்கி விட வேண்டும். மசாலாக்கள் பச்சை வாசனை போகும் வரை வதக்கி விடவும். அவ்வளவுதான் சுவையான புடலங்காய் வறுவல் தயார்.