காலை உணவுக்கு சுலபமா செய்யலாம் பஞ்சாப் ஸ்பெஷல் பட்டூரா பூரி…!

பட்டூரா பூரி என்பது பஞ்சாபில் மிகப் பிரபலமான உணவு வகையாகும். வட இந்தியாவில் பிரபலமான இந்த உணவு வகை தமிழகத்திலும் பல்வேறு உணவகங்களில் பிரபலமாக இருக்கிறது. இந்த பட்டூரா பூரி வழக்கமான பூரி போல இல்லாமல் மைதா மாவில் செய்யக்கூடியது. இந்த பட்டூரா பூரியை சென்னா மசாலாவுடன் சாப்பிட அத்தனை சுவையாக இருக்கும். வாருங்கள் இந்த பட்டூரா பூரி எப்படி செய்யலாம் என்பதை பார்க்கலாம்.

சுலபமாக செய்யலாம் சுவையான சுண்டைக்காய் கெட்டி குழம்பு…! இந்தக் குழம்பு வச்சா ஒரு பருக்கை கூட மிஞ்சாது!

பட்டூரா பூரி செய்வதற்கு முதலில் அரை கிலோ அளவு மைதா மாவை எடுத்துக் கொள்ளுங்கள். இந்த மைதா மாவில் தேவையான அளவு உப்பு சேர்த்து அரை ஸ்பூன் அளவிற்கு சோடா மாவை சேர்த்துக் கொள்ள வேண்டும். இவற்றோடு இரண்டு ஸ்பூன் அளவு எண்ணெய் விட்டு அனைத்தையும் நன்றாக கலந்து கொள்ள வேண்டும்.

அனைத்தையும் கலந்த பிறகு ஒன்றரை கப் அளவு தயிர் ஊற்றி இந்த மாவை பிசையவும். மாவு கெட்டியாக பிசைய வேண்டும். இதை பிசைய தயிர் மட்டுமே போதுமானது. தேவைப்பட்டால் சிறிது தண்ணீர் சேர்த்து பிசைந்து கொள்ள வேண்டும். எண்ணெய் தொட்டு மாவில் வெடிப்புகள் ஏதும் இல்லாதவாறு பிசைந்து உருட்டி பாத்திரத்தில் வைத்து விட வேண்டும்.

இப்பொழுது இந்த மாவை ஒரு ஈரத்துணியால் மூடி வைக்க வேண்டும். இதனை சில மணி நேரங்கள் அப்படியே வைத்து விட வேண்டும். மூன்று முதல் நான்கு மணி நேரம் கழித்து மாவை சற்று பெரிய உருண்டைகளாக உருட்டி பூரியாக தேய்த்து வைக்க வேண்டும். ஒரு வாணலியில் எண்ணெய் காயவைத்து எண்ணெய் காய்ந்ததும் தேய்த்து வைத்திருக்கும் பூரியை போட வேண்டும். பூரி ஒருபுறம் வெந்து நன்கு உப்பி வரும்பொழுது இதனை திருப்பிவிட்டு மறுபுறமும் லேசாக சிவந்ததும் எடுத்துவிடலாம்.

ஆரோக்கியம் நிறைந்த கொண்டைக்கடலை வைத்து சூப்பரான சத்தான சன்னா மசாலா கிரேவி…!

சூடான இந்த பூரியுடன் சென்னா கிரேவியை வைத்து பரிமாறவும். இதனை அனைத்து வயதினரும் விரும்பி சுவைத்து சாப்பிடுவார்கள். அவ்வளவுதான் சுவையான பட்டூரா பூரி தயார்!