ஓணம் அன்று கேரளா ஸ்டைலில் இப்படி அவியல் செய்து அசத்துங்கள்…!

அவியல் தென்னிந்தியாவின் மிக முக்கியமான ஒரு உணவாகும். கேரளா, கன்னியாகுமரி போன்ற பகுதிகளில் இந்த உணவு மிகவும் பிரபலம். பலவகையான காய்கறிகளை சேர்த்து தேங்காய் எண்ணெயில் செய்யப்படும் இந்த அவியல் மிக சுவையான ஒரு உணவு. அடையுடன் இந்த அவியலை வைத்து சாப்பிடும் பொழுது அதன் சுவை மிக அலாதியானது. கேரளாவின் ஓணம் சத்யாவில் இந்த அவியல் கட்டாயம் இடம் பெறும். இந்த அவியலுக்கு பயன்படுத்தும் காய்கறிகள் உங்கள் விருப்பத்திற்கு ஏற்ப தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம்.

இத்தனை சுவையான இனிப்பா?? ஓணம் ஸ்பெஷல் கேரளாவின் அடை பிரதமன்!

இந்த அவியல் செய்ய இப்பொழுது நாம் 100 கிராம் அளவு சேனைக்கிழங்கு, கொத்தவரங்காய், ஒரு சிறிய துண்டு பூசணிக்காய், வெள்ளரிக்காய், ஒரு சிறிய வாழைக்காய், இரண்டு கேரட், 10 அவரைக்காய், மூன்று கத்திரிக்காய், ஒரு சிறிய மாங்காய், ஒரு சிறிய துண்டு புடலங்காய் ஆகிய காய்கறிகளை பயன்படுத்தி செய்யலாம். இதில் நீங்கள் விருப்பப்பட்டால் முருங்கைக்காய் போன்ற காய்கறிகளை சேர்த்துக் கொள்ளலாம். காய்கறிகள் அனைத்தையும் கழுவி சுத்தம் செய்து மெல்லிய நீளத் துண்டுகளாக நறுக்கி வைத்துக் கொள்ள வேண்டும்.

இப்பொழுது 10 பச்சை மிளகாய், அரை ஸ்பூன் சீரகம், ஒரு பெரிய மூடி துருவிய தேங்காய், மூன்று பல் பூண்டு இவை அனைத்தையும் ஒரு மிக்ஸி ஜாரில் சேர்த்து கொஞ்சம் கொரகொரப்பாக அரைத்துக் கொள்ள வேண்டும். இப்பொழுது கடாயில் இரண்டு மேசைக்கரண்டி தேங்காய் எண்ணெய் காய வைத்து எண்ணெய் காய்ந்ததும் நறுக்கி வைத்த காய்கறிகளை போட்டு லேசாக வதக்கிக் கொள்ள வேண்டும்.

கொஞ்சமாக தண்ணீர் சேர்த்து காய்கறிகளை வேக வைக்க வேண்டும் காய்கறிகள் குழைந்து விடக்கூடாது. தேவையான அளவு உப்பு சேர்த்து காய்கறிகளை வேக வைத்ததும் அதில் அரைத்த விழுதை சேர்த்து நன்கு கிளறி கொள்ள வேண்டும். கிளறி ஐந்து நிமிடம் வைத்து சற்று கெட்டியாக வந்ததும் அடுப்பை நிறுத்தி விடலாம். இப்பொழுது அவியலின் நடுவில் சிறிய குழியாக செய்து அதில் பச்சையாகவே ஒரு மேஜை கரண்டி தேங்காய் எண்ணெய் சேர்த்து, அரை ஸ்பூன் சீரகத்தை தேய்த்து அதில் போட்டு, கறிவேப்பிலை ஒரு கொத்தினை சேர்த்து மூடி வைக்கலாம். 10 நிமிடம் கழித்து கிளறிவிட்டு பரிமாறலாம். பரிமாறுவதற்கு முன் கெட்டியான தயிர் சேர்த்து பரிமாறினால் இன்னும் ருசியாக இருக்கும்.

ஆடி அமாவாசை அன்று வடை, பாயசம் இப்படி செய்து பாருங்கள்…!

அவ்வளவுதான் சுவையான அவியல் தயார்!!!

Exit mobile version