இத்தனை சுவையான இனிப்பா?? ஓணம் ஸ்பெஷல் கேரளாவின் அடை பிரதமன்!

ஓணம் கேரளாவின் மிக முக்கியமான பண்டிகை நாளாக கருதப்படுகிறது. பத்து நாட்கள் கொண்டாடப்படும் இந்த ஓனம் விழா மங்களகரமான அறுவடை திருநாளாக கொண்டாடப்படுகிறது. மன்னர் மகாபலி தன்னுடைய பிரியமான மாநிலத்திற்கு திரும்பிய நாளாகவும் இது கொண்டாடப்படுகிறது. பத்து நாட்கள் கொண்டாடப்படும் இந்த விழா இந்த ஆண்டு ஆகஸ்ட் 20ஆம் தேதி தொடங்கி ஆகஸ்ட் 31ஆம் தேதி வரை கொண்டாடப்பட உள்ளது. ஆகஸ்ட் 29ஆம் தேதி திருவோணம் நட்சத்திரம் ஓணம் கொண்டாடத்தின் மிக முக்கிய நாளாகும். ஓணத்தின் பொழுது மக்கள் ஓணம் சத்யாவை கடைப்பிடிக்கிறார்கள். இந்த ஓணம் சத்யா விருந்தில் கிட்டத்தட்ட இருபத்தைந்திற்கும் மேற்பட்ட உணவு வகைகள் பரிமாறப்படும். இந்த ஓணம் சத்யா விருந்தில் மிக முக்கிய பங்கு வகிப்பது அடை பிரதமன் எனும் இனிப்பு வகையாகும். இந்த அடை பிரதமன் அடை, வெல்லம், தேங்காய் பால் கொண்டு செய்யப்படும் மிகச் சுவையான ஒரு இனிப்பு வகை.

வாயில் வைத்ததும் கரையும் சூப்பரான நெய் ஒழுகும் மைசூர் பாகு!!

இந்த அடை பிரதமன் செய்ய அரை கப் அடையை (கடைகளில் விற்கப்படும் அடை பாயாசத்திற்கு என்று அரிசி மாவால் செய்யப்பட்ட அடை போன்ற பொருள்) கொதிக்கின்ற வெந்நீரில் 15 நிமிடம் வேக வைக்க வேண்டும். இது வெந்த பின்பு வெறும் தண்ணீரில் இரண்டு முறை அலசி எடுத்துக் கொள்ளவும்.

இப்பொழுது ஒரு கப் வெல்லத்தை அரை கப் தண்ணீரில் கரைத்து வடிகட்டி அடுப்பில் சேர்த்துக் கொள்ள வேண்டும். வெல்லம் நன்கு கரைந்து கெட்டியானதும் வேக வைத்திருக்கும் அடையை இதனுடன் சேர்க்க வேண்டும். இதனை வெல்லத்துடன் சேர்த்து நன்கு கிளறி கொள்ள வேண்டும்.

வருகின்ற வரலட்சுமி விரதத்திற்கும், விநாயகர் சதுர்த்திக்கும் கடலைப்பருப்பு பூரண கொழுக்கட்டை இப்படி செய்து அசத்துங்கள்…!

இந்த பாயாசத்தில் மிக முக்கியமான பொருள் தேங்காய் பால். இந்த தேங்காய் பாலை 3 விதமாக தயார் செய்து வைத்துக் கொள்ள வேண்டும். நல்ல பெரிய தேங்காயை துருவி தண்ணீர் எதுவும் சேர்க்காமல் முதலில் கெட்டியான பாலை எடுத்துக் கொள்ள வேண்டும். பாலை வடிகட்டிய பிறகு அந்த தேங்காய் பூவை மீண்டும் மிக்ஸி ஜாரில் சேர்த்து இரண்டு டம்ளர் அளவு தண்ணீர் விட்டு அரைத்து மீண்டும் அதனை பிழிந்து இரண்டாவது பாலை எடுத்துக் கொள்ள வேண்டும். மீண்டும் வடிகட்டிய பின்பு அந்த தேங்காய் பூவை சேர்த்து தண்ணீர் சேர்த்து அரைத்து வடிகட்டி மூன்றாவது பாலையும் எடுத்துக் கொள்ள வேண்டும். இதில் முதல் பால் நன்கு கெட்டியாகவும், இரண்டாவது பால் சற்று தண்ணீராகவும், மூன்றாவது பால் தண்ணீராகவும் இருக்கும்.

இப்பொழுது அடுப்பில் உள்ள வெல்லம் மற்றும் அடையுடன் மூன்றாவது பாலை சேர்த்து சமைக்க வேண்டும். பால் கெட்டியானதும் இரண்டாவது பாலை சேர்த்து நன்கு கிளற வேண்டும். தனியாக ஒரு கடாயில் நெய் சிறிதளவு ஊற்றி முந்திரி பருப்பை வறுத்து எடுத்துக் கொள்ள வேண்டும், தேங்காயை சிறுசிறு பற்களாக கீரி அதையும் நெய்யில் நன்கு வறுத்து எடுத்துக் கொள்ள வேண்டும். வறுத்த தேங்காய் மற்றும் முந்திரிப் பருப்பை இதனுடன் சேர்த்து கிளறவும் வாசனைக்காக அரை டீஸ்பூன் ஏலக்காய் தூள் சேர்த்து கிளற வேண்டும். ஒரே ஒரு சிட்டிகை அளவு உப்பு சேர்த்துக் கொள்ள வேண்டும்.

வரலட்சுமி விரதத்திற்கு அரிசி பாயசம் செய்து பாருங்கள்! மிக எளிமையான அரிசி பாயசம்…

இறுதியாக முதன் முதலில் எடுத்த கெட்டியான தேங்காய் பாலை சேர்த்து நன்கு கிளறி இறக்கி விடலாம் இதனை இளம் சூடாக பரிமாறலாம். அவ்வளவுதான் மிக மிக சுவையான ஓணம் சத்யா விருந்தின் ஸ்பெஷல் அடை பிரதமன் தயாராகிவிடும்!

Exit mobile version