மைசூர் பாகு தென்னிந்தியாவின் கர்நாடக பகுதியில் உள்ள மைசூரை பிறப்பிடமாக கொண்ட இனிப்பு வகையாகும். இன்று உலகம் முழுவதும் தயாரிக்கப்பட்டு பலரால் சுவைக்கப்பட்டு வருகிறது. தினம் தினம் எத்தனையோ இனிப்பு வகைகள் புதிது புதிதாக வந்தாலும் இந்த மைசூர் பாகின் சுவைக்கு ஈடு இணை கிடையாது. நாவில் வைத்தவுடன் கரையும் இந்த மைசூர் பாகு பலரது விருப்ப இனிப்பு வகையாகும்.
செட்டிநாட்டு ஸ்பெஷலான இனிப்பு வகை உக்கரா செய்வது எப்படி?
பெரும்பாலும் இந்த மைசூர் பாகை வீட்டில் தயாரிக்க பலரும் தயக்கம் கொள்வர். காரணம் இதில் முக்கியமான பகுதியே சர்க்கரை பாகு காய்ச்சுவது தான். சர்க்கரை பாகு சற்று தண்ணீராய் போய்விட்டால் மைசூர் பாகு அல்வா போன்று ஆகிவிடும் பாகு கொஞ்சம் கூடுதலாய் இறுகி விட்டால் மைசூர் பாகு கடிக்க கூட முடியாதபடி கடினமாக போய்விடும் அதனால் பாகின் பதம் சரியாக இருக்க வேண்டும். பாகின் பதத்தை சரியாக செய்து விட்டால் சுவையான சர்க்கரை பாகை நீங்கள் எளிமையாக தயாரித்து விடலாம்.
இந்த மைசூர் பாகை செய்வதற்கு ஒரு கப் கடலை மாவை கடாயில் சிறிது நேரம் வறுத்து எடுத்துக் கொள்ள வேண்டும். இப்பொழுது அடி கனமான ஒரு பாத்திரத்தை எடுத்து அதில் இரண்டரை கப் சீனி சேர்த்துக் கொள்ள வேண்டும் அரை கப் தண்ணீர் ஊற்றி அடுப்பில் வைக்க வேண்டும்.
மற்றொரு அடுப்பில் இரண்டு கப் நெய் சேர்த்து மிதமான தீயில் சூடு செய்ய வேண்டும். சர்க்கரை தண்ணீரில் கலந்து பாகு கம்பி பதம் வரும் பொழுது வறுத்து வைத்திருக்கும் கடலை மாவை கொஞ்சம் கொஞ்சமாக தூவி கிளற வேண்டும்.
கட்டிகள் ஏதும் இல்லாமல் கிளறிய பிறகு சிறிது நெய் விட்டு கிளற வேண்டும். மாவும் நெய்யும் மாறி மாறி மிதமான தீயில் கட்டிகள் எதுவும் வராதபடி கிளறிக் கொண்டே இருக்க வேண்டும்.
என்ன சுரைக்காயை வைத்து இவ்வளவு சூப்பரான அல்வாவா??? சுண்டி இழுக்கும் சுரைக்காய் அல்வா!!!
நன்கு கிளறிய பின்பு மாவு நெய்யும் சேர்ந்து கடாயில் ஒட்டாமல் வரும்பொழுது அடுப்பில் இருந்து இறக்கி விடலாம். நெய் தடவிய தட்டில் கொட்டி பரப்பி விடவும் ஆறியதும் துண்டுகள் போட்டு பரிமாறலாம்.
அவ்வளவுதான் வாயில் வைத்ததும் கரையும் சூப்பரான நெய் மைசூர்பாக தயார்!!!