அவலை வைத்து அருமையான கிருஷ்ண ஜெயந்தி ஸ்பெஷலான அவல் பாயசம்!

அவல் நமது பாரம்பரியமான உணவு வகைகளில் ஒரு முக்கியமான உணவு பொருளாகும். அவல் வெள்ளை அவல், சிவப்பு அவல் என இரண்டு வகையான அவல்கள் உண்டு. இவை இரண்டுமே உடலுக்கு மிகவும் நன்மை தரக்கூடியது. அவல் உடலின் செரிமான சக்தியை அதிகரிக்க கூடிய ஆற்றல் உடையது. மேலும் குடல் சம்பந்தப்பட்ட பிரச்சனைகளை தீர்த்து வாய் புண்ணையும் சரி செய்யும். உடல் சூட்டை தணிக்க கூடிய தன்மையும் அவலுக்கு உண்டு. அவலில் வைட்டமின்கள், நார்ச்சத்துக்கள், இரும்புச்சத்து என உடலுக்கு தேவையான அனைத்து விதமான ஊட்டச்சத்துக்களும் நிறைந்துள்ளது. குழந்தைகளின் உணவில் அடிக்கடி அவலை சேர்த்து வந்தால் குழந்தைகள் நல்ல ஆரோக்கியத்தோடு இருப்பார்கள்.

அவலின் மற்றொரு சிறப்பு என்னவென்றால் இது கிருஷ்ணருக்கு பிடித்தமான ஒரு உணவாகவும் கூறப்படுகிறது. எனவே கிருஷ்ண ஜெயந்தி அன்று கட்டாயம் அவலை வைத்து ஒரு உணவு தயார் செய்து நெய்வேத்தியம் செய்து விடுவார்கள். இந்த ஆண்டு கிருஷ்ண ஜெயந்திக்கு அவலை வைத்து சுவையான அவல் பாயாசம் எப்படி செய்வது என்பதை பார்ப்போம்.

கிருஷ்ண ஜெயந்தி ஸ்பெஷல் கிருஷ்ணருக்கு இந்த இனிப்பு சீடை செய்ய மறந்துடாதீங்க!

அரை கப் அவலை லேசாக வறுத்து எடுத்துக் கொள்ள வேண்டும். அதிக நேரம் வறுத்து விடக்கூடாது வறுத்த இந்த அவலினை அப்படியே ஆறவிடவும். இப்பொழுது அரை லிட்டர் அளவு பாலுடன் ஒரு டம்ளர் தண்ணீர் சேர்த்து காய்ச்சிக் கொள்ளவும் பால் நன்கு காய்ச்சியதும் அந்தப் பாலில் வறுத்து வைத்திருக்கும் அவலை சேர்த்து வேக விட வேண்டும்.

கிருஷ்ண ஜெயந்திக்கு கிருஷ்ணருக்கு பிடித்தமான லட்டு இப்படி செய்யுங்கள்! லட்டு செய்வது எப்படி?

அவல் நன்கு வெந்ததும் ஒரு டம்ளர் அளவு சீனியை அதனுடன் சேர்க்கவும். சீனி கரைந்து பாயாசம் சற்று கெட்டி பட வேண்டும். இப்பொழுது பாயாசம் ஓரளவு கெட்டிப்பட்டவுடன் ஒரு சிறிய கடாயில் இரண்டு ஸ்பூன் அளவு நெய் சேர்த்து அதில் தேவையான அளவு முந்திரி மற்றும் திராட்சை ஆகியவற்றை வறுத்து எடுத்துக் கொள்ள வேண்டும். நெய்யில் வறுத்த முந்திரி மற்றும் திராட்சையை பாலில் சேர்த்து, இரண்டு ஏலக்காயை தட்டி இதனுடன் சேர்த்து இறக்கி விடலாம்.

கிருஷ்ண ஜெயந்திக்கு சட்டென்று செய்யக்கூடிய ஒரு ரெசிபி… கிருஷ்ணருக்கு பிடித்த இனிப்பு அவல்!

அவ்வளவுதான் மிக சுலபமாக சுவையாக அவல் பாயாசம் தயாராகி விட்டது