அட்டகாசமான சுவையில் ஆலு பரோட்டா… இனி வீட்டிலேயே செய்யலாம் சுவையான இந்த ஆலு பரோட்டா…!

ஆலு பரோட்டா வட இந்தியாவில் பஞ்சாப் பகுதியில் மிகவும் பிரபலமான ஒரு உணவு வகையாகும். இந்த ஆலு பரோட்டா தமிழ்நாட்டிலும் பல்வேறு உணவகங்களில் கிடைக்கிறது. உருளைக்கிழங்கை ஸ்டஃப் செய்து சப்பாத்தியில் வைத்து தரப்படும் இந்த ஆலு பரோட்டா மிகவும் சுவை நிறைந்ததாக உள்ளது. இதன் சுவை குழந்தைகள் முதல் பெரியவர் வரை அனைவரும் விரும்பி சாப்பிடும் வகையில் இருப்பதால் பலரும் இந்த ஆலு பரோட்டாவை அடிக்கடி முயற்சி செய்து பார்க்க விரும்புவார்கள். ஆனால் இனி இதை சாப்பிட கடைகளுக்கு தான் செல்ல வேண்டும் என்று அவசியம் இல்லை நாமே வீட்டில் மிக எளிமையாக உணவகங்களில் விற்கும் சுவையில் ஆலு பரோட்டாவை தயார் செய்ய முடியும்.

ஆரோக்கியம் நிறைந்த கொண்டைக்கடலை வைத்து சூப்பரான சத்தான சன்னா மசாலா கிரேவி…!

ஆலு பரோட்டாவிற்கு முதலில் வெளிமாவு தயார் செய்வதற்கு இரண்டு கப் அளவு கோதுமை மாவை எடுத்துக் கொள்ள வேண்டும். இதில் ஒரு ஸ்பூன் அளவு எண்ணெய் மற்றும் சுவைக்கு ஏற்ப உப்பு சேர்த்து நன்கு கிளறி கொள்ளவும். இப்பொழுது இதனை கொஞ்சம் கொஞ்சமாக தண்ணீர் ஊற்றி பிசைந்து கொள்ள வேண்டும். நன்கு மென்மையாக வரும் அளவிற்கு பிசைய வேண்டும் பிசைந்த இந்த மாவினை ஒரு இருபது நிமிடங்கள் அப்படியே வைத்து விடலாம்.

உள்ளே ஸ்டஃப் செய்ய வேண்டிய உருளைக்கிழங்கு மசாலாவிற்கு முதலில் மூன்று உருளைக்கிழங்கை நன்கு வேகவைத்து எடுத்துக் கொள்ள வேண்டும். குக்கரில் வேக வைப்பது என்றால் இரண்டு முதல் மூன்று விசில் வரும் வரை வேக வைத்துக் கொள்ள வேண்டும். வேகவைத்து எடுத்த உருளைக்கிழங்கின் தோலினை நீக்கி மசித்து கொள்ள வேண்டும்.

இப்பொழுது ஒரு கடாயில் ஒரு ஸ்பூன் அளவு எண்ணெய் சேர்த்து ஒரு பெரிய வெங்காயத்தை நன்கு பொடி பொடியாக நறுக்கி இதனுடன் சேர்த்து வதக்க வேண்டும். வெங்காயம் நன்கு வதங்க சிறிதளவு உப்பு சேர்த்துக் கொள்ளலாம். வெங்காயம் வதங்கியதும் மூன்று பச்சை மிளகாய்களை சேர்த்து வதக்கவும். ஒரு ஸ்பூன் சீரகத்தூள், ஒரு ஸ்பூன் மிளகாய் தூள், அரை ஸ்பூன் கரம் மசாலா ஆகியவற்றை சேர்த்து நன்கு வதக்கி விட வேண்டும். இப்பொழுது மசித்து வைத்த உருளைக்கிழங்கையும் இதனுடன் சேர்த்து கிளறவும். உருளைக்கிழங்கை சேர்த்த பிறகு அதிக நேரம் கிளற வேண்டிய அவசியம் இல்லை. ஓரளவு கிளறினால் போதும். இறுதியாக கொத்தமல்லி இலை தூவி இறக்கி விடலாம். புளிப்பு சுவை விரும்புபவர்கள் சிறிதளவு எலுமிச்சை சாறு இதனுடன் சேர்த்துக் கொள்ளலாம்.

இப்பொழுது ஏற்கனவே தயார் செய்து வைத்திருக்கும் கோதுமை மாவில் ஒரு சிறிய பகுதியை எடுத்து உருட்டி கொள்ள வேண்டும். அதே அளவு உருண்டையாக உருளைக்கிழங்கையும் எடுத்துக் கொள்ள வேண்டும். உருட்டி எடுத்த கோதுமை மாவின் மீது சிறிதளவு கோதுமை மாவினை தூவி இதனை சிறிய வட்டமாக தேய்த்துக் கொள்ள வேண்டும். தேய்த்து முடித்த பின் அந்த ஏற்கனவே எடுத்து வைத்திருந்த உருளைக்கிழங்கை தேய்த்த சப்பாத்தி நடுவில் வைத்து கோதுமை மாவினை மெதுவாக கொழுக்கட்டை போல மூடி விட வேண்டும். இப்பொழுது இதனை மென்மையாக ஒரு உருண்டை போல் உருட்டிக் கொள்ளவும்.

உருட்டிய இந்த மாவினை மீண்டும் சப்பாத்தி போல தேய்த்துக் கொள்ளலாம். நடுவில் உருளைக்கிழங்கு வைத்து உருட்டிய இந்த மாவை மென்மையாக தேய்க்க வேண்டும். அதிக அழுத்தம் கொடுக்கத் தேவையில்லை. சற்று கனமாக தேய்த்து கூடுதல் நேரம் வேக வைத்தால் போதும். தேய்த்து முடித்த பிறகு தோசை கல்லை காய வைத்து மெதுவாக வேக வைத்து எடுக்க வேண்டும்.

குஜராத்தி ஸ்பெஷல் காந்த்வி! சுவை நிறைந்த சிற்றுண்டி ரெசிபி…

இதற்கு நெய் அல்லது எண்ணெய் தடவி வேக வைக்கலாம். நெய் தடவி வேக வைத்தால் நன்கு வாசனையாக இருக்கும். இந்த ஆலு பரோட்டாவினை தயிர் மற்றும் ஊறுகாய் உடன் பரிமாறலாம்.

அவ்வளவுதான் சுவையான அசத்தலான ஆலு பரோட்டா தயார்!

Exit mobile version