பொதுவாக கோதுமை ரவை வைத்து ரவா கிச்சடி அல்லது கோதுமை ரவா பிரியாணி என பலவிதமான ரெசிப்பிகள் செய்து பார்த்திருப்போம். இந்த முறை அதை ரவை வைத்து அருமையான பூரி செய்வதற்கான ரெசிபி இந்த தொகுப்பில் உள்ளது. இந்த கோதுமை ரவா பூரி அருமையான ஸ்னாக்ஸ் ஆகவும் சாப்பிடலாம். இதனுடன் சிறிதளவு தேங்காய் சட்னி வைத்து காலை மாலை உணவாகவும் சாப்பிடலாம். பத்தே நிமிடத்தில் தயாராகும் இந்த பூரி குழந்தைகளுக்கு மிகவும் பிடித்த ஒன்றாகவும் இருக்கும்.
முதலில் ஒரு கப் கோதுமை ரவையை ஒரு அகலமான பாத்திரத்தில் சேர்த்து ரவை மூன்றும் அளவிற்கு தண்ணீர் சேர்த்து நன்கு மூடி போட்டு அரைமணி நேரம் ஊற வைக்க வேண்டும். இந்த நேரத்தில் ஒரு மிக்ஸி ஜாரில் இரண்டு காய்ந்த வத்தல், ஒரு தேக்கரண்டி சீரகம், ஒரு கொத்து கருவேப்பிலை, 5 சின்ன வெங்காயம், கைப்பிடி அளவு தேங்காய் சேர்த்து கொரகொரப்பாக அரைத்துக் கொள்ள வேண்டும். அரைக்கும் பொழுது தண்ணீர் சேர்க்க வேண்டிய அவசியம் இல்லை.
இப்பொழுது நாம் அரைத்த விழுதுகளுடன் அரை மணி நேரம் ஊற வைத்திருக்கும் கோதுமை ரவையை சேர்த்து அரைக்க வேண்டும். கோதுமை ரவையில் இருக்கும் தண்ணீரை வடிகட்டி மிக்ஸி ஜாரில் சேர்த்துக் கொள்ளலாம்.
கோதுமை ரவை சேர்த்த பிறகு மிக்ஸியில் அரைக்கும் பொழுது தேவையான அளவு உப்பு சேர்த்து அரைத்துக் கொள்ளலாம். இப்பொழுதும் தண்ணீர் சேர்க்காமல் கெட்டியாக அரைத்துக் கொள்ள வேண்டும்.
மாவில் சற்று தண்ணீர் அதிகமாக தெரிந்தால் இரண்டு தேக்கரண்டி அரிசி மாவு சேர்த்து நன்கு பிசைந்து கொள்ள வேண்டும். இப்பொழுது மாவு நன்கு இறுகி சப்பாத்தி மாவு பதத்திற்கு கெட்டியாக இருக்க வேண்டும்.
சாதாரண சமையலை அசத்தல் சமையலாக மாற்றும் அருமையான சமையலறை டிப்ஸ்கள்!
இந்த மாவை சிறு சிறு உருண்டைகளாக உருட்டி ஒரு வெள்ளைத் துணியில் மேல் வைத்து வட்ட வடிவில் பூரி மாவு திரட்டுவது போல திரட்டி எடுத்துக் கொள்ள வேண்டும்.
மாவு முழுவதையும் வட்டமாக திரட்டிய பிறகு ஒரு அகலமான கடாயில் பொறித்து எடுப்பதற்கு தேவையான அளவு எண்ணெய் சேர்த்து சூடானதும் ஒன்றாக சேர்த்து பொறித்து எடுத்துக் கொள்ள வேண்டும்.
மிதமான தீயில் முன்னும் பின்னும் பொன்னிறமாக வரும் வரை வேக வைத்து எடுத்தால் கோதுமை ரவை பூரி தயார்.