பத்து நிமிடத்தில் அட்டகாசமான ரவா பாயாசம்! சுவை மாறாத ரெசிபி இதோ…

பத்து நிமிடங்களில் இனிப்பு செய்ய வேண்டும் என நினைக்கும் பொழுது ஒரு கப் ரவை போதும். தாராளமாக இனிப்பு செய்துவிடலாம். இந்த முறை ரவை வைத்து கேசரி செய்யாமல் சற்று வித்தியாசமாக பாயாசம் செய்வதற்கான விளக்கத்தை இந்த தொகுப்பில் பார்க்கலாம். வீட்டில் எதிர்பாராத நேரங்களில் விருந்தினர்கள் வரும்பொழுது பத்து நிமிடத்தில் இந்த பாயாசம் செய்து கொடுத்து விருந்தினர்களை அசத்தி விடலாம். வாங்க எளிமையான முறையில் பாயாசம் செய்வதற்கான விளக்கம் இதோ…

ஒரு அடி கனமான கடாயில் மூன்று தேக்கரண்டி நெய் சேர்த்து கைப்பிடி அளவு முந்திரி பருப்பு சேர்த்து நன்கு பொன்னிறமாக வறுத்து தனியாக எடுத்து வைத்துக் கொள்ளவும். அதே கடாயில் நெய்யோடு கால் கப் ரவை சேர்த்து நன்கு வருக்க வேண்டும்.

ரவை நன்கு வருபட்டு வாசம் வரும் நேரத்தில் தனியாக ஒரு தட்டிற்கு மாற்றிவிடலாம். அடுத்ததாக அதே கடாயில் அரை லிட்டர் பால் சேர்த்து நன்கு கொதித்து வரும் நேரத்தில் அரை தேக்கரண்டி ஏலக்காய் தூள் சேர்த்துக்கொள்ள வேண்டும்.

அடுத்ததாக வறுத்து வைத்திருக்கும் ரவை சேர்த்து நன்கு கலந்து கொடுக்க வேண்டும். ரவை பாதி வெந்து வரும் நேரத்தில் கால் கப் சக்கரை சேர்த்து கலந்து கொள்ள வேண்டும். சர்க்கரை நன்கு கரைந்து பாயாசம் பதத்திற்கு கெட்டியாக வரும் நேரத்தில் இரண்டு சிட்டிகை குங்குமப்பூ சேர்த்து கலந்து கொள்ளலாம்.

அம்மாவின் கைப்பக்குவத்தின் மணக்க மணக்க கருவாடு சாதம்! சொல்லும்போது நெற்றியில் கூறும் ரெசிபி இதோ…

இறுதியாக வருத்த முந்திரி சேர்த்து அடுப்பை அணைத்து விட வேண்டும். இப்பொழுது ருசியான ரவா பாயசம் தயார். இந்த பாயாசம் செய்வதற்கு பத்து நிமிடம் தாராளமாக போதுமானதாக இருப்பதால் உடனடி செய்து முடித்து விடலாம். மேலும் சுவையில் அட்டகாசமாகவும் விருந்தில் பரிமாறும் பொழுது திருத்தியாகவும் இருக்கும்.

எப்போதும் ஒரே மாதிரியாக சேமியா பாயாசம் செய்யாமல் சற்று வித்தியாசமாக ரவை வைத்து பாயாசம் செய்து வீட்டில் உள்ள அனைவரையும் மகிழ்விக்கலாம்.