சர்க்கரை இல்லாமல் தித்திப்பான ரவா லட்டு சாப்பிட ஆசையா? வாங்க வெல்லம் சேர்த்து அருமையான ரவா லட்டு செய்யலாம்!

நம் வீடுகளில் எளிமையாக செய்யக்கூடிய இனிப்பு பலகாரங்களில் ஒன்று ரவா லட்டு. விசேஷ நாட்களாக இருந்தாலும் சரி, சாதாரண நாட்களாக இருந்தாலும் சரி ரவா லட்டு செய்வதற்கு காரணம் இல்லாமல் செய்து குழந்தைகளுக்கு கொடுத்து மகிழ்வது நம் வீட்டின் வழக்கம். ஆனால் இந்த ரவா லட்டு செய்வதற்கு அதிகப்படியான வெள்ளை சர்க்கரை பயன்படுத்த வேண்டியது இருக்கும். அதை தவிர்ப்பதற்காகவே இந்த முறை சர்க்கரை இல்லாமல் வெல்லம் வைத்து அருமையான தித்திப்பான ரவா லட்டு செய்யலாம் வாங்க….

இந்த லட்டு செய்வதற்கு ஒரு அகலமான கடாயில் இரண்டு தேக்கரண்டி எண்ணெய் சேர்த்து ஐந்து முதல் பத்து முந்திரி பருப்புகளை பொன்னிறமாக வறுத்து எடுத்துக் கொள்ளவும். மீதம் இருக்கும் அதே நெய் ஐந்து முதல் பத்து பாதாமை தட்டி சேர்த்து பொன்னிறமாக வறுத்து எடுத்துக் கொள்ளவும்.

மீண்டும் அதே கடாயில் கூடுதலாக ஒரு தேக்கரண்டி நெய் சேர்த்து ஒரு கப் ரவையை கலந்து பொன்னிறமாக வறுத்தெடுக்க வேண்டும். ரவை பொன்னிறமாக வறுபட்டதும் அரை கப் தேங்காய் துருவலை அதனுடன் சேர்த்து வறுத்துக் கொள்ளலாம்.

தேங்காய் பொன்னிறமாக மாறியது கால் தேக்கரண்டி உப்பு சேர்த்து கலந்து கொடுத்து அடுப்பை அணைத்து விடலாம். இந்த கலவை சூடு ஆறியதும் ஒரு மிக்ஸி ஜாரில் சேர்த்துக் கொள்ளலாம். அதனுடன் வாசனைக்காக இரண்டு ஏலக்காய் தூள் சேர்த்து லேசாக அரைத்துக் கொள்ளவும்.

அடுத்ததாக மற்றொரு கடாயில் ஒரு கப் ரவைக்கு அரை கப் வெல்லம் என்ற விகிதத்தில் வெல்லத்தை சேர்த்துக் கொள்ள வேண்டும். அதனுடன் கால் டம்ளர் தண்ணீர் சேர்த்து கொதிக்க விட வேண்டும். வெல்லம் நன்கு கரைந்து தண்ணியுடன் கொதித்து வந்ததும் ஒருமுறை வடிகட்டி நம் அறுத்து வைத்திருக்கும் ரவையுடன் சேர்த்துக் கொள்ளலாம்.

உப்புமா பிடிக்காதவர்களுக்கு… அரிசி ரவை வைத்து பாரம்பரியமான உப்புமா கொழுக்கட்டை!

இப்பொழுது நாம் வறுத்து வைத்திருக்கும் முந்திரி மற்றும் பாதாமை ரவையுடன் கலந்து கை பொறுக்கும் சூட்டில் ரவையை உருண்டைகளாக பிடித்துக் கொள்ளலாம். இப்பொழுது சுவையான வெல்லம் கலந்த ரவா உருண்டை தயார். சர்க்கரை சாப்பிட விரும்பாதவர்களுக்கு இந்த வெல்லம் கலந்த ரவா உருண்டை பிடித்தமான இனிப்பு பலகாரமாக மாறிவிடும்.