ஒரு கப் ரவை போதும்… கேசரிக்கு பதிலாக வாயில் வைத்ததும் கரையும் அல்வா ரெசிபி!

உடனடியாக இனிப்பு சாப்பிட வேண்டும் என ஆசை வரும் நேரங்களில் நம் மனதில் முதலில் தோன்றுவது கேசரிதான். அதுவும் ரவை இருந்தால் போதும் கேசரியே அதிகமாக செய்யப்படும். அப்படி கேசரிக்கு பதிலாக ரவை வைத்து இன்று வாயில் வைத்த உடன் கரையும் இனிப்பான அல்வா செய்வதற்கான விளக்கத்தை இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

ஒரு அகலமான பாத்திரத்தில் ஒரு கப் வறுத்த ரவையை சேர்த்துக் கொள்ள வேண்டும். அதில் இரண்டு கப் அளவு தண்ணீர் சேர்த்துக் கொள்ளலாம். இதை குறைந்தது 2 மணி நேரம் அப்படியே ஊற வைக்க வேண்டும். இரண்டு மணி நேரம் கழித்து இந்த மாவை நன்கு சப்பாத்தி மாவு போல நன்கு பிசைந்து எடுத்துக்கொள்ள வேண்டும்.

அதன் பிறகு ஒரு வெள்ளை துணி வைத்து இந்த ரவையை வடிகட்டி அதன் பால் தனியாகவும் சக்கை தனியாகவும் பிரித்து எடுத்துக் கொள்ளலாம். இப்பொழுது நாம் வடித்து எடுத்து வைத்திருக்கும் ரவா பால் தனியாக அளந்து எடுத்துக் கொள்ள வேண்டும்.

இப்பொழுது இந்த ரவா பாலை ஒரு அகலமான கடாயின் சேர்த்துக் கொள்ளலாம். ஒரு கப் ரவா பாலிற்கு கால் கப் அளவு சர்க்கரை என்பது கணக்கு. அதன்படி நம் எடுத்து வைத்திருக்கும் பாலின் அளவிற்கு ஏற்ப சர்க்கரை கடாயில் சேர்த்து கலந்து கொள்ள வேண்டும்.

சர்க்கரை சேர்த்த பிறகு பாலை ஒரே கோணத்தில் ஐந்து நிமிடம் மிதமான தீயில் வைத்து கலந்து கொடுக்க வேண்டும். இப்பொழுது ரவாபால் நன்கு வந்து கண்ணாடி பதத்திற்கு வரும். இந்த நேரத்தில் ஒரு தேக்கரண்டி ஏலக்காய் தூள், ஒரு சிட்டிகை உப்பு சேர்த்து மீண்டும் நன்கு கலந்து கொள்ள வேண்டும்.

முட்டை வைத்து இப்படி கூட செய்யலாமா என்ன சொல்லும் அளவிற்கு அசத்தலான ஒரு சைடிஷ் ரெசிபி!

இப்பொழுது அடுப்பை மிதமான தீயில் வைத்துவிட்டு மற்றொரு பாத்திரத்தில் 5 தேக்கரண்டி சர்க்கரை, அரை டம்ளர் தண்ணீர் சேர்த்து சர்க்கரையை நன்கு கரைத்து எடுத்துக் கொள்ள வேண்டும். சர்க்கரை நன்கு கரைந்து கேரமல் பதத்திற்கு வரவேண்டும்.

இப்பொழுது இந்த கேரமலை தயாராகி வரும் அல்வாவுடன் சேர்த்து கலந்து கொள்ள வேண்டும். இதனுடன் ஐந்து தேக்கரண்டி நெய் சேர்த்து அல்வா பதத்திற்கு வரும் வரை நன்கு கலந்து கொள்ளலாம். கடாயில் ஒட்டாமல் அல்வா பதத்திற்கு வந்ததும் உடைத்த முந்திரி ஒரு கப் சேர்த்து கலந்து கொள்ளலாம். இப்பொழுது சுவையான வாயில் வைத்ததும் கரையும் ரவா அல்வா தயார்.