பள்ளி விடுமுறை நாட்களில் வீட்டில் உள்ள குழந்தைகளுக்கு எளிமையான பொருட்களை வைத்து சத்தான ஸ்னாக்ஸ் செய்து கொடுக்கும் பொழுது அவர்கள் விரும்பி சாப்பிடுவார்கள். அந்த வகையில் பலவிதமான சத்துக்கள் நிறைந்த ராகி மாவு வைத்து பணியாரம் செய்யலாம் வாங்க.
இந்த பணியாரம் செய்வதற்கு இரண்டு நன்கு பழுத்து கனிந்த வாழைப்பழங்கள் தேவை. இரண்டு வாழைப்பழம், அரை கப் நாட்டு சர்க்கரை அல்லது வெல்லம் அல்லது சர்க்கரையை ஒரு மிக்ஸி ஜாரில் சேர்ந்து நன்கு மையாக அரைத்து எடுத்துக் கொள்ள வேண்டும்.
அரைத்த இந்த கலவையை ஒரு அகலமான பாத்திரத்தில் மாற்றிக் கொள்ளலாம். வாழைப்பழம் மற்றும் சர்க்கரை சேர்த்து அரைக்கும் பொழுது இரண்டு ஏலக்காய் சேர்த்து அரைத்தால் வாசனையாக இருக்கும்.
இந்த கலவையுடன் ஒன்றரை தேக்கரண்டி ராகி மாவு, அரை தேக்கரண்டி ரவை, ஒரு தேக்கரண்டி அரிசி மாவு சேர்த்து நன்கு கலக்க வேண்டும். இந்த பணியாரம் செய்வதற்கு தண்ணீர் ஊற்றி மாவு தயார் செய்யாமல் பால் சேர்த்து மாவு தயார் செய்தால் மேலும் சிறப்பாக இருக்கும்.
பால் சேர்த்து அனைத்து மாவையும் வாழைப்பழத்துடன் சேர்த்து கலந்ததும் இறுதியாக அரை தேக்கரண்டி சமையல் சோடா சேர்த்து மூடி வைக்க வேண்டும். குறைந்தது பத்து முதல் 15 நிமிடங்கள் ஓரமாக வைத்துவிட வேண்டும்.
பாட்டி கை பக்குவத்தில் அருமையான மாலை நேர பலகாரம்! காரசாரமான தட்டை ரெசிபி இதோ!
அதன் பின் பணியார கல்லை அடுப்பில் வைத்து தாராளமாக நெய் அல்லது நல்லெண்ணெய் ஊற்றி சூடு படுத்த வேண்டும். நாம் கலந்து வைத்திருக்கும் மாவை மீண்டும் ஒரு முறை கலந்து கொடுத்து பணியாரக் கல்லில் ஊற்றிக் கொள்ளலாம். பொன்னிறமாக வரும் வரை இருபுறமும் உண்ணும் பின்னும் பொரித்தெடுக்க வேண்டும். இப்பொழுது சுவையான ராகி பணியாரம் தயார்.
இந்த பணியாரத்தில் வாழைப்பழம் சேர்த்திருப்பதால் சுவையாகவும் மிருதுவாகவும் இருக்கும். மேலும் இது குழந்தைகளுக்கு மிகப் பிடித்தமான ஸ்னாக்ஸ் வகையாக மாறிவிடும்..