இந்த ஒரு தொக்கு போதும்… இரண்டு வாரத்திற்கு லஞ்ச் பாக்ஸ் சூடான சாதம் , இட்லி தோசைக்கு தேவையான சட்னி தயார்!

பல நாள் விடுமுறைக்கு பின் பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் மீண்டும் திறந்துள்ளது. பள்ளி மற்றும் கல்லூரிக்கு செல்லும் குழந்தைகளுக்கு காலையே மதிய உணவு செய்து கொடுக்க வேண்டும். குழந்தைகளுக்கு பிடித்தமான முறையில் செய்ய வேண்டும் என்பது அனைவரின் விருப்பம். மேலும் அந்த உணவு சுவையானதாக மட்டுமல்லாமல் சத்து நிறைந்ததாகவும் இருக்க வேண்டும். அது மட்டுமல்லாமல் எளிமையாக செய்து முடிக்கக்கூடிய உணவாகவும் இருக்க வேண்டும். அந்த வகையில் இந்த ஒரு தொக்கு சூடான சாதம், இட்லி, தோசை என அனைத்திற்கும் மிகச் சிறப்பாக இருக்கும்.

இந்த புதினா தொக்கு செய்வதற்கு ஒரு கெட்டுப்போல புதிதான புதினாவை எடுத்துக் கொள்ள வேண்டும். அதை நன்கு சுத்தம் செய்து ஒரு மிக்ஸி ஜாரில் சேர்த்துக் கொள்ளலாம். அதனுடன் ஒரு சிறிய துண்டு இஞ்சி, காரத்திற்கு ஏற்ப ஏழு முதல் 10 பச்சை மிளகாய், ஒரு தேக்கரண்டி சீரகம் சேர்த்து மையாக அரைத்துக் கொள்ள வேண்டும். புதினா விழுதுவை அரைக்கும் பொழுது தேவைப்பட்டால் தண்ணீர் சேர்த்துக் கொள்ளலாம்.

அடுத்ததாக ஒரு அகலமான கடாயில் இரண்டு தேக்கரண்டி தேங்காய் எண்ணெய் சேர்த்து சூடானதும் நம் அரைத்து வைத்திருக்கும் விழுதுவை அதில் சேர்த்துக் கொள்ளலாம். இப்பொழுது தேவையான அளவு உப்பு சேர்த்து மிதமான தீயில் நன்கு கொதிக்க விட வேண்டும். தேங்காய் எண்ணெய் பிரிந்து வரும் வரையில் நன்கு கொதிக்க விட வேண்டும். இந்த தொக்கு இட்லி மற்றும் தோசைக்கு வைத்து சாப்பிடும் பொழுது அருமையாக இருக்கும்.

மேலும் இந்த புதினா தொக்கை அப்படியே ஓரமாக வைத்துவிட்டு மற்றொரு கடாயில் ஒரு தேக்கரண்டி எண்ணெய் சேர்த்து சூடானதும் கடுகு ஒரு தேக்கரண்டி, கடலைப்பருப்பு ஒரு தேக்கரண்டி, உளுத்தம் பருப்பு ஒரு தேக்கரண்டி, வேர்க்கடலை ஒரு தேக்கரண்டி, இரண்டு காய்ந்த வத்தல் சேர்த்து தாளித்துக் கொள்ள வேண்டும்.

அடுத்ததாக பொடியாக நறுக்கிய ஒரு பெரிய வெங்காயம், கைப்பிடி அளவு கறிவேப்பிலை சேர்த்து வதக்க வேண்டும். வெங்காயம் கண்ணாடி பதத்தில் வழங்கியதும் அரை தேக்கரண்டி பெருங்காயத்தூள், அரை தேக்கரண்டி உப்பு சேர்த்து கலந்து கொள்ளலாம்.

சமைக்கும் உணவை அமிர்தமாகவும், சுவையாகவும், சிறப்பாகவும் மாற்ற சில சமையல் கலை டிப்ஸ்!

இப்பொழுது சாதத்தை இந்த கலவையுடன் சேர்த்து நன்கு கலந்து கொள்ள வேண்டும். இறுதியாக நாம் தாளிப்பு கலவையையும் சாதத்துடன் சேர்த்து கலந்து கொள்ளலாம். சுவையான புதினா சாதம் தயார். ஒரே விதமான தொக்கு செய்து இட்லி தோசைக்கு வைத்து சாப்பிடலாம் அல்லது சாதம் அதிகமாக இருக்கும் பட்சத்தில் சாதத்துடன் சேர்த்து கிளறி புதினா சாதம் ஆகும் சாப்பிடலாம்.

மேலும் இந்த தொக்கு ஒரு வாரம் ஆனாலும் கெட்டுப் போகாது என்பதால் ஒரு கண்ணாடி பாத்திரத்தில் மாற்றி பல நாட்கள் வரை பதப்படுத்திக் கொள்ளலாம்.

Exit mobile version